புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

வாழ்த்துக்கள்

newyear 2009அன்பான முழக்கத்தின் வாசகர்கள் அனைவருக்கும் உலக மக்களுக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

பொங்கி வரும் காவேரி என
பொங்கட்டும் புது வாழ்வு
சீறிவரும் காளைபோல
சிரிக்கட்டும் புது வருடம்
வருகின்ற காலம்
வசந்த காலம் ஆகட்டும்
வீசுகின்ற காற்றெல்லாம்
தென்றல் காற்றாகட்டும்

வருகின்ற மழையால்
மரங்களெல்லாம் சிரிக்கட்டும்
வருடுகின்ற மகிழ்ச்சியால்
மனமெல்லாம் மகிழட்டும்

வருகின்ற புத்தாண்டு
புத்துணர்ச்சி கொடுக்கட்டும்
காழ்ப்புணர்ச்சி இல்லாமல்
விழிப்புணர்ச்சி உண்டாகட்டும்

-முழக்கம் நிர்வாகம்-