12 July 2009
உலகசெய்திகள்
வலி நிவாரணியான டெமரால் மற்றும் ஹெராயின் கலந்த மெத்தடான் ஆகிய மருந்துகளை அதிக அளவில் கலந்து சாப்பிட்டு வந்ததே, பாப் உலகின் முடி சூடா மன்னன் மைக்கேல் ஜாக்சன் மரணத்திற்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. ஜாக்சன் திடீரென மரணமடைந்தது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது ரசிகர்கள் பெரும் சோகமடைந்தனர். இந்த நிலையில் ஜாக்சன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை. அவரது உடலில் மொத்தம் 2 முறை போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது. தனது மகன் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளதாக திடீரென கூறிய தந்தை ஜோசப், 3வது போஸ்ட் மார்ட்டம் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால் அதை குடும்பத்தினர் நிராகரித்து விட்டனர். இந்த நிலையில், ஜாக்சன் மரணத்திற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்த குழுவின் முதல் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை, லாஸ் ஏஞ்சலெஸ் போலீஸாரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், யாருக்கும் உடனடி மரணத்தை ஏற்படுத்தும் வகையிலான அபாயகரமான மருந்துகளை ஜாக்சன் சாப்பிட்டுள்ளார். இதுவே அவருக்கு எமனாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 July 2009
உலகசெய்திகள்
சுகாதார தேவைகளுக்காக அதிக பணத்தை செலவிடும் கைத்தொழில் மய நாடுகளின் வரிசையில் சுவிட்சர்லாந்து மூன்றாம் நிலையை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தின் மொத்த தேசிய உற்பத்தியில் 10.8 வீதம் சுகாதார தேவைகளுக்காக செலவிடப்படுவதாக பரிசை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஓ.ஈ.சீ.டி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறெனினும், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய கைத்தொழில் மய நாடுகள் சுவிட்சர்லாந்தை விடவும் அதிகளவு பணத்தை சுகாதார தேவைகளுக்காக செலவிடுவதாகக் குறிப்பிடப்படுகிறது. ஐக்கிய அமெரிக்கா மொத்த தேசிய உற்பத்தியில் 16 வீதத்தையும், பிரான்ஸ் மொத்த தேசிய உற்பத்தியில் 11 வீதத்தையும் சுகாதார தேவைகளுக்காக செலவிடுகின்றன. மேலும், சுவிட்சர்லாந்து மருத்துவ சேவை அதிக ஆளணி வளத்தை கொண்டமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
29 June 2009
உலகசெய்திகள்
இரான் அரசால் கைது செய்யப்பட்ட தெஹ்ரானில் இருக்கின்ற பிரிட்டிஷ் தூதரகத்தில் பணிபுரிந்த இரான் பணியாளர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை செயலர் டேவிட் மிலிபாண்ட் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த இரான் அதிபர் தேர்தலை தொடர்ந்து ஏற்பட்ட ஸ்திரமற்ற நிலைக்கு இவர்கள் காரணம் என்று குற்றம் சுமத்தி இவர்கள் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முதலில் ஒன்பது பணியாளர்கள் பிடிக்கப்பட்டதாகவும், இவர்களில் எத்தனை பேர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை என்று டேவிட் மிலிபாண்ட் கூறியுள்ளார். இரானின் இந்த செயல் சற்றும் ஏற்க முடியாத ஒன்று என்றும் இது வம்புக்கிழுக்கும் ஒரு செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.
தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற வன்முறைக்கு அடித்தளமிட்டவர்கள் மேற்கத்தைய நாடுகள் தான் என்று இரானிய அதிகாரிகள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.
28 June 2009
உலகசெய்திகள்
மைக்கல் ஜாக்சன் மரணத்துக்கு யார் காரணம் என்ற பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. பொப் இசை உலகின் முடி சூடா மன்னனாக விளங்கிய மைக் கல் ஜாக்சன் மார டைப்பால் மரணம் அடைந்தார். அவர் இய ற்கையான மரணம் அடைந்தா ரென்று கூறப்பட்டாலும், அவரது மரணத்துக்கு வேறு சிலரும் கார ணமாக இருந்ததாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அவ ரது மரணத்தின் உண் மையான காரணம் தெரிய வரும். மைக்கல் ஜாக்சன் நடன பயிற்சியின் போது பலமுறை காயமடைந்து உள்ளார். எலும்பு முறிவு, கால் உடைப்பு போன்ற வைகளால் காயம் ஏற்பட்டுள்ளது. அதற் காக அவர் நிறைய வலி மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். நடனத்துடன் கூடிய இசை நிகழ்ச்சிகளை அவர் தொடர்ந்து நடத்த வேண்டியிருந்த தால், வலியை மறக்க அவர் இந்த மாத் திரைகள் மற்றும் மருந்துக்கு அடிமையானார். ஆகவே, அவரை நிறைய பணம் சம்பாதிக்க வைக்க வேண்டுமென்ற பேராசையில் அவருடன் இருந்தவர்கள் அதிக அளவில் வலி மாத்திரைகளை சாப்பிட வைத்ததாகவும், இதன் காரணமாக அவர் மரணத்தை தழுவியதாகவும் மைக்கல் ஜாக்சனின் வக்கீல் பிரயன் ஒக்ஸ்மேன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது:-

28 June 2009
உலகசெய்திகள்
ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பக்கத்தான் அரசாங்கம் அமல்படுத்திய மக்கள் நலன் பேணும் கொள்கைகள் அனைத்தும் தற்போதைய பாரிசான் அரசாங்கத்தால் அழிக்கப்படுவதாகத் தெரிகிறது. பெப்ரவரி மாதத்தில் பேராக் மாநில மந்திரி புசாராக ஜாம்ரி அப்துல் காடிர் பதவி ஏற்றுக்கொண்ட போது பக்கத்தான் அரசாங்கம் அதன் 10 மாத கால ஆட்சியின் போது அமல்படுத்திய மக்கள் நலன் பேணும் கொள்கைகள் தொடரப்படும் என்று அவர் கூறியதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், அந்த வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை. ஒன்பது மக்கள் நலன் கொள்கைகள் நிறுத்தப்பட்டு விட்டன அல்லது ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. பக்கத்தான் அரசாங்கம் அமலாக்கிய கீழ்க்காணும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து ஜசெகவின் மாநில செயலாளர் ங்கா கோர் மிங் ஏமாற்றமடைந்துள்ளார்:

28 June 2009
உலகசெய்திகள்
அமெரிக்கா பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணத்தை பற்றி செய்தி அறிய இணயத்தில் அதிக அளவு கூகிள் தளத்தை பயன்படுத்தியதால் கூகிள் செய்தி தளத்திற்கான சர்வர்கள் அறை மணி நேரம் ஸ்தம்பித்து விட்டது. இதனால் கூகிள் சர்வர் சிறிது நேரம் செய்திகளை அளிப்பதில் சிறிது தடங்கல் ஏற்பட்டது. இதே போல் தற்பொழுது அதிக அளவில் பிரபலமாகி வரும் (twitter) இணையதளமும் ஸ்தம்பித்து விட்டது . இங்கிலாந்து நாட்டை சேர்ந்த (B.B.C) இணையத்தளம் இன்று நாற்பத்தி ஆறு சதவிகிதம் வரை டிராபிக் உயர்ந்துள்ளது என்று அறிவித்துள்ளது . செய்திக்காக உலக அளவில் பிரபலாமான இணையதளங்களிலும் இதே நிலைமை தான்.அந்த நபரின் இறந்த செய்தியை முதலில் அறிவித்தது (www.tmz.com)என்ற இணையத்தளம் .இந்த செய்தி படி படியாக சோசியல் நெட்வொர்க் தளங்களில் பரவி பின்பு வலைத்தளங்கள் மூலமாக உலகம் முழுதும் அதிக அளவில் சென்றடைந்தது. இன்று கூகிள் (Trends) அதிக் அளவு தேடப்பட்ட தகவலும் மறைந்த பாப் பாடகரை பற்றியதே.இன்று முழுவதும் இணையம் மூலம் விவாதிக்கப்படும் பத்து முக்கியமான தலைப்புகளும் மைக்கேல் ஜாக்சன் பற்றியதே.
26 June 2009
உலகசெய்திகள்
ஜப்பானில் ‘ஸ்வைன் புளூ’ எனப்படும் பன்றிக்காய்ச்சல் நோய் தாக்குதலுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1000 த்தை தொட்டுள்ளது. டோக்கியோவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று அனுமதிக்கப்பட்ட இரண்டு பேருக்கு பன்றிக் காயச்சல் நோய் தாக்கியிருப்பது உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, இந்நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தொட்டுள்ளதாக ஜப்பான் சுகாதாரத் துறை அமைசக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதே சமயம் இதுவரை பன்றிக்காய்ச்சல் நோய்க்கு ஜப்பானில் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.பன்றிக்காய்ச்சல் நோய்க்கு உலகம் முழுவதும் 109 நாடுகளில் இதுவரை 55,867 பேர் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும், 238 பேர் இந்நோயால் உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு ( World health organaisation ) அறிவித்துள்ளது.
26 June 2009
உலகசெய்திகள்
வடகொரியாவை சுற்றி அணு ஆயுத போர் மேகம் சூழ்ந்துள்ளதாகவும், அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்றும் வட கொரியா எச்சரித்துள்ளது. சியோலிலிருந்து வெளியாகும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘ரோடாங் சின்மண்’ என்ற பத்திரிகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. அமெரிக்காவும், அதன் கூட்டாளி நாடான தென்கொரியாவும் புதிய அணு ஆயுத போரை தூண்டுவதற்கு முயற்சித்து வருகின்றனர்.கொரிய தீபகற்பத்தை அணு ஆயுத போர் மேகம் சூழ்ந்துள்ளதால் , போர்மேகம் தொட்டு தொட்டு செல்லும் சூழல் நிலவுகிறது. எந்த நேரத்திலும் புதிய போர் வெடிக்கலாம் என்ற காரணத்தால், வடகொரியாவும் தனது அணு ஆயுத பலத்தை தொடர்ந்து பெருக்கிக் கொள்ளும். வடகொரியாவுக்கு எதிரான கொள்கைகளை அமெரிக்கா தொடர்ந்து கடைபிடிக்கும் வரை வடகொரியா தனது அணு ஆயுதங்களை கைவிடாது மாறாக அந்த பலத்தை அதிகரிக்கத்தான் செய்யும் என்றும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.
23 June 2009
உலகசெய்திகள்
அமெரிக்காவின் வஷிங்டனில் இடம்பெற்ற பாரிய ரயில் விபத்தொன்றில் 6 பேர் கொல்லப்பட்டதுடன், 70 காயமடைந்துள்ளனர்.ஒன்றன் பின் ஒன்றாக வந்த இரண்டு சப்வே ரயில்கள் மோதிக்கொண்டதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கடந்த திங்கட்கிழமை இரவு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.இவ்விபத்துக்குரிய காரணம், இதுவரையில் கண்டறியப்படவில்லை. எனினும், விபத்துக்குள்ள ரயில் ஒன்றினை செலுத்தியது பெண் சாரதி ஆவார்.
அவரும் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டுள்ளவர்களில் இரண்டு ரயில்களினதும் பயணிகளும் அடங்குவர்.கடந்த 33 வருடங்களில் மெற்றோ ரயில் சேவைகளில் இல்டம்பெற்ற மிக மோசமான விபத்து இதுவென தெரிவிக்கப்படுகிறது.சுமார் 200 க்கு மேற்பட்ட தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.இந்த ரயில் விபத்து சம்பவத்திற்காக காரணங்களை கண்டறியும் விசாரணைகை, வஷிங்டன் பொலிசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
22 June 2009
உலகசெய்திகள்
உலகிலேயே மிகவும் வயதானவராக வாழ்ந்த 113 வயதுடைய முதியவர் ஜப்பானில் மரணமடைந்தார். ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள கியூஷு தீவில் வசித்து வந்த டனாபே, அவர் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும்போது, தூக்கத்திலேயே உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 1895 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதியன்று பிறந்த டனாபேவுக்கு மொத்தம் 8 பிள்ளைகள்.இதில் 5 பேர் மகன்கள் ; 3 பேர் மகள்கள். நில அளவையாளராக பணியாற்றிய டனாபேவுக்கு மொத்தம் 25 பேரக் குழந்தைகளும், 53 கொள்ளுப் பேரக் குழந்தைகளும் , 6 எள்ளுப்பேரக் குழந்தைகளும் உள்ளனர். இவரது 111 ஆவது வயதிலேயே, இவரது பெயர் உலகின் மிக அதிக வயதானவர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது.
18 June 2009
உலகசெய்திகள்
தென் கொரியாவில் நடந்த உலகக் கோப்பைக்கான தகுதி பெறும் போட்டி ஒன்றில் கலந்துகொண்ட இரானிய தேசிய கால்பந்துக் குழுவினரில் ஆறு பேர், இந்தப் போட்டியின்போது இரான் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் ஹொசெயின் முசாவி தேர்தல் பிரச்சாரத்தின்போது பயன்படுத்திய பச்சை நிறத்திலான கைப்பட்டைகளை அணிந்திருந்தனர். அணியின் கேப்டன் மெஹ்தி மஹ்டவிகியா, ஆட்டத்தின் இடைவேளைக்குப் பின்னரும் இந்த கைப்பட்டையை அணிந்திருந்தார். இந்த போட்டி இரானிய அரச தொலைக்காட்சியில் நடக்கும்போதே காட்டப்பட்டது. எதிர்க்கட்சிக்கு ஆதரவு இருப்பதைக் காட்டும் மற்றுமொரு நிகழ்வில், இரானின் பிரபல பாடகர்களில் ஒருவரான, மொஹமது ரேஸா ஷாஜாரியான், 1979 புரட்சிக்குப் பிந்தைய தனது பாடல்களை அரச தொலைக்காட்சி தற்போதைய நேரத்தில் ஒலிபரப்புவதை நிறுத்துமாறு கோரியிருப்பதாகக் கூறுகிறார்.
18 June 2009
உலகசெய்திகள்
ஈரானில் ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறான ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் எதிர்கட்சி வேட்பாளரின் ஆதரவாளர்கள் கலந்துகொண்ட மற்றுமொரு மிகப்பெரும் பேரணி தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த திங்கட்கிழமை நடந்த பேரணியை நேற்று நடைபெற்ற பேரணி பாரிய அளவில் இடம்பெற்றதா பேரணியை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்கட்சியினர் நடத்தும் பேரணிகளுக்கு வெளிநாட்டு செய்தியாளர்கள் செல்லக்கூடாது என்று புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, அரசின் ஆதரவாளர்களும் டெஹ்ரானில் பேரணி ஒன்றை நடத்தியுள்ளதாகவும், எதிர்கட்சி ஆதரவாளர்களின் பேரணிகளின் அளவுக்கு ஆளும்கட்சி ஆதரவாளர்களின் பேரணி அமையவில்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
18 June 2009
உலகசெய்திகள்
ஜூன் வெளியான புதிய ஆய்வுத் தகவல் ஒன்று சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் தமது சுற்றுவட்டப் பாதையி்ன் கலகம் காரணமாக இந்தக் கணத்தில் இருந்து இன்னமும் எவ்வளவு காலத்தில் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளக் கூடும் என்ற பல ஆச்சரியமான முடிவுகளைத் தந்துள்ளது. 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன் உருவானதாக நம்பப்படும் நமது சூரியக் குடும்பத்தின் மையசக்தியான சூரியன் இன்னும் 5 பில்லியன் வருடங்களில் சிவப்பு இராட்சதனாக மாறி (அதாவது Redgiant நட்சத்திரமாக விரிவடைந்து) பூமி உட்பட உள் வட்டப் பாதையிலுள்ள புதன்,செவ்வாய்,வெள்ளி ஆகிய கிரகங்களையும் விழுங்கி விடும் என்பது ஏற்கனேவே வானவியலாளர்களுக்குத் தெரிந்த விடயம்.

15 June 2009
உலகசெய்திகள்
உலகில் வாழ்வதற்கு மிகவும் உசிதமான நகரமாக சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மொனோகல் என்ற உலகப் புகழ்பெற்ற சஞ்சிகையினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் போது சுவிட்சர்லாந்தின் வர்த்தகத் தலைநகரான சூரிச் நகரிற்கு அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
சுவிட்சர்லாந்தின் மற்றொரு முக்கிய நகரமான ஜெனீவா இந்தப் பட்டியலில் 24ம் இடத்தை வகிக்கின்றது. பொதுத்துறை போக்குவரத்து, பொழுது போக்கு அம்சங்கள், சுழற் பாதுகாப்பு, சிறந்த வர்த்தகக் கலாச்சாரம் போன்ற காரணிகளில் சூரிச் நனி சிறந்து விளங்குவதாக குறித்த சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வறெனினும், இன்னும் சில துறைகளில் அபிவிருத்தி ஏற்படுத்தப்பட வேண்டுமென சுவிட்சர்லாந்துப் பிரஜைகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
14 June 2009
உலகசெய்திகள்
சுவிட்சர்லாந்தின் உள்துறை அமைச்சரும் சிரேஸ் அரசியல் தலைவருமான பஸ்கால் கொச்சுபின் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.பஸ்கால் கொச்சுப்பின் பதவி விலகுவதாக விடுக்கப்பட்ட அறிவிப்பு ஆச்சரியப்படுவதற்கு இல்லை என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.தற்போதைய உள்துறை அமைச்சர் பஸ்கால் கொச்சுபின் சுவிட்சர்லாந்தின் சுழற்சி முறை ஜனாதிபதியாக கடந்த வருடம் கடமையாற்றியிருந்தார்.கடந்த 11 வருடங்களாக பாஸ்கால் கொச்சுப்பின் அமைச்சரவையில் அங்கம் வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.67 வயதான கொச்சுபின் அரசியலிலிருந்து ஒய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.தற்கால சுவிட்சர்லாந்து அரசியல் வரலாற்றில் கொச்சுபின் மிகவும் பிரபலமான நபராகத் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
30 May 2009
உலகசெய்திகள்
அமெரிக்காவில் காளன் கவுண்டி பகுதியை சேர்ந்தவர் பிலிப். 53 வயதாகும் இவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 2005-ம் ஆண்டு இது பற்றி அவருக்கு தெரிய வந்தது. எய்ட்ஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அவர் மனநலம் சற்று பாதிக்கப் பட்டிருந்தார். வேண்டும் என்றே பெண்களிடம் உறவு கொண்டு எய்ட்ஸ் நோயை பரப்பினார்.6 பெண்களிடம் அவர் உறவு கொண்டார். இதனால் அந்த 6 பெண்களுக்கும் எய்ட்ஸ் நோய் தாக்கியது. பிலிப்பின் இந்த திட்டமிட்ட செய்கை பற்றி போலீசாருக்கு தெரிய வந்தது. அவர்கள் பிலிப்பை கைது செய்து காளின் கவுண்டி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி பிலிப்புக்கு 45 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
28 May 2009
உலகசெய்திகள்

சுவிட்சர்லாந்தில் குடி போதையுடன் வாகனங்களைச் செலுத்துவோரை கண்டு பிடித்து தண்டனை வழங்கும் விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. சுவிட்சர்லாந்து பொலிஸாரும், பாதுகாப்பு நிறுவனங்களும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளன.குடிபோதையினால் வாகனங்களைச் செலுத்துவதனால் ஏற்படும் விபத்துக்களில் வருடமொன்றுக்கு 15 வீதமானோர் கொல்லப்படுவதாகவும், காயமடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.வாகனங்களை செலுத்தும் போது இரத்தத்தில் காணப்பட வேண்டிய அல்ககோலின் அளவு குறித்த சட்டத்தில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறான சட்டத் தளர்வுகள் குடிபோதையில் வாகனத்தைச் செலுத்துவோருக்கு சாதகமாக அமையக் கூடுமென ஏனைய ஐரோப்பிய நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.குடிபோதையில் வாகனத்தைச் செலுத்தியதன் காரணமாக கடந்த வருடத்தில் மட்டும் 700 மரணம் மற்றும் படுகாயமடைந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
26 May 2009
குறுஞ்செய்தி, உலகசெய்திகள்
மலேசிய வானொலி இந்தியப் பகுதி முன்னாள் தலைவர் இரா.பாலக்கிருஷ்ணன் நேற்று நள்ளிரவு 12.05 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 73. கடந்த ஒராண்டு காலமாக நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாலா நேற்று உறக்கத்திலேயே அமைதியாக மரணத்தை தழுவினார்.மலேசிய ஒலிபரப்பு துறையின் முன்னோடியான இவர். வானொலி மூலம் இந்திய சமுதாயத்திற்கு பல அரிய சேவைகளை செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல், மொழி, இனம், கலை, கலாச்சாரம், பண்பாடு, சமயம் ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துக் கூறியவர் பாலா. அவரது இழப்பு இந்திய சமுதாயத்திற்கு ஈடு செய்ய முடியாதது. அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.
25 May 2009
உலகசெய்திகள்
சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோர் தொடர்பிலான சட்ட திட்டங்கள் கடுமையான வகையில் அமுல்படுத்தப்பட உள்ளதாக நீதியமைச்சர் எவலின் விட்மிர் தெரிவித்துள்ளார்.அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பிப்போர் எளிமையான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.புகலிடம் கோரி நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மீண்டும் விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.கடந்த வருடத்தில் 1428 பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் புகலிடம் கோரி விண்ணப்பித்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.மேலும், இலங்கையிலிருந்து அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் புகலிடம் கோரி விண்ணப்பிக்கக் கூடுமென அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.