15 July 2009
விளயாட்டுசெய்திகள்
ஆடவருக்கான உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் முதலிடம் பிடித்துள்ளார். இதில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், அமெரிக்காவின் ஆன்டி முர்ரே ஆகியோர் முறையே 2வது, 3வது இடத்தில் உள்ளனர்.இதேபோல் பெண்களுக்கான ஒற்றையர் தரவரிசையில், ரஷ்ய வீராங்கனை தினாரா சஃபீனா முதலிடத்திலும், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 2வது இடமும், அவரது சகோதரி வீனஸ் வில்லியம்ஸ் 3வது இடமும் வகிக்கின்றனர்
15 July 2009
விளயாட்டுசெய்திகள்
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற போட்டிக்கணக்கில் இலங்கை கைப்பற்றியுள்ளது. கொழும்பில் நடந்து வரும் இப்போட்டியின் 3ஆம் நாளான இன்று 2வது இன்னிங்சைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தாலும், குலசேகரா மற்றும் ஹெராத்தின் அபார பந்துவீச்சால் 320 ரன்களுக்கு சுருண்டதுவெற்றி பெற 171 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 31.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. துவக்க வீரர்கள் வர்னபுரா 54 ரன்கள், பரனவிதனா 17 ரன்கள், அணித்தலைவர் சங்கக்காரா 46 ரன்கள் எடுத்தனர். அணியின் வெற்றியை உறுதி செய்த ஜெயவர்த்தனே 37 ரன்கள், சமரவீரா 6 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
