மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க

விஞ்ஞான செய்திகள்

f_applewindowm_b66f8cd.jpg இணையத்தில் பதிவுகளை வாசித்து கொண்டிருக்கும் போது பதிவர் டாக்டர். புருனோ அவர்களின் பயணங்கள் பிளாக்கில் மொபைல் போனில் அவர் பிளாக்கை பார்ப்பது பற்றி எழுதியிருந்த இடுகை கண்ணில் பட்டது. முன்பு என்னுடைய சோனி எரிக்சன் மொபைலில் தமிழ் தளங்களை பார்ப்பதில் எழுத்துரு பிரச்சினை இருந்தது. ஆர்வம் இல்லாததால் அத்துடன் விட்டு விட்டேன். இப்போது மீண்டும் முயன்ற போது அதே எழுத்துரு பிரச்சினை. தமிழ் இணைய தளங்களின் தமிழ் எழுத்துகள் சரியாக தெரியவில்லை. புருனோ அவர்களின் இடுகையின் பின்னூட்டத்திலேயே பதிவர் மின்னுது மின்னல் இந்த பிரச்சினையை தீர்க்க ஒரு உதவி லிங்க் தந்து இருந்தார். அதன்படி உபயோகித்து பார்த்தேன். தமிழ் எழுத்துரு பிரச்சினை தீர்ந்து விட்டது. மேலும் இது போன்ற பிரச்சினை உள்ள பலரை சென்றடையட்டும் என்று இங்கு பகிர்கிறேன். மொபைலில் தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை

நெஞ்சு நோவா..?அதை சாதாரணமாக எடுக்காதீர்கள்..!!

விஞ்ஞான செய்திகள்

நெஞ்சு நோ அல்லது நெஞ்சு வலி (Chest pain or angina) தொடர்ச்சியாக அல்லது விட்டுவிட்டு அடிக்கடி ஏற்படுகிறதா நிச்சயம் நீங்கள் அவதானமாக இருக்க வேண்டியவர் என்கிறது அமெரிக்காவில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வு.பல நெஞ்சு நோக்கள் இதய நோய்க்கான அறிகுறிகள் என்று குறிப்பிடும் மேற்படி ஆய்வு புகைப்பிடிப்பவர்கள் மற்றும் மன அழுத்தத்தோடு வாழ்பவர்கள் மத்தியில் இதன் தாக்கம் அதிகம் என்றும் கூறுகின்றனர்.அதுமட்டுமன்றி இருதய சத்திரசிகிச்சை மேற்கொண்டவர்கள் மத்தியிலும் இவ்வாறான நெஞ்சு நோக்கள் இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர்.எனவே நெஞ்சு நோ என்றால் சாதாரணம் என்று எண்ணிடலாகாது. குறிப்பாக புகைப்பிடிப்பவர்கள் மற்றும் குடும்ப அல்லது உறவுகள் அல்லது தொழில் பிரச்சனைகளால் அல்லது பலவேறு காரணங்களால் மன அழுத்தங்களோடு வாழ்பவர்கள் இதில் அதிக கவனமெடுக்க வேண்டும்..!நெஞ்சு நோ இருப்பின் உடனடி வைத்திய ஆலோசனைகளைப் பெறுவது நன்று.

குறைந்தது 6-மணி நேரங்கள் நித்திரை செய்கிறீர்களா,இல்லை என்றால் இதை வாசியுங்கள்

விஞ்ஞான செய்திகள்

ஒரு வளர்ந்த மனிதன் குறைந்தது 6 மணித்தியாலங்கள் (குழந்தைகள் சிறுவர்கள் 8 தொடக்கம் 10 மணித்தியாலங்கள்) தினமும் நித்திரை செய்ய வேண்டுமாம். அதற்குக் குறைவாக நித்திரை கொள்பவர்களில் அவர்களின் நாடிகள் தடிப்படைந்து பின்னர் குருதிச் சுற்றோட்டம் மற்றும் இதய சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
போதிய நித்திரையின்றி வாழ்பவர்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் 3 இல் ஒருவருக்கு நாடி தடிப்படையும் நிலை அவதானிக்கப்பட்டுள்ளது. இதே போதிய நித்திரை செய்பவர்களில் 10 இல் ஒருவருக்கே அவதானிக்கப்பட்டுள்ளது.போதிய அளவு நித்திரை இன்மைக்கு மன அழுத்தமும் அதனால் சுரக்கப்படும் (cortisol) எனும் ஓமோனும் நித்திரையின் அளவைக் குறைத்து நாடிகளில் கல்சியம் படிவதை அதிகரித்து நாடியை தடிப்படையச் செய்வதாக சொல்லப்படுகிறது.எதுஎப்படி இருப்பினும் இவ்வாய்வை மட்டும் வைத்துக் கொண்டு நாடிகளில், இதயத்தில் ஏற்படும் நீண்ட காலப் பாதிப்புக்களுக்கு விளங்கம் தரமுடியாத விட்டாலும் போதிய நித்திரை என்பது குருதிச் சுற்றோட்டம் மற்றும் இதயத்தொழிற்பாட்டை சீராக்க உதவுகின்றன என்பதை ஆணித்தரமாகக் கூற முடியும் என்று ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

பூமியிலிருந்து 63 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள கோளின் வளிமண்டலத்தில் நீராவி

விஞ்ஞான செய்திகள்

earth_water017.jpgநாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு பூமியிலிருந்து 63 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள கோளொன்றின் வளிமண்டலத்தில் நீராவி இருப்பதற்கான சான்று தமக்குக் கிடைத்துள்ளதாக நாசா விண்வெளி முகவர் நிலைய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த ஆய்வின் முடிவுகள் “நேச்சர்” விஞ்ஞான சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன. “சூடான வியாழன்” என்றழைக்கப்படும் மேற்படி கோளின் மேற்பரப்பின் வெப்பநிலை 900 பாகை செல்சியஸாகும். மேலும் நாசா விண்வெளி முகவர் நிலைய விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட பிறிதொரு ஆய்வின் பிரகாரம், இந்தக் கோளின் மேற்பரப்பில் காபனீரொட்சைட் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. “சூடான வியாழன்” என செல்லமாக அழைக்கப்படும் “எச்.டி 189733 பி’ என்ற இக்கிரகமானது எமது சூரியமண்டலத்திலுள்ள வியாழக் கிரகத்தின் வளிமண்டலத்தை ஒத்த தன்மையைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. “சூடான வியாழன்” கிரகத்தின் வெப்பமான மேற்பரப்பிலிருந்து வெளிப்பட்ட வெப்பக் கதிர்ப்பு காரணமாக, அக்கிரகத்தின் வளிமண்டலத்தில் கனமான காற்றோட்டம் நிலவுவதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பாலில் உருவாகும் பாக்டீரியா

விஞ்ஞான செய்திகள்

fresh_milk014.jpgபால் உடல் நலத்திற்கு மிகவும் ஏற்றது.பொதுவாக பாலை காய்ச்சி குடிப்பவர்கள் ஒருபுறம் என்றால்,வேறு சிலர் பச்சைப் பாலை (கறந்த பால்) அப்படியே குடிப்பார்கள்.ஆனால்,பச்சைப் பாலில் (raw milk) பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.மிகக் குறைந்த வெப்பநிலையிலும், குளிர்வூட்டப்பட்ட போதிலும் இந்த பாக்டீரியா வளரக் கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இஸ்ரேல் நாட்டின் ஹைஃபா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மால்கா ஹால்பெர்ன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து பச்சைப் பாலில் பாக்டீரிய இருப்பதை கண்டறிந்துள்ளனர். இந்தவகை பாக்டீரியாவை முன்னர் ஆய்வு செய்தவர்கள் வெளியிடவில்லை என்றும் டாக்டர் மால்கா குறிப்பிட்டுள்ளார்.கிறிசியோபாக்டீரியம் ஒரானிமென்ஸ் என்ற அந்த நுண்ணுயிரியானது குளிர்ந்த வெப்பநிலையிலும் கூட பாலில் பரவக்கூடியதாகத் தெரிய வந்துள்ளது. இதன்மூலம் பாலைக் காய்ச்சாமல் குடிப்பதால் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று தெரிய வந்துள்ளது.மாட்டில் இருந்து கறக்கப்படும் பாலானது பல்வேறு காரணங்களால் கெட்டுப் போகக்கூடும் என்பதால்,பாலை குளிரூட்டி பதப்படுத்துதலை பொதுவாக மேற்கொள்வார்கள். ஆனால்,குளிரூட்டப்பட்டாலும்,கிறிசியோபாக்டீரியம் காரணமாக பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று தற்போது தெரிய வந்துள்ளது.

இளமையில் வறுமை கொடுமை மட்டுமன்றி மூளையின் செயற்திறனையும் பாதிக்கிறது

விஞ்ஞான செய்திகள்

brain016.jpgஅமெரிக்காவில் வசதி படைத்த சூழலில் வளரும் மற்றும் வறுமைச் சூழலில் வளரும் குழந்தைகளிடத்தே நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து வறுமைச் சூழலில் நிலவும் அழுத்தங்கள் மத்தியில் வளரும் குழந்தைகளின் மூளைச் செயற்பாடு வசதி படைத்த சூழலில் வளரும் குழந்தைகளின் மூளைச் செயற்பாட்டினின்றும் வேறுபட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர்.வறுமைச் சூழலில் வளரும் பிள்ளைகளின் மூளையில் காணப்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தேடும் பகுதியில் மின் கணத்தாக்கச் செயற்பாடுகளில் வேறுபாடு அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மூளையின் prefrontal cortex பகுதியில் செயற்பாடு மந்தமாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக அவர்கள் பரிசோதனையின் போது சில வகை பார்வைத் தூண்டல்களை இனங்காணவோ அல்லது அவற்றைப் பெற்று கொண்டதன் பின்னான செயற்பாட்டைக் காட்டவோ இல்லை என்றும் அதுமட்டுமன்றி (prefrontal cortex) பகுதியால் வழங்கப்படும் மேலதிக உத்வேகத்தன்மை குறைவாகக் காணப்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கருவுற்ற பெண்கள் காபி அதிகம் அருந்த வேண்டாம்!

விஞ்ஞான செய்திகள்

கர்ப்பமாக உள்ள பெண்கள் நாளொன்றுக்கு இரண்டு சிறிய கோப்பை அளவுக்கு மேல் காபி அருந்த வேண்டாம் என்றும் அதிகமாக காபி அருந்தினால் பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாக பிறக்கும் என்றும் பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.நாளொன்றுக்கு 200 மில்லி கிராமுக்கு அதிகமாக காபி அருந்தும் கருத்தரித்த பெண்கள், எடை குறைவான குழந்தைகளை பெற்றெடுப்பதாக தெரிவித்துள்ளதோடு, பின்னால் இந்த குழந்தைகள் வளரும்போது சிக்கல்கள் ஏற்படுவதாகவும், சில குழந்தைகள் விரைவில் இறந்து போவதாகவும் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.சுமார் 2,500 கருவுற்ற பெண்களிடம் கேள்வித்தாள்கள் கொடுத்து பதிலளிக்குமாறு செய்து ஆய்வு மேற்கொண்டனர். அதாவது குறிப்பாக இதில் அவர்கள் நாளொன்றுக்கு அருந்தும் காபியின் அளவு பற்றி விவரம் கோரப்பட்டது.
இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ், லெய்செஸ்டர் பல்கலைக் கழகங்கள் இணைந்து நடத்திய இந்த ஆய்வின் விவரங்கள் “பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னலில்” வெளியிடப்படவுள்ளது.

குண்டானால் கருச்சிதைவு ஏற்படும்

விஞ்ஞான செய்திகள்

மாறி வரும் உணவு பழக்க வழக்கத்தினால் உடல் பருமன் பிரச்சினை என்பது தற்போது அதிகரித்து வருகிறது. ஆண், பெண் வித்தியாசம் இன்றி அனைவருக்கும் இருக்கும் இந்த உடல் பருமன் பிரச்சினை ஓபிசிடி என்று அழைக்கப்படுகிறது.இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பெண்களுக்கு உடல் பருமனால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பிரிவு விஞ்ஞானி டாக்டர் இன்னா லாண்டர்ஸ் தலைமையில் நடத்ததப்பட்ட ஆய்வில், உடம்பு குண்டாக இருக்கும் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பது தெரிய வந்தது.

இந்தியாவின் சந்திரயான் விண்கலத்தின் வெப்பநிலை உயர்வு

விஞ்ஞான செய்திகள்

சந்திரனை ஆராய இந்தியா அனுப்பிய முதல் ஆளில்லா விண்கலமான சந்திரயான் 1 கலத்தில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. கலனுக்குள் அதிகரிக்கும் வெப்பநிலையைக் குறைக்க விண்வெளி விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சந்திரனை பற்றிய ஆராய்சிகளை மேற்கொள்வதற்காக கடந்த ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி இந்தியா சந்திரயான் 1 விண்கலனைவிண்ணில் ஏவியது. இந்தக் கலன் திட்டமிட்டபடி சந்திரனின் வட்டப் பாதையை இம்மாத துவக்கத்தில் அடைந்தது. பின்னர் சந்திரனின் தரைப் பகுதி மீது சில உபகரணங்கள் அடங்கிய துணைக் கலனையும் வெற்றிகரமாக செலுத்தியது. அத்துடன் சந்திரனின் மேற் பரப்பையும், பூமியையும் படம் பிடித்து அனுப்பியுள்ளது.

புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி

விஞ்ஞான செய்திகள்

tomato001.jpgபுற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளித்து, வாழ் நாளை அதிகரிக்கும் கருஞ் சிவப்பு தக்காளியை விஞ் ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். தாவரங்கள், அவற்றில் உள்ள ரசாயனங்கள், நோய் எதிர்ப்பு குணங்கள் குறித்து ஆராய, புளோரா என்ற அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய கமிஷன் துவக்கியுள்ள இந்த புளோரா திட்டத்தின் கீழ், ஐரோப்பிய மையங்கள் மற்றும் பிரிட்டனர், நார் விச்சில் உள்ள ஜான் இன் னஸ் மையம் இணைந்து, கருஞ்சிவப்பு தக்காளியை உருவாக்கி உள்ளனர். தோட்டத்தில் வளர்க்கப்படும் செடியின் இரண்டு வகை ஜீன்களை பிரித்தெடுத்து, கருஞ்சிவப்பு தக் காளி உருவாக்கப்பட்டுள்ளது.”பி53′ என்ற ஜீனில் குறைபாடுகள் இருந்தால், புற்று நோய் மற்றும் இதய நோய் ஏற்படும். இந்த குறைபாடு உள்ள எலிகளிடம் பரிசோதித்ததில், கருஞ்சிவப்பு தக்காளி புற்று நோய் மற்றும் இதய நோய்களை எதிர்க்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குறைபாடுகள் உள்ள எலிகள் மூன்று விதமாக பிரிக்கப்பட்டன. ஒரு பிரிவு எலிகளுக்கு சாதாரண உணவு அளிக்கப்பட்டது. இன்னொரு பிரிவு எலிகளுக்கு 10 சதவீதம் சிவப்பு நிற தக்காளி பவுடர் உணவாக அளிக்கப்பட்டது. மூன்றாவது பிரிவு எலிகளுக்கு 10 சதவீதம் கருஞ்சிவப்பு தக்காளி பவுடர் அளிக்கப்பட்டது.

விலங்கு இழையங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது முழுமையான செயற்கை இருதயம்

விஞ்ஞான செய்திகள்

மனிதனின் சொந்த இருதயத்தையொத்த செயற்பாடுகளைக் கொண்ட செயற்கை இருதயமொன்றை பிரான்ஸ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இருதய இயக்கம் பாதிக்கப்பட்ட, இருதய மாற்று சிகிச்சையொன்று சாத்தியமற்ற நோயாளிகளுக்கு இந்த செயற்கை இருதயமானது வரப்பிரசாதமாக அமையும் என மேற்படி ஆய்வுக்குத் தலைமை தாங்கிய பிரான்ஸின் பிரபல இருதய சத்திர சிகிச்சை நிபுணரான மருத்துவ கலாநிதி அலெய்ன் கார்பென்ரியர் தெரிவித்தார். கடந்த 15 வருடகால ஆராய்ச்சியின் பயனாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை இருதயம் தொடர்பாக விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் மாநாடு பாரிஸில் இடம்பெற்றது. “”உயிரியல் இரசாயன இழையங்களைப் பயன்படுத்தி முழுமையான செயற்கை இருதயம் உருவாக்கப்படுவது உலகில் இதுவே முதற்றடவையாகும்” என மேற்படி இருதயத்தை உருவாக்கியுள்ள உயிரியல் மருத்துவக் கம்பனியான “கார்மட்’ இன் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் பற்றிக் கொலம்பியர் தெரிவித்தார்.

மைரோ சொப்ட் நிறுவனத்தின் புதிய விண்டோவான விண்டோஸ் 7 அடுத்த வருடம் அறிமுகம்

விஞ்ஞான செய்திகள்

மைக்ரோசொட் நிறுவனம் புதிய விண்டோவை அடுத்த வருடம் அறிமுகப்படுத்தவுள்ளது. மைரோ சொப்ட் நிறுவனத்தின் புதிய விண்டோவான விண்டோஸ் 7 னை அடுத்த வருட முற்பகுதியில் கணணிகளை பயன் படுத்துவோர் பயன்படுத்த முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்த்ராயன் விண்கலத்துடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி

விஞ்ஞான செய்திகள்

pslv-launch250_22102008.jpgநிலவுக்கு சந்த்ராயன்-1 விண்கலத்தை ஏந்திக் கொண்டு இன்று காலை வெற்றிகரமாக விண்ணி்ல் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-2 ராக்கெட். ஏவப்பட்ட 1,102வது வினாடியில் சந்த்ராயன் விண்கலத்தை அதற்கு உரிய பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது பிஎஸ்எல்வி. சந்த்ராயன் விண்கலம் சிறப்பாக இயங்குவதாக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். இஸ்ரோவின் அனைத்து தரைக்கட்டுப்பாட்டு மையங்களும் அதன் சிக்னல்களை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் நிலாவை அடையும் இந்தியாவின் பயணத்தில் முதல் அடி மிக வெற்றிகரமாக எடுத்து வைக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளித் தளத்திலிருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது.இப்போது பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது சந்த்ராயன். நீள்வட்டப் பாதை என்பதால் இந்த விண்கலத்துக்கும் பூமியிலிருந்து இடையிலான குறைந்தபட்ச தூரம் (perigee) 250 கி.மீயாகவும் அதிகபட்ச தூரம் (apogee) 23,000 கிமீ ஆகவும் இருக்கும்.

வேற்றுக்கிரக வாசிகளுக்கு பூமியில் இருந்து வலைவீச்சு.

விஞ்ஞான செய்திகள்

சுமார் 20 ஒளியாண்டுகளுக்கு அப்பால் மதிநுட்ப உயிரினங்கள் இருக்கலாம் என்று கருதத்தக்க கோள் ஒன்றை நோக்கி பூமியில் இருந்து தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்தகவல் குறித்த கோளை 2029 ஆண்டு வாக்கில் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு அங்கு மதிநுட்ப உயிரினங்கள் இருக்கும் பட்சத்தில் மனிதன் பூமியில் இருந்து அனுப்பியுள்ள தகவலுக்கு பதில் தகவல் கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பதில் தகவல் கிடைக்க 40 ஆண்டுகள் காலம் காத்திருக்க வேண்டி இருக்கும். ூமியில் இருந்து அனுப்பப்பட்டுள்ள தகவலில் சுமார் 501 புகைப்படங்கள், வரைபடங்கள் மற்றும் எழுத்துரு தகவல்கள் உள்ளடங்கி இருக்கின்றன. இத்தகவல் கொத்து உக்கிரைனில் உள்ள பழைய சோவியத் கால உபகரணங்களைப் (giant radio-telescope) பயன்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பூமிக்கு ஆபத்தா? வானத்தில் தோன்றிய 40 `அதிசய’ ஒளி- விஞ்ஞானிகள் அதிர்ச்சி

விஞ்ஞான செய்திகள்

வானில் அவ்வப்போது இயற்கைக்கு மாறாக பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் இதை கண்காணித்து வருகின்றனர்.கடந்த 11 நாட்களுக்கு முன்பு வானில் 40 வகையான புதிய வெளிச்சம் தோன்றியுள்ளது. இதை பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்தனர்.இந்த வெளிச்சம் (ஒளி) மிகப்பெரிய சக்தி உடையதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். சுமார் 10 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு இத்தகைய ஒளி தோன்றியிருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.ஜெர்மனி முனிஞ்ச்-ல் உள்ள இ.எஸ்.ஓ. என்ற வான ஆராய்ச்சி அமைப்பு இதுபற்றி ஆய்வு செய்து வருகிறது.இந்த 40 வகையான ஒளியும் பூமியில் விழுந்தால் ஒரே நாளில் ஒட்டு மொத்த உலகமும் அழிய வாய்ப்பு உள்ளது என்கின்றனர் அந்த விஞ்ஞானிகள்.11 நாட்களாக இந்த ஒளி அவ்வப்போது தோன்றி மறைகிறதாம். இதன்மூலம் பூமியில் பெரிய விளைவுகள் ஏற்படுமோ என்ற புதிய அச்சம் உருவாகி உள்ளது.

காய்கறி மட்டுமே சாப்பிட்டால் மூளை என்னாகும்?

விஞ்ஞான செய்திகள்

“முழு நேரமும் சைவ உணவுகளை சாப்பிடுவோருக்கு விட்டமின் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், அவர்கள் மூளை சுருங்குவதற்கான வாய்ப்பு உள்ளது”என, ஆக்ஸ்போர்டு பல்கலை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலை விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாவது:”பி12″ விட்டமின் சத்து உடலுக்கு மிகவும் முக்கியம். இறைச்சி, மீன், பால் போன்றவற்றில் இந்த விட்டமின் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் அனைத்து காய்கறிகளிலும் போதிய அளவில் விட்டமின் இருப்பதாக கூற முடியாது. ஒரு சில சைவ உணவுகளில் மட்டுமே போதிய விட்டமின் சத்துக்கள் உள்ளன. “பி12″ விட்டமின் பற்றாக்குறையால் ரத்த சோகை, அழற்சி ஆகியவை ஏற்படுகின்றன. இதனால், முழு நேரமும் சைவ உணவுகளை சாப்பிடுவோருக்கு மூளை சுருக்கம் ஏற்படுகிறது. 61 முதல் 87 வயதுக்கு உட்பட்ட 107 பேரிடம் நினைவு, உளவியல் பரிசோதனை செய்யப்பட்டதன் மூலம், அவர்களது மூளையை “ஸ்கேன்” செய்ததன் மூலமும் இந்த விவரம் தெரியவந்தது.இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது

அசைவ உணவை தவிர்ப்பது ஆபத்து

விஞ்ஞான செய்திகள்

speise_194.gif“சைவ உணவே சிறந்தது, அசைவ உணவை தவிர்ப்பது நல்லது” என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வு முடிவில் மாறுபட்ட கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.வெறும் சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்களுக்கு சில வைட்டமின் குறைபாடு ஏற்படுகிறது. மூளை சுருங்கும் பாதிப்பும் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று அவர்கள் கூறியுள்ளனர். “பி12″ வைட்டமின் சத்து பால், இறைச்சி, மீன், ஈரல் போன்றவற்றில் அதிகமாக உள்ளது.இவற்றை சாப்பிடாத வர்களுக்கு “பி12″ குறைபாடு ஏற்பட்டு மூளை திறன், உடல் திறன், ஞாபக சக்தி குறைபாடு போன்றவை ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.குடிப்பழக்கம் உள்ளவர் களும், இந்த பாதிப்புகள் வரும் வாய்ப்பு அதிகம். அசைவ உணவும் அவசியம் என்பதற்காக கொழுப்பு சத்துஉணவை அதிகம் சாப்பிட வேண்டும் என்பதில்லை.

புவி வெப்பத்தால் புயலின் வேகம் அதிகமாகிறது!

விஞ்ஞான செய்திகள்

புவி வெப்பம் அடைவதால் ஏற்படும் மாற்றங்களை உலகம் உணரத் தொடங்கிவிட்டது. அதில் ஒன்றுதான் சூறாவளிக் காற்று அசுர வேகத்தைப் பெறுவது. புவி வெப்பம் அடைவதால் கடலிலும் வெப்பம் அதிகரிக்கிறது. அப்படி அதிகரிக்கும் வெப்பமானது, பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடல்பரப்பில் அதி வேகம் கொண்ட புயலை உருவாக்குகிறது. அதனால்தான் சமீபத்திய காலங்களில் புயல், சூறாவளி ஆகியவற்றால் ஏற்படும் சேதங்களை அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளால்கூடத் தாங்க முடியாமல் போகிறது. இதுவரை இருந்திராத வகையில், புயல் சீற்றத்தின்போது உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டு வருகிறது. ஒருவாரத்தில் பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாள்களிலேயே கொட்டித் தீர்த்துவிடுகிறது. ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும்கூட ஆறுகள் தங்களுடைய நிலையை விட்டுப் பிறழ்ந்து ஊருக்குள் பாயத் தொடங்கிவிட்டனவோ என்று அஞ்சும் வண்ணம் வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. சீனா, பிலிப்பின்ஸ் போன்ற நாடுகளில் இதே நிலைமைதான். இயற்கையை மனிதன் சீரழிப்பதால் புவி வெப்பம் அடைகிறது. அப்படி அதிகரிக்கும் வெப்பம் பூமத்திய ரேகையை ஒட்டிய நாடுகளின் வெப்பத்தில் அப்பட்டமாகப் பிரதிபலிக்கிறது. அங்கெல்லாம் வழக்கத்தைவிட ஒரு டிகிரி செல்சியஸ் கூடுதலாகவே வெப்பம் நிலவ ஆரம்பித்திருக்கிறது. இதனால் கடலில் உருவாகும் புயல் வேகம் பெறுகிறது. அந்த வேகம் அது கரையைக் கடக்கும்போது தெரிகிறது.

உடற்பூச்சு வாசனைத் திரவியங்களால் சிசுக்களுக்கு ஆபத்து.

விஞ்ஞான செய்திகள்

00093.gifகருப்பையில் குழந்தைகளை சுமக்கும் குறிப்பாக ஆண் குழந்தைகளை சுமக்கும் பெண்கள் உடற்பூச்சு வாசனைத் திரவியங்களை (perfumes and scented creams) பாவிப்பதால் ஆண் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் மலட்டுத்தன்மை மற்றும் விதை சார்ந்த புற்றுநோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக எலிகளைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.வாசனைத் திரவியங்களில் இருக்கும் சில இரசாயனங்கள் இந்த விளைவுக்கு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுவதால் மனிதப் பெண்களும் இவற்றை கர்ப்ப காலத்தின் போது பாவிப்பதை தவிர்ப்பது நல்லது என்று சிபார்சு செய்யப்பட்டுள்ளது.எனினும் இவ்வாய்வு மனிதர்களை அடிப்படையாக வைத்து இன்னும் முழுமையுறச் செய்யப்படவில்லை..!

90 நிமிட பயணம்; டிரைவர்களின் ஆண்மைக்கு ஆபத்து-அதிர்ச்சி தகவல்

விஞ்ஞான செய்திகள்

என்று ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வில் தெரிவிக் கப்பட்டுள்ளபஸ், கார், வேன், ஆட்டோ போன்றவற்றின் சீட்டுகளை அதிக நேரம் பயன்படுத்தும் டிரைவர்கள் மற்றும் பயணிகளுக்கு ஆண்மைத்தன்மை பாதிக்கப்படும். வாகனங்களின் சீட்டு களில் 90 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து அமர்ந் திருப்பவர்களுக்கு ஆண்மைத்தன்மை மிக வேகமாக குறைந்து விடும் என அந்த ஆராய்ச்சி எச்சரித்துள்ளது.நல்ல ஆரோக்கியமான விந்துக்களை உருவாக்குவ தற்கு 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை தேவைப்படுகிறது.இதில் சிறிதளவு ஏற்ற இறக்கம் ஏற்படுமானாலும் விந்து உற்பத்தி திறனை பாதிக்கும் என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. எனவே, டிரைவர்களும், பயணிகளும் 1 மணி நேர பயணத்திற்கு ஒரு முறை இருக்கையை விட்டு எழுந்து பின் அமர்வது நல்லது.