ஒரு-பால் உறவு குற்றமாகாது என்ற தில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

இந்தியசெய்திகள்

ani_indiaflag1.gif இந்தியா வில் பரஸ்பர சம்மதத்துடன் ஒரு பால் உறவு வைத்துக் கொள்வதை கிரிமினல் குற்றமாகக் கருத முடியாது என்று தில்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு்ள்ளது. இது தொடர்பாக வரும் 20ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், ஒரு பால் உறவினரின் உரிமைகளுக்குப் போராடும் நாஸ் பவுண்டேசன் என்ற தன்னார்வ அமைப்புக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, சுரேஷ் குமார் கெளஷல் என்ற ஜோதிடர் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஆண்டவனின் பெயரால் நான்கு கால் ஐந்தறிவு ஜீவன்களை பலியிடும் இரண்டு கால் ஆறறிவு ஜீவன்கள்.

இந்தியசெய்திகள்

baffalo
தமிழகம் மணப்பாறை அருகேயுள்ள மட்டப்பாறைப்பட்டியில் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று ஆயிரத்து 500 எருமை கிடாக்கள் வெட்டி பலியிடப்பட்டன. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, 20 கி.மீ., தொலைவில் மட்டப்பாறைப்பட்டி உள்ளது. இங்குள்ள பத்ரகாளியம்மன் கோவில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக பொதுமக்கள் வணங்கி வருகின்றனர். அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து வணங்கி செல்வது வழக்கம். பக்தர்கள் தாங்கள் எண்ணியது நிறைவேறி விட்டால், எருமை கிடா பலியிட்டு, நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக்கொள்வர். ஏழு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவை சுற்றுப்புற 54 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து நடத்தி வருகின்றனர். கடந்த 2002ம் ஆண்டு நடந்த திருவிழாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட எருமை கிடாக்கள் வெட்டி பலியிடப்பட்டன. அதற்கு ரெட்கிராஸ் அமைப்பு மற்றும் மிருகவதை தடுப்பு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து, சர்ச்சையை ஏற்படுத்தியதால், அப்போதிருந்த அ.தி.மு.க., ஆட்சியில் கோவில்களில் உயிர்பலி கொடுக்க தடை விதித்து கடுமையான சட்டம் கொண்டு வரப்பட்டது. உயிர்பலி தடைசட்டத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. அதன்பின் சில மாதங்களில் கோவில்களில் உயிர்பலி தடைசட்டத்தை அரசு வாபஸ் பெற்றது.

ஓரினச்சேர்க்கை தவறில்லை; இந்தியாவில் பரபரப்பு தீர்ப்பு

இந்தியசெய்திகள்

ani_indiaflag1.gif ஓரினச் சேரக்கையாளர்கள் செக்ஸ் உறவு வைத்துக்கொள்வதில் எந்தவித சட்டவிரோதமும் இல்லை என்று டில்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் ஓரினச் சேர்க்கை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓரினச் சேர்க்கையை தடைசெய்ய வழி வகுக்கும் ஐ.பி.சி 377வது பிரிவையும் டில்லி உயர் நீதிமன்றம் செல்லாது என்று கூறி விட்டது. இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை நிதிபதிகள் அஜித் பிரகாஷ் முரளிதர் ஆகியோர் பிறப்பித்தனர். இது குறித்து நீதிபதிகள் தங்களது தீர்ப்பின் போது கூறுகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது விதிக்கு புறம்பாக உள்ளது இந்த 377 வது சட்டப் பிரிவு. ஒவ்வொரு குடிமகளும் தனது விருப்பப்படி வாழ அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு வகை செய்கிறது. ஆனால் அதை தடுக்கும் வகையில் 377 வது சட்டப் பிரிவு உள்ளது. எனவே இது செல்லாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். ஐ. பி. சி. 377 இங்கிலாந்து ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டதாகும். இந்த சட்டப் பிரிவின்படி இயற்கைக்குப் புறம்பான செக்ஸ் உறவு கொள்வது கிரிமினல் குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தசட்டப் பிரிவை நீக்கக் கோரி சமீப காலமாக கோரிக்கைகள் வலுத்து வந்தன. சமீபத்தில் டெல்லி சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஓரினச் சேர்க்கையாளர்கள், அரவாணிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட பேரணிகளும் நடந்தன. இந்த சமயத்தில் இப்படி ஒரு தீர்ப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ்.

இந்தியசெய்திகள்

ani_indiaflag1.gif இந்திய வெளியுறவுத்துறை செய்லாளராக இருக்கும் சிவசங்கரமேனன் இன்றுடன் (ஜூலை 31) ஓய்வு பெறுகிறார். அந்த இடத்திற்கு நிரூபமா ராப் நியமிக்கப்பட்டிருக்கிறார். 1973‐ல் இந்திய ஆட்சிப் பணியில் இணைந்து கொண்ட இவர் மிக முக்கிய ராஜதந்திர பதவிகளை வகித்தவர் என்பதோடு சோனியாவின் குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்ற பிம்பமும் நிரூபமா மீது உண்டு. இந்தியாவுக்கான இலங்கைத் தூதராக கொழும்பில் பணியாற்றிய பிறகு அந்த இடத்திற்கு அலோக் பிரசாத்தைக் கொண்டு வந்த இந்தியா, நிரூபமாவை சீனாத் தூதராக அனுப்பியது. ஆனால் அதே நேரம் மும்பை தீவீரவாத தாக்குதல், இலங்கை போர், பாகிஸ்தானுடன் முறுகல் நிலை, இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கம் போன்ற விஷயங்களில் சிவசங்கரமேனனின் மீது நாடு முழுக்க உள்ள ராஜதந்திரிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். பிரச்சனைகளை மந்தமாக அணுகினார் என்றும் தந்திரங்களைக் கையாளத் தெரியாதவர் என்றும் விமர்சிக்கப்பட்டார் மேனன்.

தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க இயலாது: கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு

இந்தியசெய்திகள்

ediyurapa001.jpg காவிரி பாசனப் பகுதியில் உள்ள அணைக்கட்டுகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வருவதால் தற்சமயம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் நிலையில் கர்நாடகம் இல்லை என்று முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்தார். காவிரி நீர்ப்பாசன கழகம், கர்நாடக நீர்ப்பாசன கழக அதிகாரிகளுடன் முதல்வர் எடியூரப்பா வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு நிருபர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: ஜூன் மாதம் பெய்ய வேண்டிய மழை இன்னும் பெய்யவில்லை. இதனால் காவிரி பாசனப் பகுதியில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைக்கட்டுகளில் நாளுக்கு நாள் நீர் இருப்பு குறைந்து கொண்டே வருகிறது. இதனால் குடிநீர்ப் பிரச்னையை சமாளிப்பதே கஷ்டமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தற்போது காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடும் சூழ்நிலையில் கர்நாடகம் இல்லை. நல்ல மழை பெய்து அணைக்கட்டுகள் நிரம்பும் நிலை ஏற்படும்போது தமிழகத்துக்கு எப்போதும்போல் தண்ணீர் திறந்துவிடப்படும்.

பாகிஸ்தான் மண்ணில் இந்திய ஆக்கிரமிப்பாளருக்கு இடமளிக்காதீர் - மன்மோகன் சிங்

இந்தியசெய்திகள்

manmohan-20.jpg நவம்பரில் மும்பையில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலை அடுத்து இந்தியப் பிரதமரும் பாகிஸ்தானின் அதிபரும் சந்திக்கும் முதாலாவது உயர்மட்ட சந்திப்பு ரஷ்யாவில் நேற்று (ஜூன்16)நடந்தது. மூன்று நாள் பயணமாக ஜுன் 15ம் திகதி ரஷ்யாவின் ஷாங்காய் கூட்டு மாநாட்டிலும் பிரேசில்,ரஷ்யா,இந்தியா,சீனா ஆகிய நாடுகளின் பிரிக் கவுன்சிலிலும் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ரஷ்ய பயணத்தை மேற்கொண்டிருந்தார். இதன்போது அவர் யேகடரின்பர்க்கில் நடைபெற்ற ஷாங்காய் கூட்டு மாநாட்டின்(SCO summit) பின் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை பிரத்தியேகமாக நேற்று(ஜூன் 16) சந்தித்தார். அப்போது சர்தாரி சற்றும் எதிர்பாராத முறையில் சர்வதேச ஊடகங்கள் முன்னால் அவரை நோக்கி அதிபர் அவர்களே, இந்திய சட்டப் பிரகாரம் பாகிஸ்தான் மண்ணானது இந்தியாவுக்கெதிரான தீவிரவாத நடவடிக்கைகளுக்காக எக் காரணம் கொண்டும் உபயோகிக்கப் படக் கூடாது என்றுரைப்பது என் கடமை என சடுதியாகக் கூறினார்.

இன்று மத்திய அமைச்சரவை முதல் கூட்டம்

இந்தியசெய்திகள்

30_001.jpg
மத்திய அமைச்சரவை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் சனிக்கிழமை முதல்முறையாகக் கூடுகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அடுத்த 100 நாள்களுக்கு நிறைவேற்ற வேண்டிய செயல்களுக்கான இலக்குகள் இந்தக் கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படும்.குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் நிகழ்த்தவுள்ள உரை தயாரிக்கப்படும். அதில் எல்லா துறைகளும் செய்ய வேண்டிய பணிகள் கோடிட்டு காட்டப்படும். முதல் தொடரில் நிறைவேற்ற வேண்டிய முக்கியமான மசோதாக்கள் குறித்து இதில் முடிவு செய்யப்படும். பொது பட்ஜெட்டை முழு அளவில் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் இனி முழு வேகம் பெறும்.வறுமை ஒழிப்பு, விலைவாசி குறைப்பு, கிராமப்புற, நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை மேலும் சிறப்பாக அமல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அமைச்சரவை முடிவு செய்யும். விவசாயத்தை வலுப்படுத்தவும், விளைபொருள்கள் உரிய காலத்தில் கொள்முதல் செய்யப்படவும், ஏற்றுமதி செய்யப்படவும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

விமானப் பணிப்பெண் சாவு: கொலையாளி கைது

இந்தியசெய்திகள்

26_0041.jpg
விமானப் பணிப்பெண் நித்திக்குமாரி சாவிற்கு காரணமான கொலையாளி கைது செய்யப்பட்டார். பிகாரைச் சேர்ந்தவர் நித்திக்குமாரி. இவர் ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றினார். முகப்பேர் கோல்டன் ராஜ்நகரில் பாப்பன்ன வெங்கடரத்தினம் தெருவில் உள்ள பாஸ்கர் ராவ் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் மேல்தளத்தில் வாடகைக்கு குடியிருந்தார். கடந்த 20-ம் தேதி பணி முடிந்து தனது வீட்டுக்கு திரும்பிள்ளார். மறுநாள் இவருக்கு வார விடுமுறை என்பதால் இவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அதன்பின் இவருடன் பணியாற்றும் சக ஊழியர்கள் இவரைத் தேடி முகப்பேரில் உள்ள வீட்டுக்கு வந்தனர். இவரது வீட்டின் அருகே சென்றபோது துற்நாற்றம் வீசியதால் ஜன்னலைத் திறந்து உள்ளே பார்த்தனர், உள் அறையில் நித்திக்குமாரி உயிரிழந்து கிடந்தார். புகாரின்பேரில் ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில்

திருப்பதி மலையில் பேருந்து கவிழ்ந்து 20 பக்தர்கள் படுகாயம்

இந்தியசெய்திகள்

199013f971483ff432cb359070f6f26c-grande.jpg
திருப்பதி மலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென கோளாறானதால் கவிழ்ந்து விழுந்து 220 பேர் படுகாயமடைந்துள்ளனர்.திருப்பதி பஸ் நிலையத்தில் இருந்து ஆந்திர அரசு பஸ் ஒன்று திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு புறப்பட்டது. அதில் 30 பக்தர்கள் இருந்தனர்.பஸ் 30-வது வளைவில் சென்று கொண்டிருந்த போது திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்து வதற்காக பக்கவாட்டு சுவரில் பஸ்சை மோதவிட்டார். அப்போது பஸ் எதிர்பாராத விதமாக சுவரில் மோதி திடீரென தலை குப்புற கவிழ்ந்தது.இதில் பஸ்சில் இருந்த சென்னையை சேர்ந்த ரவி, வெங்கடேஷ், நவநாதம், சுவர்ண லட்சுமி உள்ளிட்ட 20 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

அழகிரி- தயாநிதி- ராஜா- வாசன்- பழனிமாணிக்கம் நெப்போலியன்-ஜெகத்-காந்திசெல்வன் பதவியேற்பு

இந்தியசெய்திகள்

டெல்லி: மத்திய கேபினட் அமைச்சர்களாக அழகிரி, தயாநிதி மாறன், ராஜா, வாசன் உள்ளிட்டோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.அதே போல பழனிமாணிக்கம், நெப்போலியன், ஜெகத்ரட்சகன், காந்திசெல்வன் ஆகியோர் மத்திய இணையமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
தயாநிதி, ராஜா, வாசன், மு.க.அழகிரி ஆகியோரின் குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அழகிரியின் தாயார் தயாளு அம்மாள், அமைச்சர் ஸ்டாலின் ஆகியோரும் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.அழகிரி உள்பட தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களுமே ஆங்கிலத்திலேயே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தியின் அருகி்ல் இருக்கை தரப்பட்டிருந்தது.வழக்கமாக பேண்ட்-சர்ட்டில் இருக்கும் தயாநிதி மாறன் வேஷ்டி-சட்டையில் வந்து பதவியேற்றுக் கொண்டார்.நாராயணசாமியின் அவசரம்…

விமான பணிப்பெண் கொலையில் மர்மம் நீடிக்கிறது

இந்தியசெய்திகள்

26_004.jpgசென்னை ஜெ.ஜெ.நகர் கோல்டன் ஜார்ஜ் நகரில் வசித்து வந்தவர் நிதின் குமாரி. விமான பணிப்பெண்ணான இவர் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இவரது மரணத்தில் மர்மம் நீடிக்கிறது.சென்னை ஜெ.ஜெ.நகர் கோல்டன் ஜார்ஜ் நகரில் வசித்து வந்தவர் நிதின் குமாரி. விமான பணிப்பெண்ணான இவர் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நிதின் குமாரி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. ஆனால் அவர் எப்படி கொல்லப்பட்டார் என்பதில் மர்மம் நீடிக்கிறது.நிதின்குமாரியின் சொந்த ஊர் பீகார். இவரது தந்தை விஜயபிரசாத், தாய் உஷா, தங்கை நிஸ்தா மற்றும் உறவினர்கள் பீகாரில் இருந்து சென்னை வந்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் நிதின் குமாரியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னையிலேயே அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.நிதின்குமாரியின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டதால் பிரேத பரிசோதனை முடிவில் அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. நிதின்குமாரிக்கு மது அருந்தும் பழக்கமும், புகை பிடிக்கும் பழக்கமும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். கடந்த 11 ஆண்டுகளாக பீகாரை சேர்ந்த ராஜாத்சிங் என்ற தொழில் அதிபரை காதலித்து வந்துள்ளார். அதே நேரத்தில் விமானத்தில் பயணம் செய்யும் வசதி படைத்த பணக்காரர்கள் சிலருடனும் நிதின் குமாரிக்கு பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே இவர்களில் யாராவது நிதின்குமாரியை சந்திப்பதற்காக வந்திருக்கலாம் என்றும், அப்போது ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

வாக்காளர்களுக்கு பணம்: குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ்; நடிகை ரோஜா தாக்கு

இந்தியசெய்திகள்

roja.jpgதெலுங்கு தேசம் மகளிர் அணி தலைவியும் நடிகையுமான ரோஜா ஆந்திர மாநிலம் சந்திரகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஆனாலும் அவர் தனக்கு ஓட்டு போட்ட வாக்காளர்களுக்கு கிராமம் கிராமமாக சென்று நன்றி கூறி வருகிறார். அவர் பாகாலா கிராமத்தில் நடந்த கூட்டத்தில் பேசும் போது கூறியதாவது:எனது சொந்த தொகுதியான சந்திரகிரியில் வெற்றி பெற்று விடுவேன் என்று மிகவும் நம்பி இருந்தேன். ஆனால் என்னை பணம் தோற்கடித்து விட்டது. காங்கிரஸ் கட்சியினர் கிராமம், கிராமமாக சென்று வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தனர்.காங்கிரசார் சில கிராமங்களில் ஊர் தலைவரை சந்தித்து, கிராமம் முழுவதற்கும் உள்ள ஓட்டுக்கு எவ்வளவு பணம் தர வேண்டும் என்று கேட்டு மொத்தமாக ரூ.5 லட்சம், ரூ.15 லட்சம் என்று பணத்தை மூட்டைகளில் கட்டி கொடுத்துள்ளனர்.

இதய ஆபரேஷன் செய்த 2 மாணவர்கள் பலி

இந்தியசெய்திகள்

12_14_00_isro_st0.jpgஅரசின், “இளம் சிறார் இதய பாதுகாப்பு” திட்டத்தில் இலவச இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட இரண்டு பள்ளிமாணவர்கள் இறந்தனர்.தமிழக அரசு, “இளம் சிறார் இதய பாதுகாப்பு திட்டத்தை” செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் இதய நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு, மாவட்ட மருத்துவத்துறை மூலம் “எக்கோ கார்டியோ கிராபி” சோதனைக்கு அனுப்பப்படுகின்றனர்.பரிசோதனை முடிவில் ஆபரேஷன் தேவை என அறியப்படும் குழந்தைகளுக்கு, ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான இதய அறுவைச் சிகிச்சை இலவசமாகவே செய்யப்படுகிறது. இத்திட்டத்தில், திண்டுக்கல் அருகே உள்ள குஜிலியம்பாறை ஒன்றியத்தில் செப்புருட்டுப்பட்டி சண்முகம் மகன் சதீஷ்குமார்(10), வேல்முருகன் மகன் முனியப்பன்(9), சேர்வைகாரன்பட்டியைச் சேர்ந்த பாண்டிமீனா(8), எஸ்.புதுக்கோட்டை ராஜேஷ்(12), குஜிலியம்பாறை விமல்ராஜ்(5) உட்பட எட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

8 வயது சிறுமிக்கும் தவளைக்கும் வினோத திருமணம்!

இந்தியசெய்திகள்

gifs2.gifவிழுப்புரம் தாலுகா கண்டமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் தவளைக்கும் சிறுமிக்கும் வினோத திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.விழுப்புரம் தாலுகா கண்டமங்கலம் அருகில் உள்ளது பள்ளிப்புதுப்பட்டு கிராமம். இந்த கிராமத்தில் பழங்காலத்தில் காலரா நோய் பரவியதாகவும், அப்போது சிவன் தவளை உருவும், அம்மன் சிறுமி உருவும் எடுத்து அவர்களுக்கு திருமணம் நடத்தினால் காலரா நோய் குணமாகும் என்று கூறியதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது.இந் நிலையில், அந்த கிராமத்தில் தவளைக்கும் சிறுமிக்கும் வினோத திருமண நிகழ்ச்சி நடந்தது.திருமணத்தை முன்னிட்டு, பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் வசிக்கும் சகோதர உறவினர்கள் கொண்ட குடும்பத்தினர் பெண் வீட்டாராகவும், மாமன் முறை குடும்பத்தினர் மாப்பிள்ளை வீட்டாராகவும் கருதப்பட்டனர்.

தமிழகத்தை நெருங்கும் புயல் சின்னம்-இன்று மாலை முதல் கன மழை

இந்தியசெய்திகள்

depression1250.jpgவங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று மாலை முதல் தமிழ கடலோரப் பகுதிகளில் கன மழை பெய்யும் எனவும் நாளை கடல் கொந்தளிப்பும், பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கன மழையும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.வங்கக் கடலின் தென் கிழக்கில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.தற்போது சென்னைக்கு தென் கிழக்கே 900 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டனத்திற்கு கிழக்கு தென் கிழக்கே 800 கிலோமீட்டர் தொலைவிலும் அது நிலை கொண்டுள்ளது.இதன் விளைவாக இன்று இரவு முதல் இந்தப் பகுதிகளில் கன மழை பெய்யும். கூடவே மணிக்கு 70 கிலோமீட்டர் அளவில் காற்றும் வீசக் கூடும்.

சென்னை: 2 வங்கிகளில் தீ- 8 பேர் மீட்பு

இந்தியசெய்திகள்

சென்னையில் இரண்டு வங்கிக் கட்டடங்களில் இன்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது. அதில் சிக்கிக் கொண்ட 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.சென்னை அண்ணா நகர் 2-வது அவென்யூவில் லட்சுமி விலாஸ் வங்கி உள்ளது. இது 3 மாடி கட்டிடம் ஆகும். இந்த வங்கியின் லாக்கர் அடித்தளத்தில் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது. தரைத் தளத்தில் ஸ்டிரைட் இன்போ கம்ப்யூட்டர் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இன்று அதிகாலை 2.45 மணிக்கு அந்த கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த ஊழியர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.இதை பார்த்த காவலாளி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். ஜெ.ஜெ. நகர், கீழ்ப்பாக்கம், கோயம் பேடு, எஸ்பிளனேடு பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அவர்களை மீட்க முயன்றனர்.

குளத்தில் கார் விழுந்ததில் மனைவி, மகனுடன் என்ஜீனியர் பலி

இந்தியசெய்திகள்

வேகமாக சென்ற கார் தடுமாறி குளத்தில் விழு்நததில் தூத்துக்குடி அனல் மின் நிலைய பொறியாளர், அவரது மனைவி, மகனுடன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.தூத்துக்குடி தெர்மல்நகர் குடியிருப்பில் வசித்து வந்தவர் சுடலைமுத்து மகன் சுடலையாண்டி (52). இவர் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் என்ஜினீயராக வேலை பார்த்தார். சுடலையாண்டி மற்றும் அவரது மனைவி சங்கரி (46), மகன்கள் சிவராம் (18), சுடர்சபரி (12) ஆகியோர் குடும்பத்துடன் திருமணவிழாவில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடியில் இருந்து திசையன்விளைக்கு காரில் சென்றனர்.திருமணவிழா முடிந்தவுடன் நேற்று இரவு அதே காரில் சுடலையாண்டி தனது குடும்பத்துடன் திசையன்விளையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்துகொண்டிருந்தார்.சுடலையாண்டி காரை ஓட்டினார். இரவு நேரம் குளிர்ந்த காற்று வீசியதால் காரின் ஜன்னல் கண்ணாடிகளை அடைத்திருந்தனர். முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த சிவராம் மட்டும் ஜன்னல் கண்ணாடியை திறந்து வைத்திருந்தார்.

மும்பை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு

இந்தியசெய்திகள்

கடந்த வாரம் மும்பையில் தாக்குதலுக்கு இலக்கான இடங்களில் ஒன்றான நகரின் பிரதான ரயில் நிலையத்தில் இருந்து, வெடி குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுச் செயலிழக்கச் செய்யப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.அதில் இருந்த வெடிமருந்து, தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பயன்படுத்தியதைப் போலவே இருந்தது என்றும் ஆனால் இந்த வெடிகுண்டு, தாக்குதலின் போது விட்டுச் செல்லப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகின்றது. மும்பை தாக்குதல்களைக் கையாண்ட விதம் குறித்து கடும் கண்டனங்களை எதிர்கொண்டுள்ள அதிகாரிகளை இந்தத் தகவல் மேலும் சங்கடத்துக்குள்ளாக்கும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் மிக மோசமான தாக்குதலுக்குள்ளான, தாஜ் மஹால் பெலஸ் ஹோட்டலுக்கு முன்னால் அரசு, பாதுகாப்பை கையாண்ட விதத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளனர்.

இந்தியாவிலும் விமானங்களைக் கடத்தி 9/11 தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டம்!

இந்தியசெய்திகள்

நியூயார்க் இரட்டை கோபுரத்தை விமானத்தைக் கடத்தித் தாக்கி அழித்தது போல இந்தியாவின் முக்கிய இலக்குகளை விமானம் மூலம் தாக்கி அழிக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக இந்திய விமானப்படை தலைமை தளபதி பாலி ஹோமி மேஜர் தெரிவித்துள்ளார்.கடற்படை தினத்தையொட்டி டெல்லி அமர்ஜவான் பகுதியில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் பாலி ஹோமி மேஜர்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நியூயார்க்கில் நடத்தியதைப் போன்ற வான் வழித் தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இது ஒரு எச்சரிக்கைத் தகவலின் அடிப்படையில் கிடைத்தது. அரசுக்கு இந்த எச்சரிக்கை வந்துள்ளது. அதை சந்திக்க விமானப்படை தயாராக உள்ளது. சமீபத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணியுடன் முப்படைத் தளபதிகளும் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தின் போது இதுகுறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.நேற்று நடந்த கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது.

இலங்கையில் போர் நிறுத்தத்திற்கு மத்திய அரசாங்கம் வலியுறுத்தும்- தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.க்களிடமும் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி

இந்தியசெய்திகள்

manmohan_singh.gifஇலங்கையில் நடைபெற்றுவரும் போரை நிறுத்துவதற்கு மத்திய அரசாங்கம் வலியுறுத்தும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார். இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளைப் போக்கும் வகையில் உடனடி போர் நிறுத்தத்துக்கு இலங்கை அரசை இந்திய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் நேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கைவிடுத்தனர்.இதனையடுத்தே இலங்கையில் போரை நிறுத்தவும் தமிழ் மக்கள் அமைதியாக வாழவும் ஏற்ற சூழலை ஏற்படுத்துமாறு இலங்கை அரசிடம் வலியுறுத்தப்படும் என்று பிரமதர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். அண்மையில் தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கையில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழு பிரதமரை சந்திப்பது என தீர்மானிக்கப்பட்டது.