ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை நவீன பிரபாகரன் என்று கூறிய இந்த ஈரோஸ் தலைவர்(?) பிரபாகரன் யார்..?? (கட்டுரை)

கட்டுரைகள், செய்திகள்

pirabaharan-rajanathan.pngமீண்டும் ஒரு நவயுக பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றார். அவர்தான் டக்ளஸ் தேவானந்தா. இவரது தலைமையிலான ஈ.பி.டி.பியினர் யாழ்ப்பாணத்தில் செய்யும் கடத்தல்கள், கொலைகள், கொள்ளைகள் கட்டுக்கடங்காதவை. அதேபோன்று புளொட் அமைப்பினர் வவுனியாவில் செய்யும் கடத்தல்கள், கொலைகளும் கட்டுக்கடங்காதவை. இந்த அமைப்புக்கள் இரண்டுமே அராஜக ஆயுதக்குழுக்களாகும். புளொட், ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற அமைப்புக்கள் இலங்கை அரசாங்கத்திடம் பணம் பெற்றுக்கொண்டு இயங்குபவர்களே. ஆனால் நாம் தனித்தே இயங்குபவர்கள். நாம் வெளிநாட்டில் செய்துள்ள சில முதலீடுகளால் பெறும் நிதிகள் மற்றும் சுயதொழில் மூலமும் பெறும் பணத்தினைக் கொண்டும், வெளிநாடுகளிலுள்ள எமது ஆதரவாளர்கள் அனுப்பும் பணம் என்பவற்றின் ஊடாகவுமே எமது அமைப்பினை நடத்தி வருகிறோம். இவ்வாறு ஈரோஸ் அமைப்பின் தலைவரெனக் கூறிக் கொள்ளும் பிரபா என்கிற ராஐமனோகரன் பிரபாகரன் நேற்று ஊடகமொன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். (இதேவேளை ஈரோஸ் தலைவர் அமரர் சங்கர்ராஐpன் மகனான லண்டனில் உள்ள நேசன் என்வரும் தானே ஈரோஸ் தலைவரென உரிமை கோருவது தனிக்கதை.) மேற்படி ஈரோஸ்பிரபா என்கிற ராஐமனோகரன் பிரபாகரன் பேட்டிக்காக ஊடகங்களின் பின்னால் கேட்டலைவதொன்றும் புதிய விடயமல்ல. ஊடகங்களுக்கு உதவிகளைப் புரிவது போன்று நடித்துக் கொண்டு ஒரு கல்லில் இரு மாங்காய் அல்ல பல மாங்காய்களை அடிக்க முயலும் இவரை ஊடகங்கள் விரைவில் புரிந்து கொள்ளும். ஈரோஸ் பிரபா தனது பேட்டியில் தாம் விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லையென்பது போலவும், தமது வெட்கக்கேடான தேர்தல் தோல்விகளை இன்னுமே ஒப்புக்கொள்ள முடியாத மனநிலையிலும் இருப்பதையே அவர் வெளியிட்டுள்ள பேட்டி எடுத்துக் காட்டுகின்றது. அவர் தனது பேட்டியில் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாநகரசபையில் போடப்படாத 6ஆயிரம் வாக்குகள் ஈரோஸ் அமைப்பின் வாக்குகளே. அதனையும் புளொட் அமைப்பினரே தடுத்தனர். நாம் புலிகள் எனக் கூறியே அதனைப் புளொட் அமைப்பினர் தடுத்தார்கள். அந்த வாக்குகள் போடப்பட்டிருந்தால் நாம் வவுனியா மாநகரசபையைக் கைப்பற்றியிருப்போம். வவுனியா தமது கோட்டை எனக்கூறும் புளொட் அமைப்பு அங்கு போடப்பட்ட 22ஆயிரம் வாக்குகளில் 4ஆயிரம் வாக்குகளையே பெற்றிருந்தது. இதிலிருந்தே இவர்களது நிலைமை புரிகின்றது என்று குறிப்பிட்டுள்ளார். (வவுனியாவில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர்கள் புளொட் அமைப்பினர் என்பதை இவர் குறிப்பிட மறந்து விட்டார்.) அத்துடன் யாழ்ப்பாணத்தில் குருநகர், பாசையூர் போன்ற பகுதிகளில் ஈ.பி.டி.பியினர் மக்களை வாக்களிக்க விடாது பகிரங்கமாகவே தடுத்தனர். இதன் காரணமாகவே யாழ். நகரிலும் ஈரோஸ் வெற்றிபெற முடியவில்லை. இதற்கு முழுக்காரணமும் ஈ.பி.டி.பியினரே. ஈ.பி.டி.பிக்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாடுகள் எமக்கு எழுத்துமூலமாக ஆதாரபூர்வமாக கிடைக்கப் பெற்றுள்ளது. இதுவரையில் 242 குற்றச்சாட்டுக்கள் முழு ஆதாரங்களுடன் எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் பெரும்பான்மையான குற்றச்சாட்டுக்களாக எமக்குக் கிடைக்கப்பெற்ற கடத்தல், கப்பம்பெறுதல், கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்டவரே தற்போது யாழ். மாநகரசபையின் பதில் மேயராக பொறுப்பெடுக்கவுள்ள றேகன் என்பவராவார் எனவும் பிரபா தனது பேட்டியில் கூறியுள்ளார். (ஈபிடிபி குறித்து ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுக்கள் இருந்தால் நீதிமன்றத்தையோ மனிதஉரிமைகள் அமைப்புக்களையோ ஏன் இதுவரை இவர் நாடவில்லை? என்பதும் எமக்குப் புரியாத புதிர் தான்.)

கபில் அம்மான் எங்கே? -வன்னிமகள்-

கட்டுரைகள்

kp-uruthra.jpg புலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்லை. உலகில் உள்ள முன்னணி புலனாய்வுப் அமைப்பொன்றின் செல்லப்பிள்ளையாக வலம்வரும் கே.பி யின் கழுத்திற்கு தன் எஜெமானர்களால் கயிறு வீசப்படும்போது நாம் அந்த உண்மையை ஏற்க வேண்டும் என்பதை நோர்வே அமைச்சர் எரிக் சொல்கேம் அவர்கள் தனது இராஜதந்திர மொழியில் லண்டன் BBC HARD TALK நிகழ்சியினூடாக சொல்லியிருக்கின்றார் எனக் கொள்ளலாம். அதாவது பிரபாகரன் தலமையிலான புலிகள் சரணடைய முற்பட்டார்களாம் .. ஏதோ.. ஏதோ.. எல்லாம் கூறி சகல உண்மைகளும் ஓரிரு வருடங்களில் வெளிவரும் என கூறியிருக்கின்றார். எப்போது அந்த தினம்? சர்வதேச புலனாய்வு வலையில் சிக்கியுள்ள கே.பி நன்றாக புளியப்பட்டு சக்கையாக தெருவில் வீசப்படுவார். அன்று சர்வதேசம் உண்மைகளைக் கக்கும். அந்த தினமே உண்மை புலரும் தினம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இந்த உண்மைகள் உணரப்பட்டனவாக இருக்கின்றபோது அந்த நாள் (ஓரிருவருடம்) வருவதற்குள் எம்மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படப்போகின்றார்கள் என்பதே வேதனைதரும் விடயமாகும்.

பிரபாகரனின் இறப்பின் பின் ஓர் உயிர்ப்பு : குலன்

கட்டுரைகள்

pirabakaran_in_time_6.jpg வைகாசி 17ல் பிரபாகரன் இறந்து பின் பிறந்து வைகாசி 19ல் மீண்டும் இறந்தார் என்பது அரசசெய்தி. பிரபாகரன் இறக்கவில்லை என்பது புலம்பெயர் புலிகளின் செய்தி. இன்றைய பிரச்சினை பிரபாகரன் பிறந்ததோ, இறந்ததோ அல்ல. பிரபாகரனால் என்ன நடந்தது என்பதுதான் பிரச்சனை. சரி அவர் உயிருடன் இருந்தால் வரும் போது வரட்டும். பிரபாகரனின் புலிப்பிறப்பும் நடப்பும் இறப்பும் எமக்கும் எம்சமூகத்திற்கும் சிலபாடங்களைச் சொல்லிச் சென்றிருக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. என்றும் இறந்தகாலமே எதிர்காலத்தின் திறவுகோல் என்பதால் இறந்தகாலத்தை திருப்பிப் பார்க்க வேண்டிய அவசியம் எமக்கு உண்டு. ஆனால் பழய பல்லவி பாடிக்கொண்டு இறந்த காலத்திலேயே நின்றுவிடக்கூடாது. எதிர்காலத்தில் இறந்தகாலத்தின் பிழைகளைத் திருத்துவதும், நல்ல அனுபவங்களை எதிர்காலத்துக்கு எடுத்துச்செல்வதுமே மனிதனுடைய வாழ்க்கை மட்டுமல்ல, ஓரினத்தின் வாழ்வையும் மேம்படுத்தும். என்சிற்றறிவுக்கு எட்டியதை எம்மக்களின் போராட்டமும் எதிர்காலமும் பற்றி அக்கறை கொண்டவன் என்ற வகையில் ஒரு கருத்துக்களம் ஒன்றை அமைக்கும் நோக்கிலேயே இக்கட்டுரை வரையப்படுகிறது. புலம்பெயர்ந்த இளையவர்களுக்கு எமது போராட்டவரலாறு முழுமையாகத் தெரியாத காரணத்தினால் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என பிழையான வழியில் போய்விடக் கூடாது என்ற நோக்கத்திலுமே மிக சுருக்கமாக இக்கட்டுரை எழுதப்படுகிறது.

கடவுள் அல்ல… பிரபாகரன் மனிதன் – “புதினம்” வெளியிட்ட கட்டுரை பற்றிய ஆய்வு

கட்டுரைகள்

thalaivar-1.jpg அது நடந்துவிட்டது என்று நம்புவதற்கு நம்மில் பலருக்கு இன்னும் முடியாமல் இருக்கிறது என்று தொடங்குகிறது அந்தக் கட்டுரை. நான் சொல்வதெல்லாம் உண்மை என்று சத்தியம் செய்யாமல், கோத்தபாய ராஜபட்சே சொல்வதெல்லாம் உண்மை என்று சத்தியம் செய்கிறார், கட்டுரையாளர். பிரபாகரன் கொல்லப்படவில்லை, தன்னைத்தானே சுட்டுக்கொண்டார் என்று திட்டவட்டமாக அறிவிக்கிறார்.கட்டுரையாளர் யார் என்று ஆராய்வது வேண்டாத வேலை. அவர் மிகச் சிறந்த விடுதலை உணர்வாளராகவும், மிகவும் ஆழமான தமிழ்த் தேசப் பற்றாளராகவும் கூட இருக்கக்கூடும். அவர் எவராயிருந்தாலும் நீடூழி வாழ்க! கட்டுரையில் உள்ள விஷம் அல்லது விஷயம் தொடர்பாக மட்டுமே நாம் பேசவேண்டியிருக்கிறது.இலங்கை அரசு காட்டிய அந்தப் படங்களில் இருந்த அந்த உடல் அவருடையது அல்ல என்றே எம்மில் சிலர் இப்போதும் நம்புகிறோம் என்ற வாக்கிய அமைப்பு, எழுதியவரின் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது. அந்த உடல் அவருடையதுதான் என்றே எம்மில் பலரும் நம்புகிறோம் என்று நேரடியாக எழுதாமல், எதிர்மறையாய் எழுதி சேம்சைடு கோல் போடுகிற வேலை இது.

புலித் தலைமையால் தனிமனிதர் என்று கருதப்பட்ட கருணா அம்மான் உண்மை எது, உரிமை எது, உலகத் தமிழினமே உணர்ந்துகொள்…

கட்டுரைகள்

frt.jpg புலித் தலைமையால் தனிமனிதர் என்று கருதப்பட்ட கருணா அம்மான் என்ற அந்தத் தனிமனிதனின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மனமில்லாத காரணத்தினால் இன்று முப்பது வருடகால தமிழீழப் போராட்டம் முப்பது மாதங்களுக்குள் முடிவுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நாகரீக அரசியல் உலகத்திற்கு ஏற்றாற்போல நாங்களும் மாறுபட்டேயாக வேண்டிய ஈழப்போராட்ட வரலாற்றில் பெரிதும் தேவையான தொன்றாக இருந்தது.தலைவன் பிழை செய்யும்போது அதைச் சுட்டிக்காட்டும் மக்களாக நாம் அன்று ஒன்றுபட்டு இருக்கவில்லை. புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள்,என்று சுற்றிவரப் பலபேர் இருந்தும் பிரபாகரனின் தவறான அணுகுமுறைகளைச் சுட்டிக்காட்டக்கூடிய நிலை இல்லாததன் விளைவே தர்பா காட்டு வாழ்க்கையின் பக்கம் பிரபாகரனை அழைத்துச் சென்றது.

பிரபாகரனே வந்தாலும் இனி ஆயுதம் வேண்டாம் அகிம்சையே வேண்டும் - தமிழருவி

கட்டுரைகள்

thamilaruvi_thumbnail.jpg ஈழத்தில் வாடும் தமிழரும், புலம்பெயர்ந்து வாழும் தமிழரும் தாயகத் தமிழரை இனி நம்ப வேண்டாம். ஆயுதத்தை மறந்து விடுங்கள். அகிலம் முழுவதும் அறப்போரை நடத்துங்கள். “அகிம்சையே வலிமை மிக்க ஆயுதம்” என்று போற்றிய புரட்சியாளர்கள் மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவை நெஞ்சில் நிறுத்துங்கள். பிரபாகரனே வெளிப்பட்டாலும் அகிம்சை வழியில் புரட்சியைத் தொடர்வதே உகந்தது. ஆயுதப் போரில் இனியும் எம் தமிழினம் அழியக்கூடாது என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் முன்னாள் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாட்டிலிருந்து வாரம் இருமுறை வெளிவரும் ஜூனியர் விகடன் இதழில் ‘தமிழா… உன் கதி இதுதானா?’ எனும் தலைப்பில் தமிழருவி மணியன் எழுதிய கட்டுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது.

உண்மை எது, உரிமை எது, உலகத் தமிழினமே உணர்ந்துகொள்…

கட்டுரைகள்

karunaammannew11.jpg புலித் தலைமையால் தனிமனிதர் என்று கருதப்பட்ட கருணா அம்மான் என்ற அந்தத் தனிமனிதனின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மனமில்லாத காரணத்தினால் இன்று முப்பது வருடகால தமிழீழப் போராட்டம் முப்பது மாதங்களுக்குள் முடிவுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நாகரீக அரசியல் உலகத்திற்கு ஏற்றாற்போல நாங்களும் மாறுபட்டேயாக வேண்டிய ஈழப்போராட்ட வரலாற்றில் பெரிதும் தேவையான தொன்றாக இருந்தது. தலைவன் பிழை செய்யும்போது அதைச் சுட்டிக்காட்டும் மக்களாக நாம் அன்று ஒன்றுபட்டு இருக்கவில்லை. புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள், என்று சுற்றிவரப் பலபேர் இருந்தும் பிரபாகரனின் தவறான அணுகுமுறைகளைச் சுட்டிக்காட்டக்கூடிய நிலை இல்லாததன் விளைவே தர்பா காட்டு வாழ்க்கையின் பக்கம் பிரபாகரனை அழைத்துச் சென்றது.

தலைவரின் (பிரபாகரனின்) கொலையில் தமிழக தலைவர்கள் சிலருக்கும் பங்கு உண்டு-தனஞ்சேயன்!

கட்டுரைகள்

pirapa.jpg புலிதலைவர்களின் கழுத்தில் தொங்கிய சைனற் வில்லைகள் என்னவாயின?
புலிகளின் தலைவர்கள் படையினரிடம் சரண் அடைந்த பின்னர் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பது குறித்து எனது கடந்த கட்டுரையில் எழுதியிருந்தேன். இறுதி நேரத்தில் பிரபாகரனையும் ஏனைய புலி தலைவர்களையும் காப்பாற்றுவதற்காக அரச தரப்பு சால்வை சகோதரருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் திரை மறைவில் பேரம் பேசியிருந்தனர் என்றும், படையினரிடம் சரண் அடைந்த பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் எனவும் எழுதியிருந்தேன்.இதனை நீங்கள் நம்ப மறுத்தால் மாவை சேனாதிராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சந்திர நேருவின் மகன் சந்திரகாந்தன் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டு பாருங்கள் எனவும் எழுதியிருந்தேன்.

ஜன் ஜனநாயகமும் தோற்றார்..!! (ஏறத்தாழ அம்மையார் ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் போட்ட சூட்டிற்கு நிகரான ஒரு சூட்டை தமிழீழ மக்கள் ஜன்னுக்குப் போட்டிருக்கிறார்கள்)

கட்டுரைகள்

anifox_girl.gif ஸ்டைலுக்காகத்தான் அவர் ஜன்.. உண்மையில் அவர் ஜனனி.. இதுதான் அவரது ஆதரவாளர்கள் சொல்லிக்கொண்ட ஆறுதலான விபரம். விபரம் தெரியாத சின்னப்பொண்ணு புலிகளின் வலையில் வீழ்ந்தது என்பதா இல்லை சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய ஜன் அன் கோ தமிழ் மக்கள் மீது சவாரி செய்ததா என்பது நாளடைவில் அறிந்து கொள்ளக் கிடைக்கக்கூடிய விடயங்கள். எனினும் இப்போதைக்கு தமிழருக்கொரு சொந்தக் குரல் ஐரோப்பியப் பாராளுமன்றில் ஒலிக்க வேண்டும் எனும் நப்பாசை தான் நம் அனைவரையும் இந்த விடயத்தின் பால் ஈர்த்தது என்றே வைத்துக் கொள்வோம். அதன் அடிப்படையில் ஜன் எனும் ஜனனி வென்றிருந்தால் தமிழ் மக்கள் உள்ளாரப் பரவசமடைந்திருப்பார்கள், புலி ஆதரவாளர்களோ அதைக் கொண்டாடி மகிழ்ந்திருப்பர். சரி, அவராகவே விரும்பி இந்தப் பலப்பரீட்சைக்குள் வந்திருக்கிறார்,அவர் மனம் விரும்பியபடி போராடித்தான் பார்க்கட்டுமே என்று பொறுத்திருந்து பார்த்த மட்டில், ஏறத்தாழ அம்மையார் ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் போட்ட சூட்டிற்கு நிகரான ஒரு சூட்டை தமிழீழ மக்கள் ஜன்னுக்குப் போட்டிருக்கிறார்கள் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா?

சிறு தொழிலை பெரும் பலமாக மாற்றிப்பார்த்த மக்களை நாளை வரிசையில் நிற்கும் மக்களாக மாற்றிவிடாதீர்கள்..

கட்டுரைகள், செய்திகள்

3604834422_6abbb4cb37.jpg இலங்கை மக்களைப் பார்த்து, “சிலோன் காரன்” என்று வெளிநாட்டு மக்கள் அடையாளப்படுத்தும் போது, அதை ஓரளவுக்கு எல்லோருமே பெருமையாகத்தான் நினைத்திருந்தார்கள். பின்னர் வந்த இலங்கையும், தமிழீழமும் மக்களையும் பிரித்து, நம்மீது அக்கறை கொண்டிருந்த பிற நாட்டு மக்கள் உணர்வுகளையும் சேர்த்துத்தான் பிரித்தன. அதற்காகத் திரும்பவும் இலங்கையை சிலோன் ஆக்க முடியாது, ஆனால் பிரிந்து போன மனித உள்ளங்களை முயற்சித்தால் மீண்டும் இணைத்துக்கொள்ளலாம். யுத்தம் முடிந்த சூட்டோடு சூடாக அவசர அவசரமாக வடக்கில் தேர்தல் நடத்தப்படப் போகிறது. துப்பாக்கிச் சத்தங்கள் ஓய்ந்த நிலையை அனுபவித்த ஓய முன்னர் மக்கள் மிக மிக அவசரமாக தம் பழைய வாழ்க்கைக்குள் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் முனைப்புடன் இருக்கிறது. ஆயுதப்போராட்டம் சூடு பிடித்த பின்னும் கூட மக்கள் தம் வாக்களிக்கும் உரிமையைப் பெருமையாகவே நினைத்து வந்தார்கள், வாக்களிக்கவும் செய்தார்கள். துரதிஷ்டமாக சில தேர்தல்களில் அவர்களின் தெரிவை விட,அவர்களை ஆளுமை செய்தவர்களின் தெரிவுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் நிர்ப்பந்தம் அவர்களுக்கு இருந்தது. அந்த நிலையிலிருந்து அவர்களை விடுவித்தது ஒன்றுதான் இன்றைய அரசாங்கம் இதுவரை இந்த மக்களுக்காகச் செய்திருக்கும் சாதனையாகும். அந்த சாதனை நிலைக்க வேண்டுமென்றால்,இந்த மக்களுக்கு அவர்கள் விரும்பும் வாழ்க்கையையும் உரிமையையும்,அதற்கான சூழ்நிலையையும் அரசாங்கம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அப்படியொன்றை உருவாக்குவதற்கு,அதாவது மக்கள் புணர்வாழ்வுக் கட்டமைப்பைச் செயற்படுத்துவதற்கு,மத்தியில் இருக்கக்கூடிய அரசின் அதிகாரங்களைப் பகிர்ந்து,பிரதேச நலனில் பங்கெடுக்கும் பிரதிநிதிகளை மக்கள் அவசரமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே அரசின் தற்போதைய நோக்கமென்று சொல்லப்படுகின்றது. அப்படியானால்,அது மக்களுக்கு நல்ல சகுணம் தான். தம் பிரதிநிதிகளையும்,தமக்காகப் பேசவல்ல மனிதர்களையும் தேர்ந்ததெடுப்பதன் மூலம், தம் மீது செலுத்தப்பட்டிருக்கும் ஆளுமையிலிருந்து விடுபட்டு,சுதந்திரமாக வாழ்வதற்கு இதை ஒரு அடிப்படைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தமிழினம் அரசியலில் அநாதைகளாக்கப் படவுமில்லை, நட்டாற்றில் விடப்படவுமில்லை அவர்களுக்கு அம்மான் இருக்கிறார்..

கட்டுரைகள்

karunaammannew11.jpgஇலங்கைத் தமிழ் மக்கள் அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டங்களின் வரலாற்றிலே இன்று உள்ளதைப் போன்று முன்னர் என்றுமே நம்பிக்கை இழந்த நிலையில் ஒரு அரசியல் வெற்றிடத்தில் இருந்ததில்லை. இலங்கை பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு மிதவாதத் தமிழ்த் தலைவர்கள் முன்னெடுத்த மூன்று தசாப்தகால அகிம்சைப் போராட்டங்களும் அவற்றுக்குப் பின்னரான மூன்று தசாப்தங்களில் தமிழ்த் தீவிரவாத இயக்கங்கள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டங்களும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. போர் முடிவடைந்துவிட்டதாக அ%

மக்களின் வாழ்வுரிமைக்கும் கருத்து சுதந்திரத்துக்கும் தடை போடும் புலிகள் இந்திய பேரரசையும் சர்வதேச சமூகத்தையும் தங்களின் தடை நீக்கச் சொல்லி கேட்பதில் என்ன நியாயம்.

கட்டுரைகள்

தமிழரசுக்கட்சியும் தமிழர்விடுதலைக் கூட்டணியும் தமிழ் மொழி வார்த்தை அலங்காரத்தினால் மேடையை அலங்கரித்து தமிழ் மக்களை தன்மான உணர்ச்சியின் உச்சிக்கே கொண்டடு சென்றனர். கவிஞர் வைரமுத்து தமிழ் வார்த்தை அலங்காரத்தினால் கவிதையை எழுதி வைத்து பார்த்து வாசித்து குறிப்பிட்ட ஒரு மக்கள் வட்டத்தை தனது ரசிகர்கள் ஆக்கிவைத்திருப்து போன்று. பிரபாகரனும் தமிழ் வார்த்தை அலங்காரத்தினால் யாரும் எழுதிக்கொடுக்கும் உரையை பார்த்து வாசித்து தனது கூட்டத்தை திருத்திப்படுத்துவது வழமை. அதே போல் (2008) இவ்வருட உரையையும் அலங்கரித்து பேசியுள்ளார்இந்த உரையில் இலங்கைத் தமிழ் மக்களை சுய நிர்னய உரிமையுடன் வாழவைக்கக் கூடிய எந்த இராஜதந்திர நகர்வும் இருக்கவில்லை. மாறாக உலக நாடுகள் விதித்துள்ள தடையை நீக்கி தங்களை ஏகபபிரதிநிதிகளாகவும் ஒரு ஆதிக்க சக்தியாகவும் எற்றுக்கொள்ளவே கேட்டுள்ளார்.