உனது குரல்(கவிதை)
24 June 2009 கவிதைகள்![]()
எப்போதோ
நீ விட்டுச் சென்ற
குரலின் விரல்களை
இன்னமும்
இறுகப் பற்றிக் கொண்டு நடக்கிறேன்.
பார்வையற்ற ஒருவனின்
பாதங்களுக்குக்
கீழே
பரவும் வெளிச்சம் போல
பயனற்று வழிகிறது
என் எதிர்பார்ப்பின் கதறல்.

![]()
எப்போதோ
நீ விட்டுச் சென்ற
குரலின் விரல்களை
இன்னமும்
இறுகப் பற்றிக் கொண்டு நடக்கிறேன்.
பார்வையற்ற ஒருவனின்
பாதங்களுக்குக்
கீழே
பரவும் வெளிச்சம் போல
பயனற்று வழிகிறது
என் எதிர்பார்ப்பின் கதறல்.


வான் வெளிச்சத்தில்
அன்பின் வடிவங்களாய்
மின்னுகின்ற நட்பின்
விரிசலை சரி செய்வது
சமாதானமா?
உறவின் தொடர்
கணவன் மனைவிக்குள்
கண்ணிமைக்ககும் கடமைகள்
மீறும் நேரம்
சமன் செய்வது
சமாதானமா?


அம்மா என்ற பாசையின்
அழியாத செல்வம்
அதரத்தில் உச்சரிக்கும்
அமிர்த வார்த்தை
அன்பு என்ற ஆலயத்தின்
அர்ச்சனை மந்திரம்
அறிவை ஊட்டும்
அகராதி ஊற்று

அழகான கவிதை போன்றது
உன் இதழ்கள்,
வாசிக்கும் வாசகனாக நான்.
புன்னகை பூ பூக்கும்
பூந்தோட்டம் உன் இதழ்கள்,
தேன் குடிக்கும் வண்டாக நான்.
இன்னிசை தரும் வீணை
உன் இதழ்கள்,
இதழ் மேவும் கலைஞனாக நான்.
நம் காதல் யுத்தத்தில்
இதழ்களே போர்க்களம்,
முத்தங்களே ஆயுதம்.
உயிர் உணர்ந்த தருணம் அது,
ஓர் அந்திமாலைப் பொழுதில்
காதல் சொன்ன முதல் நொடியும்,
நீ கொடுத்த முதல் முத்தமும்.
எனை, நீ பிரிந்தாலும்
என் ஒவ்வொரு இதயத்துடிப்பையும்,
உன் நினைவுகளே முத்தமிடுகின்றது.
—மயூரதன்—
காத்திருங்கள் கார்த்திகை 27வரை
தமிழீழத்துடன் தலைவன் வரும்வரை..
உண்மையின் பாசை புரியாதவர்கள் நீங்கள்
அதை உணர்ந்திட விரும்ப
நினைக்காதவர்கள் நீங்கள் - அதனால்
காத்திருங்கள் கார்த்திகை 27வரை
தமிழீழத்துடன் தலைவன் வரும்வரை..
மற்றவர்கள் கண்ணீரை
ரசித்தவர்கள் நீங்கள்
அதை உங்கள் கண்ணில் வர
மறுத்தவர்கள் நீங்கள் - அதனால்
காத்திருங்கள் கார்த்திகை 27வரை
தமிழீழத்துடன் தலைவன் வரும்வரை….
அந்தச் சிறுகுன்றின் மீது ஏறி இப்போது கோணமலையை அடைந்திருந்தோம். மலைப்பதையின் இருமருங்கிலும் பச்சை பசேலென்றிருந்த காட்டையும் அந்தக் காடுகளின் பின்னால் ஒளிந்திருந்த இராணுவ முகாம்களையும் மருட்சியோடு பார்த்தவண்ணம் மலை உச்சியை அடைந்தோம். முதலில் தென்பட்டது இராணவன் வெட்டு. இராணவனின் தாயார் தென்னிலங்கையிலிருந்து தினமும் இங்கு சிவனைத் தரிசிக்கவருவாராம். தாய்படும் பாட்டைக் கண்டு மனமுருகிய இராணவன் மலையையே பெயர்த்து தான் இருக்குமிடத்தில் வைக்கமுயன்றான். அதனால் தான் மலையில் பெரியவெட்டு உண்டானது என்ற புராணக்கதை தான் நினைவில் வந்தது. கோவில் எந்தப்பகட்டும் இல்லாமல் எளிமையாக அழகாக இருந்தது.

விமானம் பலாலியை நெருங்கிக் கொண்டிருந்தது. ” இதோ இன்னும் அரைமணி நேரத்தில் என் தாயக மண்ணைத் தொட்டுவிடுவேன். 1993 இல் ஊரை விட்டுக் கனடா போனபின்னர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து இப்போது தான் ஊருக்குத் திரும்பிவருகிறேன். எத்தனையாண்டு கால ஏக்கம். அம்மாவைப் பார்க்கவேண்டும். சகோதரிகள்.. அவர்களின் குழந்தைகள். அப்புறம்.. மீரா. மீரா அவளை எப்போது முதல் முதலில் பார்த்தேன்? ” மெல்லக் கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டேன். நினைவுகள் மெல்லச் சுழன்றன. 1990 ஆம் ஆண்டு நான் 11ம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தத போது சண்டிலிப்பாயிலிருந்து மீராவின் குடும்பம் இடம்பெயர்ந்து எங்கள் வீட்டுக்கு அருகில் குடிபுகுந்திருந்தது. மீராவுக்கு 2 அக்காமார். ஒருவர் பல்கலைக்கழத்தில் படித்துக் கொண்டிருந்தார். மற்றவர் உயர்தரத் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தார். மீரா நேர்வகிடு எடுத்து இரட்டைப்பின்னல் போட்டு மடிப்புக் குலையாத வெள்ளைச்சீருடையில் பள்ளிக்கூடம் வருவாள். தெற்றுப்பல் தெரிய அவள் சிரிக்கும் போது தேவதை போல் இருப்பாள். வகுப்பு இடைவேளையின் போதும் அவள் அரட்டையடித்து நான் பார்த்ததில்லை.


சலனம் செய்தாய் என் மனதில்
சாந்தி கண்டேன் அவள் நினைவில்
சேர்ந்தாள் இரண்டற என்கூட
செப்பிவிட்டாள் யானுனதே என்றே
நம்பி யானும் தொடர்ந்தேனே
நம்பு மோசம் புரியாள் என்றே
நடந்ததோ மாற்றம் அறிவீரோ
நம்ப மாட்டீர் சொன்ihல் யான்
துணிந்து செய்தாள் அசை;செயலை
தவிக்கவே விட்டாள் என்னதை;தனியாய்
தாங்கா தென்றே அவள் அறிவாள்
தகும் என்றே நினதை;திட்டாளோ?

சுழன்றடிக்கும் காற்றே கொஞ்ஞம் நில்…
பண்புடைய மனிதர் உண்டோ சொல்.
கரை தொடும் அலையே இங்கே பார்..
குறை காண தேசமொன்றைத் தேடித்தா..
ஒளிர்கின்ற மின்மினியே கீழே பார்…
என் தனிமைக்கு நீயும் துணையாய் வா.
மேனி தொடும் பூங்காற்றே மெதுவாய் வா..
பெண் கண்ணீரை நீயும் துடைத்துப் போ.
பூக்கின்ற புது மலரே இங்கே வா..
பூவையின் மேனிக்கு வாசம் தா.
முன் சிரித்து
உள்ளத்தில் ஒன்றை வைத்து
உண்மையில்லா வார்த்தைகளை
பேசுகின்ற மனிதர்களோ
நாமெல்லாம் ஓரே இனம் ஆனால்
என் குலம் தான் உயர்ந்தது
நாமேல்லாம் இறைவனின் பிள்ளைகள்
ஆனால் எங்கள் கடவுள் உயர்ந்தவர்
அன்பென்றும்
பண்பென்றும் செல்லிக்கொண்டு
வேஷம் போடும் சுயநலவாதிகளோ
எது உண்மை ?
எது பொய்?
இதைவிட எது நன்மை
என்று பார்க்கும் மனிதர்களோ
துன்பங்களையும் ,
துரோகங்களையும்
அவமானங்களையும்
கண்டு வாடிப்போகாதே மனமே…
எதற்காகப் பிறந்தேன்
என்று தெரியவில்லை
அன்பு செலுத்த மறக்கும்
உனக்கு அன்பு செலுத்தவா?
நம்பிக்கையில்லாத உன் வாழ்வில்
நம்பிக்கை தான் வாழ்க்கை என்று
வாழ்ந்து காட்டவா?
யாருக்காகவும் இதுவரை கண்ணீர் வடித்ததில்லை
கல்மனம் கொண்ட உனக்காக
கண்ணீர் வடிக்கவா?
என் எதிர்காலத்திற்காக
கடவுளை வணங்கியதில்லை
உன் எதிர்காலம் நன்றாக
அமைய கடவுளை வணங்கவா?
ஏனடா நான் இப்படி?
இது என் காதலின் ஆரம்பமா?
இல்லை என் அன்பின் இறுதியா?
உண்மை நேசத்தைப் பழிக்கின்ற
உதவிகள் செய்வதைத் தடுக்கின்ற
உள்ளத்து வலியைத் தொடர்கின்ற
உண்மைகளை என்றும் மறைக்கின்ற
உயிர் நட்பை கூட நின்று பிரிக்கின்ற
ஊனமுற்றோர் கண்டால் சிரிக்கின்ற
உதட்டாலே மாயங்கள் புரிகின்ற
உயிர் வரைக்கும் வேதனை தருகின்ற
உருவத்தில் மனிதர்கள் என்கின்ற
உடம்புகள் வாழ்ந்தும் ஏது பயன்?
இப்படிக்குப் பூங்காற்று.
எப்படியோ நிகழ்ந்துவிடுகிறது
எதிர்பாராக் கொடுமைகள்
கண்ணெதிரே கண்டவுயிர்
கணப்பொழுதில் காலனோடு
விழியோரம் தொங்கிநிற்கும்
விழிநீரும் உணர்த்திச்செல்லும்
வேரினை பிடுங்கிச் சென்ற
வேதனை உரக்கச் சொல்லும்
வலிகொண்ட மனதிற்கு
மருந்தென்ன? மாற்றென்ன?
விழிமூடிக் கிடந்தாலும்
விட்டத்தை முறைத்தாலும்
வார்த்தைகள் விலகிநிற்கும்
வலியினை உணர்த்துதற்கு
வருடங்கள் உருண்டாலும்
வலியின் வாசம் மட்டும்
விழிக்கருவில் வடு போல
விலகாமல் என்றென்றும்..
கண்களுக்கு காவியம் நீ…
செவிகளுக்கு இன்னிசை நீ …
நாவிற்கு அறுசுவை நீ …
மார்கழியின் மறுவடிவம் நீ…
சித்திரையின் எதிர்பதம் நீ…
இயற்கையின் வரம் நீ…
எங்களின் தவம் நீ…
மலைகளின் கூந்தல் நீ…
மனைவியை மறக்கச்செய்பவலும் நீ …
மழையின் மகத்துவம் நீ …
அருவியின் அற்புதம் நீ…
சாரலின் அழகு ….
மலையிலா? .. அருவியிலா?
நிச்சயம் சொல்வேன்
சத்தியம் செய்வேன்
சாரலே…
நீ தான் அழகு….
உன் செல்ல கோபத்திற்காக
எத்தனை முறை வேண்டுமானாலும்
முட்டாளாகத் தயார்….
என் உயிரில் பாதி
உன்னிடமும் மீதியை
உன் வீட்டோர தும்பைப்பூக்களை சுற்றிவரும்
பாட்டாம்பூச்சிகளிடமும் வைத்திருக்கிறேன்….
நீ நட்சத்திரங்களை ரசித்திருக்கும்
ஓர் மொட்டைமாடிப் பனியிரவில்
நான் உன்மீதான காதலை சொன்னேன்….
நீ நட்சத்திரங்களை பூவாக்கித் தலைசூடி
நிலவாய் சிரித்தாய்…
நான் பைத்தியமானேன்…
நீ கனவுகளை கொடுத்து
என் நினைவுகளை எடுத்துப்போனாய்…
என் உறவுகள் என்னை ஆச்சர்யமாய் பார்க்கிறது
நான் உன்னைக் காதலித்துக் கொண்டிருக்கிறேன்…
நீ என் நாட்களை நிரப்பிவிடுகிறாய்
நான் தேன் குடித்த வண்டாய்
சுற்றிக் கொண்டிருக்கிறேன்….
நீ எதார்த்தமாய் திரும்பினாலும்
நான் என்னை பார்ப்பதாய்
நினைத்துக் கொள்வேன்
அது என்னை வாழவைக்கிறது….
துள்ளி நான் புவியில்
துளிர்த்த நாள் முதலாய்
எழுந்த மோகமிது
பள்ளி படித்த வேளையிலும்
தமிழ் நினைத்து வேகும்
மொழியின் தாகமிது
தள்ளி வைத்து போகும்படி
தனிவிதி சொன்ன போதும்
தாளாது வளர்ந்த பாசமிது
எள்ளிப் பகைவர் நகைத்தாலும்
என்றும் தணியாத தாகமிது
எந்தன் மொழிமீது கொண்ட மோகமது
முள்ளில் கட்டியெனை வதைத்தாலும்
முற்றத்தில் பணத்தை யிறைத்தாலும்
முடியாது யாராலும் மூடிவிட இத்தீயை
கிள்ளி பார்க்கும் உணர்வல்ல
உதிரத்தில் உறைந்த நிறமிது
உயிரோடு கலந்த தமிழிது
கள்ளி யவள் மீது கொண்ட காதல்
சொல்லிக் கவிபாடும் போதும்
நல்ல தமிழ் வந்து மோதும்
புள்ளி போல நான் மறைந்து
தொலைது}ரம் போனாலும்
தமிழ் மெல்லினக் குற்றாவேன்
சொல்லி நான் முடிக்கும் வேளை
தமிழ் அன்னை அடிபணிந்து
தமிழ் தமிழ் தமிழெனச் சுவாசிப்பேன்
இல்லாத ஒன்றைத் தேடி
நில்லாத உலகில் ஓடி
செல்லாத இடங்கள் நாடி
கல்லாத பாடம் கற்றோம்
பொல்லாத எண்ணம் பெருகி
பொன்னான பொழுதை இழந்து
பொருந்தாத வேடம் புனைந்து
புதிதாக எதனைக் கண்டோம்
சொல்லாத எண்ணம் கோடி
சொன்னாலும் கேட்போர் இன்றி
புதைக்கின்றோம் நெஞ்சினுள் மூடி
புரியாதோ வாழ்வின் மந்திரம்
கொல்லாத உணர்வின் ஏக்கம்
கொள்கின்ற நிஜத்தில் மறையும்
கூட்டியும் கழித்தும் பார்க்கும் கணக்கு
சரியாய் முடியுது எரியும் சிதையில்
கையளவு மண்ணெடுத்து
கலந்து கொஞ்சம் நீருற்றி
பிசைந்தெடுத்த களிமண்ணில்
பிடித்து வைத்த மனிதபொம்மைகள்
நினைவுகளை விற்று விட்டு
நீதிதனை விட்டு விட்டு
நெஞ்சம் நிறைய அள்ளி
வஞ்சம் கொண்ட பூமியிது
கனிவு கொண்ட உள்ளங்களைக்
காயப்படுத்தி பார்க்க எண்ணி
கயமை எனும் சாயம் பூசி
கலந்துறவாடும் சொந்தங்கள்
தர்மம் என்னும் எடைதனை
தாராசு எனும் இதயத்தில்
நிறுத்துப் பார்த்து வாழ்ந்திடும்
நியாயமான உள்ளங்கள் பல
நிம்மதி என்னும் அமைதியை
நிழலினுள் தொலைத்திட்டு
நிஜம் கொடுத்த வேதனையால்
நீராக கண்களால் உகுக்கின்றார்
போனால் போகட்டும் போடா
பூமியே பாவிகள் இராஜ்ஜியம்
பாவியர் உறவுகள் இனியும்
பாதிக்க வேண்டாம் எமையே
இவ்வளவுதான் உலகம் மனிதா
இவ்வளவேதான் உலகம் என
இதயத்தை ஆற்றிக் கொஞ்சம்
இமைகளை இன்றாவது மூடிவிடு