பிஜியிலிருந்து கடந்த ஆண்டில் மாத்திரம் 56வெளிநாட்டவர்கள் நாடு கடத்தல்

குறுஞ்செய்தி, செய்திகள்

பிஜியிலிருந்து கடந்த 2009ம் ஆண்டில் மாத்திரம் இலங்கையர்கள் உள்ளிட்ட 56வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அனுமதியின்றி தங்கியிருந்த காரணத்தைக் கொண்டே இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சட்டவிரோதமாத பிஜிக்குள் தங்கியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிதைந்து காணப்படும் ஜனநாயகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதே தமது கட்சியின் நோக்கம்-மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம்

குறுஞ்செய்தி, செய்திகள்

சிதைந்து காணப்படும் ஜனநாயகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதே தமது கட்சியின் நோக்கமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள 600 குடும்பங்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் கையளிப்பு

குறுஞ்செய்தி, செய்திகள்

கிளிநொச்சி பிரதேசத்தில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள 600 குடும்பங்களுக்கு இன்று துவிச்சக்கர வண்டிகள் கையளிக்கப்படவுள்ளன. கிளிநொச்சியில் மீளக்குடியமர்த்தப் பட்டவர்களின் போக்குவரத்து வசதிகளை இலகுபடுத்தும் நோக்குடனே துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

கொழும்பு கிராண்ட்பாஸில் வைத்து இளைஞரைக் காணவில்லையென முறைப்பாடு

குறுஞ்செய்தி, செய்திகள்

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் காணாமற் போயிருக்கிறார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றிருப்பதாக கிராண்ட்பாஸ் பொலீசார் தெரிவித்துள்ளனர். காணாமற் போனவர் முப்பது வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை மீனவர்கள் 51பேரும் நாளை இலங்கை வந்தடையவுள்ளனர்

குறுஞ்செய்தி, செய்திகள்

இந்தியாவில் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலையான இலங்கை மீனவர்கள் 51பேரும் நாளை நாட்டை வந்தடையவுள்ளதாக மீன்பிடித்துறை பிரதியமைச்சர் நியூமல் பெரேரா தெரிவித்துள்ளார். இவர்களை ஏற்றிவரும் படகுகள் திருகோணமலை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளை வந்தடையவுள்ளதாக பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை மீனவர்கள் 103பேர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்காக ஒன்பது அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சையும் கட்டுப்பணம் செலுத்தின

குறுஞ்செய்தி, செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்றும் ஒரு அரசியல் கட்சியும், சுயேச்சை வேட்பாளரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதன்படி ஜனவரி மாதம் 26ம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவென ஒன்பது அரசியல் கட்சிகளும், ஒரு சுயேச்சை வேட்பாளரும் நேற்றுவரையும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகா இந்தியா பயணம்

குறுஞ்செய்தி, செய்திகள்

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகா நேற்றையதினம் இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளார். இந்தியாவில் பல முக்கிய அரசியல் தலைவர்களுடன் அவர் பேச்சு நடத்துவாரென்றும், நாளை அவர் இலங்கை திரும்புவாரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாவௌ ரயில் நிலையமருகே ஒருவர் கொலை

குறுஞ்செய்தி, செய்திகள்

மகாவௌ ரயில் நிலையமருகே ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவு 12மணியளவில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். கொலையாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

சமுர்த்தி அதிகாரிகளை கிராம உத்தியோகத்தர் சேவைக்கு உள்வாங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

குறுஞ்செய்தி, செய்திகள்

சமுர்த்தி அதிகாரிகளை கிராம உத்தியோகத்தர் சேவைக்கு உள்வாங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவு பிறப்பித்துள்ளார். அனைத்து சசமுர்த்தி அதிகாரிகளையும் கிராம உத்தியோகத்தர்களாக நியமித்து, அவர்களை வழிநடத்த பட்டதாரிகளை ஜனசபா செயலாளர்களாக நியமிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். கொள்கை ரீதியான தீர்மானமொன்றின்மூலம் இதனை அமுல்படுத்த முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஊடாக மலேசியாவுக்கு போலிக் கடவுச்சீட்டுக்களுடன் அனுப்பப்படவிருந்த இருவர் சென்னையில் கைது

குறுஞ்செய்தி, செய்திகள்

இலங்கையின் ஊடாக மலேசியாவுக்கு போலிக் கடவுச்சீட்டுக்களுடன் அனுப்பப்படவிருந்த இருவரை சென்னை விமானநிலைய அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. மலேசியாவில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுத்தருவதாகக் கூறியே இவர்கள் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்படவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முகாம்களிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தர வீடுகளை அமைக்க முதல்வர் ஏற்பாடு

குறுஞ்செய்தி, செய்திகள்

தமிழகத்திலுள்ள அகதி முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அகதிகளின் மேம்பாட்டிற்காக 100கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் கிளையொன்று யாழ். மத்திய கல்லூரியில் அமைக்கப்படும் -பிரதிக் கல்வியமைச்சர் எம்.சச்சிதானந்தன்

குறுஞ்செய்தி, செய்திகள்

யாழ். கல்விச் சமூகத்தின் நன்மைகருதி கல்வியமைச்சின், கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் கிளையொன்றினை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதிக் கல்வியமைச்சர் எம்.சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். மேற்படி கிளைமூலம் பாரிய சேவையை வழங்கமுடிவதுடன் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை திறம்பட மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுமென தாம் நம்புவதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சரத்பொன்சேகா ஐ.தே முன்னணியுடன் இணைந்து ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக தகவல்

குறுஞ்செய்தி, செய்திகள்

முன்னாள் இராணுவ தளபதி மற்றும் முன்னாள் முப்படைகளின் பிரதானியான ஜெனரல் சரத்பொன்சேகா ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எமக்கு இத்தகவலை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கறுவாத்தோட்டத்தில் காயங்களுடன் சடலம் மீட்பு

குறுஞ்செய்தி, செய்திகள்

கொழும்பு கறுவாத்தோட்டம் மல்லசேகர மாவத்தையில் காயங்களுடனான ஒருவரின் சடலம் பொலீசாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சடலம் நேற்றுமாலை கண்டு பிடிக்கப் பட்டுள்ளதுடன், வாகன விபத்தினால் இந்த மரணம் சம்பவத்திருக்கலாமென்று சந்தேகிப்பதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரத்ன தெரிவித்துள்ளார். 65வயது மதிக்கத்தக்கவர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மகரகம புற்றுநோய் வைத்தியசாலை கழிவுகள் குடிநீரில் கலப்பதாக குற்றஞ்சுமத்தி பிரதேசத்து மக்கள் ஆர்ப்பாட்டம்

குறுஞ்செய்தி, செய்திகள்

கொழும்பு, மகரகம புற்றுநோய் வைத்தியசாலையின் கழிவுகள் தமது குடிநீரில் கலப்பதாக குற்றம் சுமத்தி அப்பகுதி மக்கள் சுகாதார அமைச்சின் முன்பாக இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விடயம் குறித்து உடனடியாக சுகாதார அமைச்சு கவனம் எடுக்க வேண்டும் என மக்கள் கோஷமிட்டதுடன் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் அமைச்சுக்கு கையளித்துமுள்ளனர்.

அதிகாரியொருவர் கைதியொருவருக்கு துப்பாக்கி வழங்கியுள்ளார்

குறுஞ்செய்தி, செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்த கைதியொருவருக்கு துப்பாக்கி வழங்கியுள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும் இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப் படாமையினால் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விசாரணைகளை மேற்கொள்ளம் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

ஜெனரல் சரத்பொன்சேகா தமது பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு எழுத்துமூலம் ஜனாதிபதி அனுமதி

குறுஞ்செய்தி, செய்திகள்

முப்படைகளின் பிரதானி ஜெனரல் சரத்பொன்சேகா தமது பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான அனுமதியை எழுத்துமூலம் ஜனாதிபதி வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கடிதம் இன்று ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தமது பதவியிலிருந்து ஓய்வைக்கோரி ஜெனரல் சரத்பொன்சேகா நேற்று முன்தினம் கடிதம் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இராஜினாமா கடிதம் சமர்ப்பித்த ஜெனரல் சரத்பொன்சேகா மேற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பார் -ஐ.தே.கட்சி எம்.பி ரவி கருணாநாயக்க

குறுஞ்செய்தி, செய்திகள்

இராஜிநாமா கடிதத்தை அனுப்பியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா மேற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என்று நேற்றுப்பிற்பகல் தெரிவித்த ஐ.தே.கட்சி எம்.பி ரவிகருணாநாயக்க ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அல்லது எதிரணியின் பொது வேட்பாளராக ஜெனரல் நிறுத்தப்படுவாரா என்பது தொடர்பாக எதுவும் கூறவில்லை. எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ரவிகருணாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

பம்பலப்பிட்டி கடலில் தமிழ் இளைஞர் தாக்கப்பட்டு உயிரிழப்பு தொடர்பில் ஐந்து பொலீசார் இடைநிறுத்தம், பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்

குறுஞ்செய்தி, செய்திகள்

கொழும்பு பம்பலப்பிட்டி கடற்பரப்பில் தாக்கியதால் மூழ்கி உயிரிழந்த தமிழ் இளைஞர் பாலவர்ணன் சிவகுமாரின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவரும் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பம்பலப்பிட்டி பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் புதிய பொலீஸ் மாஅதிபர் மகிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.

கூட்டுப்படைகளின் பிரதானி ஜெனரல் சரத்பொன்சேகா நாளை இலங்கை திரும்பவுள்ளார்

குறுஞ்செய்தி, செய்திகள்

கூட்டுப்படைகளின் தலைமையதிகாரி ஜெனரல் சரத்பொன்சேகா இன்றையதினம் அமெரிக்காவிலிருந்து இலங்கை நோக்கிப் புறப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் அமெரிக்காவிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவில் விசாரணைகள் எதுவுமின்றி இலங்கை நோக்கிப் புறப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.