19 June 2009
பொதுவானவை
இலங்கை எழுத்தாளர் புன்னியாமீன்’ அவர்களுடன் இடம் பெற்ற இந் நேர்காணல் இந்தியா தமிழ் நாட்டில் முன்னணித் தமிழ் இணையத்தளங்களில் ஒன்றான ‘சங்கமம் லைவ்’ இல் 19.06.2009 பிரசுரமானதாகும். இந்த நேர்காணல் முனைவர். மு. இளங்கோவன் இணையத்தளத்திலும், கல்வி சார்ந்த சில இணையத்தளங்களிலும் உடன் மறுபிரசுரம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பிரபல எழுத்தாளர் ‘பொன்மொழிவேந்தன்’ பத்து நாட்களுக்கு முன்பு நேரடியாக இந்நேர்காணலை புன்னியாமீன் இடம் இருந்து பெற்றிருந்தார். இந்நேர்காணல் வழங்கப்பட்ட பின்பு வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள தரம் 05 மாணவர்களுக்காக வேண்டிய கல்வி உதவிச் செயற்பாட்டில் ஐக்கிய இராட்சியத்தின் ‘அகிலன் பவுண்டேசனும்’ இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. வாசகர்களுக்காக வேண்டி இந்நேர்காணல் மீளப்பிரசுரமாகின்றது.(ஆசிரியர்)
நேர்காணல் ‘பொன்மொழிவேந்தன்’ (தமிழ் நாடு)

15 June 2009
பொதுவானவை
கிளிநொச்சியைவிட்டு வெளியேற மறுத்தவர்கள் பட்ட அவஸ்தை இன்னமும் மனதில் நிலைத்துள்ளது. பச்சை மட்டையடி கொடுப்பது என்பதுதான் வெளிப்படையானது. வெளியேற மறுத்தவர்களின் கைகள் கயிற்றால் கட்டப்பட்டு புலிகளின் வாகனங்களுடன் கட்டப்படும். இந்நிலையில் வாகனங்கள் நகரும். இப்படியான மனிதாபிமானமற்ற செயலின் பின்னால் - இவ்வழிநடத்தலில் நாம் கிளிநொச்சியைவிட்டு வெளியேறினோம்.தமது இருப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு பல இடங்களில் தங்கி சகல உடமைகளையும் இழந்து ஆனால் உயிர்தப்பி தற்போது முகாமில் இருக்கும் ஒரு இளம்குடும்பத்தினருடன் தொலைபேசி மூலம் உரையாடும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அந்நேரடி உரையாடலில் அவர்கள் பகிர்ந்துகொண்ட, அவர்கள் அனுபவித்த துன்பங்கள் மனக்கசப்புகள் எதிர்பார்ப்புகளின் தொகுப்பே இக்கட்டுரையாகும்.

25 May 2009
பொதுவானவை

கொடிய வன்முறைகளால்
விலங்கிடப்பட்ட மனிதம்
ஊமையாகி விட்டது…
ஆனாலும்…
மனிதம் விலங்கொடித்து
மறுபடியும் எழுந்து வர
நாங்கள் பேசுவோம்!
எம் கால்கள் நடந்த
கனவுத்தோட்டம் எங்கும்
விதைக்கப்படிருப்பவைகள்
கனி தரும் விதைகள்!
நிஜங்களின் விடிவை நோக்கி
அவைகள் முளைத்து வர
முயன்ற வரை உழைப்போம்!
அது வரை….
திசை தெரியாத
குருட்டு விழிகளின்
ஆசைகளுக்காக
இருட்டில் இருக்கவும்
நடுத்தெருவில்
வாழ்க்கையை தொலைக்கவும்
சபிக்கப்பட்ட
எமது மக்களின்
சாபங்களைப் போக்க
சொந்த வாழ்விடங்களுக்கு
அவர்களை அனுப்புவோம்….
வாழ்வின் சுகங்களை
சகலரும் அனுபவிக்க
எம் கரங்களை நீட்டுவோம்!
25 May 2009
பொதுவானவை
அதிக நேரம் தூங்கினால், எடை குறையும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. வாஷிங்டனில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவ மையத்தில் சர்வதேச டாக்டர்கள் மற்றும் நிபுணர்கள் குழுவினர் நடத்திய ஆய்வில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.வால்டர் ரீட் மருத்துவமனையை சேர்ந்த நர்ஸ்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டதில், நன்றாக தூங்குவோரை விட, குறைந்த நேரம் தூங்குவோருக்கு எடை அதிகரிப்பது தெரியவந்துள்ளது.குறைந்த நேரம் தூங்குவோருக்கு, பசி அதிகரித்து, அதிகளவில் உட்கொள்கின்றனர். வளர்சிதை மாற்றத்தின் போது, அவர்களின் எடை அதிகரிக்கிறது என்பது நிரூபணமானது.