8 September 2010
செய்திகள்

18 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான விவாதம் இன்று முற்பகல் இடம்பெறவுள்ளது. பிரதமர் டி எம் ஜெயரட்ன, 18 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தார். இதனையடுத்து இன்று நடைபெற உள்ள இவ் விவாதத்தின் போது வாக்கெடுப்பு, பெயர் குறிப்பிட்டு இடம்பெறவுள்ளது. 
8 September 2010
செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் 200 கிலோ கிராம் எடையுடைய தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். யுத்தம் நடைபெற்ற இறுதி நான்காண்டு காலப்பகுதியில் 
8 September 2010
செய்திகள்

தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுத் திட்டமொன்றை விரைவில் பரிந்துரை செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் பத்து கட்சிகள் அங்கம் வகிக்கின்ற போதிலும் ஈ.பி.டி.பி கட்சி மட்டுமே பாராளுமன்ற அங்கத்துவம் வகிக்கின்றது. 
3 June 2010
செய்திகள்

பிரபாகரனின் தாயார் பார்வதி இந்தியாவுக்கு போகவிரும்பவில்லை. எனினும், கனடா நாட்டுக்கு போகலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தற்போது வல்வெட்டித்துறை பிரிவுக்குட்பட்ட ஆஸ்பத்திரியில் பார்வதி அம்மையார் சிகிச்சை பெற்று வருகின்றார். இவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் சிவாஜிலிங்கம் மேலும் குரிப்பிட்டுள்ளார். தாம் கடந்த மேமாதம் 24ஆம் பார்வதியை திகதியன்று நேரடியாகச்சென்று பார்வையிட்டதாக தெரிவித்த சிவாஜிலிங்கம், மாவட்ட வைத்திய அதிகாரி மயிலேறும் பெருமாளிடம் பார்வதியம்மாளின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
3 June 2010
செய்திகள்

பொதுமக்களின் பணத்தைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என மாகாண,பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். தமது செயலாளரூடாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு இப்பணிப்புரையை ஜனாதிபதி விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதால் பொதுமக்களின் பணம் விரயமாக்கப்படுவதாகவும் அதனை அபிவிருத்திப் பணிகளுக்குச் செலவிடுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன், வெளிநாடுகளுக்கு அரசசெலவில் செல்லவிருந்த 27பேரின் விண்ணப்பங்களையும் அவர் நிராகரித்துள்ளார்
3 June 2010
செய்திகள்

அரசியல் தீர்வு விடயம் சம்பந்தமாகப் பேச்சு நடத்துவதற்கான எவ்வித அழைப்பும் ஜனாதிபதியிடமிருந்தோ அல்லது அரசாங்கத்திடமிருந்தோ இதுவரை கிடைக்கவில்லை. அழைப்பு விடுக்கப்பட்டால் கூட்டமைப்பு அதனை ஏற்று பேச்சுவார்த்தைக்குச் செல்லுமென கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். எனினும், அழைப்பு கிடைத்ததன் பின்னரே பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படும் விடயங்கள்பற்றி குறிப்பிட முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ_க்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையில் பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றமை உண்மையே. எனினும், அப்பேச்சுவார்த்தை உத்தியோகப்பற்றற்றதாகவே அமைந்ததுடன் எந்தவித தீர்மானமும் அதன்மூலம் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லையெனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
3 June 2010
செய்திகள்

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வாழும் சிங்கள மக்கள் மீண்டும் மடுப்பிரதேசத்தில் குடியேற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தகாலத்தில் விரட்டியடிக்கப்பட்ட 200 குடும்பங்கள் கடந்த 25வருடங்களாக புத்தளம் பிரதேசத்தில் இடம்பெயர்ந்து வாழ்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. உறவினர்களுடன் அல்லது வேறிடங்களில் தங்கியுள்ளவர்களை அடையாளம்கண்டு அவர்களை மீளவும் மடுப்பிரதேசத்தில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. வடக்கின் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, வன்னி இடம்பெயர் முகாம்களில் இன்னமும் 77000 பேர் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இடம்பெயர் மக்கள் இன்னும் ஒரு சில மாதங்களில் மீள்குடியேற்றப்படுவர் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
3 June 2010
செய்திகள்

பொதுமக்களுக்கு மிகவும் இலகுவானதும், துரிதமானதுமான சேவைகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் அரசசேவையை மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த மறுசீரமைப்பு தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை விரிவாக ஆராய்ந்து துரிதப்படுத்துமாறு அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் ரத்னசிறி விக்ரமநாயக்க தேசிய நிர்வாக மறுசீரமைப்பு சபைக்கு நேற்று 
3 June 2010
செய்திகள்

யாழ். மாவட்ட, காரைநகர் அரசஅதிபர் பணிமனையை பிரதேச செயலகமாக தரமுயர்த்துமாறு பொதுநிர்வாகத்துறை பிரதியமைச்சர் டிலான் பெரேராவிடம், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். 
3 June 2010
செய்திகள்

முல்லைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்த 360 குடும்பங்களைச் சேர்ந்த 930பேர் நேற்று கணுக்கேணி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மீள்குடியேற்றப்பட்டதாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக திட்டப்பணிப்பாளர் சிறீரங்கன் தெரிவித்துள்ளார். இவர்கள் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலுள்ள தமது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருந்ததாகவும் விசேட பஸ்கள்மூலம் இவர்கள் நேற்று சொந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களுக்குத் தேவையான நிவாரணப்பொருட்கள், தற்காலிக 
3 June 2010
செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற வேட்பாளரும் ஊடகவியலாளருமான சுசில் கிந்தெல்பிட்டிய மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான காலம் எட்டப்பட்டுள்ளது என்று கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விசாரணை அறிக்கை எதிர்வரும் 17ம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படல் வேண்டுமென்று நீதிவான் குமாரி அபேரத்ன தெரிவித்துள்ளார். அதுவரையில் ஊடகவியலாளர் கிந்தெல்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலிற்கு முன்னராக சுசில் கிந்தெல்பிட்டியவின் வாகனத்தில் ஆயுதம் இருந்ததாகவும், அவர் தன்னை அச்சுறுத்தியதாகவும் பெண்மணி ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து, சுசில் கிந்தெல்பிட்டிய பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.
2 June 2010
செய்திகள்

பொலிஸ் திணைக்களத்தில் ஊழல் இடம்பெறவில்லை எனவும் அவ்வாறு ஊழல் இடம்பெறுவதாக கூறுபவர்கள் ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும் என பிரதிப் பொலிஸ் மாஅதிபர் என்.கே..இளங்ககோன் இன்றுமாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது தெரிவித்துள்ளார். இதேவேளை, கடந்தவாரம் விளையாட்டுத்துறை அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க இலங்கையில் அதிகஊழல் இடம்பெறும் அரச நிறுவனங்களாக பொலிஸ் திணைக்களம், இலங்கை கிரிக்கட்சபை மற்றுக் கல்வி திணைக்களம் என்பவற்றை சுட்டிக்காட்டியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
2 June 2010
செய்திகள்

கட்டாரில் இடம்பெறும் உலக பொருளாதார மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்துகொண்டுள்ளார். இந்தவார இறுதியில் (மே 30,31)இல் இடம்பெற்ற இருநாள் மாநாட்டில் சுமார் 90நாடுகளைச் சேர்ந்த வர்த்தக, அரசியல் சிவில் சமூகத் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர். நிலையான பொருளாதார வளர்ச்சியைக் கட்டியெழுப்புதல், சர்வதேச பாதுகாப்பை அதிகரித்தல், சர்வதேச நாணய முறைமையை வலுப்படுத்துதல், சர்வதேச மட்ட ஒத்துழைப்புத் தொடர்பான இடைவெளியைக் குறைத்தல் என்பதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது. கட்டாரின் தலைநகர் டோகாவில் இடம்பெற்ற இம்மாநாட்டில் அங்குரார்ப்பண அமர்வில் ஜோர்தான் ராணி அல் அப்துல்லா நோர்வேயின் முடிக்குரிய இளவரசர் ஹைக்கோன், குவைத் பிரதமர் ஷேக் நஸீர், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையாளர் லூயிஸ் மொரினோ ஏகாம்போ ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தமாநாட்டில் மனித உரிமைகளும் பாதுகாப்பும் விரிவாக மீளக்கட்டியெழுப்பப்படுதல், பெறுமானங்களின் கட்டமைப்பை மீள வடிவமைத்தல் என்ற தலைப்பிலான குழுநிலை கலந்துரையாடலுக்கு திருமதி குமாரதுங்க தலைமை தாங்கினார். அரபு ஜனநாயக மன்றத்தின் 10 ஆவது மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவுக்கு கட்டார் அரசு அழைப்பு விடுத்திருந்தது.
2 June 2010
செய்திகள்

வடபகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்குத் தேவையான தண்ணீர் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கவென அமைக்கப்படவிருக்கும் பாரிய உத்தேச கால்வாய் திட்டத்திற்கு நிதியுதவி வழங்க உலகவங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வாவுக்கும் உலக வங்கியின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி கலாநிதி நெவ்கோ இஷிக்குமிடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போதே இந்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. வடபகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீர்த் தேவையை நிவர்த்திக்கவென வடக்குக்கான பாரிய கால்வாய் அபிவிருத்தி திட்டமொன்றை அரசாங்கம் முன்வைத்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் வவுனிக்குளம் நீர்த்தேக்கத்திற்கு இக்கால்வாய் ஊடாக நீர்கொண்டு செல்லப்படவுள்ளது.. இந்த அபிவிருத்தித்திட்டம் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் செயற்படுத்தப்படவுள்ளது. இதனடிப்படையில் இந்த கால்வாயை அமைப்பதற்கு தேவையான நிதியுதவியை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள உலக வங்கி இக்கால்வாய் அமைப்புக்கான சாத்தியக் கூற்று அறிக்கையைத் தயாரிக்கத் தேவையான நிதியுதவி வழங்கவும் உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
2 June 2010
செய்திகள்

சீபா உடன்படிக்கை தொடர்பில் எதிர்வரும் வாரமளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளது. இந்த வருட இறுதியில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவிருப்பதாகவும் வர்த்தகத்துறை பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார். தற்போதைய காலகட்டத்தில் சீபா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால், அது இலங்கைக்கு சாதகமாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் பிரதானமாக இலங்கையிலுள்ள வர்த்தகர்களுடனும், அனைத்துப் பங்குதாரர்களுடனும் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் நியோமல் பெரேரா குறிப்பிட்டுள்ளார். வர்த்தக சமூகம், முதலீட்டாளர்கள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதியாளர்கள் ஆகியோருக்கு சிறந்ததொரு சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
25 May 2010
செய்திகள்
இலங்கையில் நிறைவேற்று அதிகார பிரதமர் முறைமை உருவாக்கப்பட வேண்டுமென இடதுசாரி கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, ஜனநாயக இடதுசாரி 
25 May 2010
செய்திகள்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை யாழ்ப்பாணம் தாராகுளம் குடியேற்றத்திட்ட மக்கள் நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ்.அமைச்சுப் பணிமனையில் நேற்றுகாலை இடம்பெற்ற மேற்படி சந்திப்பின்போது தமது கோரிக்கைகளையும், பிரச்சினைகளையும் எடுத்துரைத்த அக்குடியேற்றத்திட்ட மக்கள் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக 18வருடங்கள் தாம் அங்கு வசிக்காத நிலையில் வீட்டு உறுதிகள் இழந்த குடியேற்றத்திட்ட உரிமையாளர்களுக்கு வீட்டு உறுதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும், சேதமடைந்துள்ள தமது வீடுகளை புனரமைப்பதற்கும் உரிய ஏற்பாடுகளை செய்து தருமாறு கேட்டுக்கொண்டிருந்தனர். இவ்விடயத்தில் கூடிய கவனம்செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். பிரதேச செயலாளர் மற்றும் வீடமைப்பு அதிகாரசபையின் யாழ். பிராந்திய உதவிப் பொதுமுகாமையாளர் ஆகியோருடன் தொடர்புகொண்டு விபரங்களை கேட்டறிந்து கொண்டதுடன், தாராகுளம் குடியேற்றத்திட்ட மக்களின் கோரிக்கைகள் விரைவில் தீர்த்துவைக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
25 May 2010
செய்திகள்
இலங்கைக்கான விசா அனுமதியினை தளர்த்துவதற்கு மலேசியா தீர்மானம் எடுத்துள்ளது. இந்நிலையில், இலங்கையிலிருந்து மலேசியா ஊடாக பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் விசா அனுமதியின்றி பயணத்தை மேற்கொள்ள முடியும் என மலேசியாவின் பிரதி பிரதமர் ரன் சிறீ முஹ்யிட்டின் யச்சின் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலைமாதம் முதலாம் திகதிமுதல் இதனை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், இலங்கைக்கு மாத்திரமின்றி பாகிஸ்தான், இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்குமான விசா நடைமுறையில் தளர்வு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் மலேசியாவின் பிரதி பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மலேசியாவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த விசா நடைமுறையில் தளர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
25 May 2010
செய்திகள்
இரண்டாவது நீதிமன்ற விசாரணைகளை ரத்துச்செய்யமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா நேற்றையதினம் மனுதாக்கல் செய்துள்ளார். பொன்சேகாவின் சட்டதரணியால் முன்வைக்கப்பட்டிருந்த இம்மனுவில், இரண்டாவது நீதிமன்ற விசாரணைகளை ரத்துச்செய்யமாறும், தன்னை விரைவில் விடுதலை செய்யுமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்பான இரண்டாவது இராணுவ நீதிமன்றம் விசாரணை நேற்றையதினம் இடம்பெற்றபோதே இம்மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விசாரணை எதிர்வரும் ஜூன்மாதம் 3ம் திகதி; வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
25 May 2010
செய்திகள்
இந்தியாவில் ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ள புலிகள் இயக்கத்தை, சட்டவிரோத அமைப்பாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் இது தொடர்பான அவசர வர்த்தமானி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை இணைச்செயலாளர் தர்மேந்திர சர்மா சார்பில் நாடுமுழுவதும் முக்கிய பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டுள்ள அவரச வர்த்தமானி அறிவிப்பில் மேலும் 