31 August 2009
செய்திகள்
தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி நேற்றையதினம் இந்திய மத்திய அரசிடம் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் நலன்கள் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இந்த வகையில் வடக்கில் மோதல்களின்போது இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான மேலதிக நிவாரண உதவிகளை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், தற்போது இந்தியா மேற்கொள்ளும் உதவிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் போதுமானதாக இல்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
31 August 2009
செய்திகள்
அம்பாறை மாவட்டம் இங்கினியாகலைப் பிரதேசத்தில் போலிக் கச்சேரியொன்றினை நடத்தி வந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இங்கினியாகலைப் பொலீசாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்படி கச்சேரி சுற்றிவளைக்கப்பட்டு குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த போலிக் கச்சேரியிலிருந்து போலியாகத் தயாரிக்கப்படும் பிறப்பு சான்றிதழ், விவாகப் பதிவுகள், கல்விச் சான்றிதழ் என்பனவற்றைக் கைப்பற்றியுள்ளதுடன், நிர்வாக சேவை அதிகாரிகளின் போலி இறப்பர் முத்திரைகளையும் பொலீசாரினால் மீட்கப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட பெண் இங்கினியாகலையைச் சேர்ந்தவரென்று கூறப்படுகின்றது.
31 August 2009
செய்திகள்
காலி மாவட்டம் யக்கலமுல்லைப் பிரதேசத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் இருந்து பெருந்தொகையான பணம் இன்று அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொள்ளைச் சம்பவம் இனந்தெரியாதவர்களால் இன்று அதிகாலை 5.30மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனால் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பில் இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லையென்றும் தெரிவித்த பொலீசார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
31 August 2009
செய்திகள்
சுமார் 26லட்சம் ரூபாய்க்கும் அதிக தொகையை கொள்ளையடித்த ஒருவர் வட மத்திய மாகாண பொலீசார் நடத்திய சோதனையின்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், இவரிடமிருந்து ரி56 ரக துப்பாக்கிக்கான தோட்டாக்களும், 9மி.மீற்றர் ரக துப்பாக்கியின் தோட்டாக்களும் உள்ளிட்ட இன்னும் பல ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் இவரிடமிருந்து கையடக்கத் தொலைபேசியை மீள்நிரப்புவதற்கான 11ஆயிரத்து 700ரூபா பெறுமதியான அட்டைகளும் பொலீசாரினால் மீட்கப்பட்டுள்ளன.
31 August 2009
குறுஞ்செய்தி, செய்திகள்
அம்பலாங்கொடைப் பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரைத் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நான்கு பொலீஸ் உத்தியோகத்தர்களுக்கும் இன்று இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த வர்த்தகரை தாக்கிய நான்கு பொலீசாருக்கும் இரத்தினபுரி, பதுளை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருப்பதாக அல்பிட்டி பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
31 August 2009
செய்திகள்
அனுராதபுரம் கல்கமுவ பகுதியில் இன்று இடம்பெற்ற வீதிவிபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் இருவரும் வைத்தியர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். பலியான ஒரு வைத்தியர் அனுராதபுரம் கடற்படை வைத்தியசாலையிலும், மற்றைய வைத்தியர் குருநாகல் வைத்தியசாலையில் கடமையாற்றியவரென்றும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். இவர்கள் பயணித்த வாகனம் லொறியொன்றுடன் மோதியதில் விபத்துக்குள்ளானதாகவும் நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து லொறிசாரதி கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
31 August 2009
செய்திகள்
பாடசாலை விடுமுறைகளை முன்னிட்டு பதுளை மாவட்டத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளின் வருகை அதிகரித்துள்ளது. பதுளை மாவட்டத்திலுள்ள நீர் வீழ்ச்சிகள், புனித ஸ்தலங்கள் உள்ளிட்ட மேலும் பல இடங்களைப் பார்வையிடுவதற்காகவே கடந்த சில நாட்களாக உல்லாசப் பிரயாணிகளின் வருகை அதிகரித்துள்ளது. துண்கிந்த, தியலும, ராவணா, பம்பரகந்த ஆகிய நீர்வீழ்ச்சிகளிலும், முதியங்கனை, மகியங்கனை விகாரை ஆகிய புனித ஸ்தலங்களிலும் உல்லாசப் பிரயாணிகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
31 August 2009
குறுஞ்செய்தி, செய்திகள்
இரத்தினபுரி மாவட்டம் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் இன்று ஒட்டியநிலையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தங்காலைப் பிரதேசத்தைச் சேர்ந்த 30வயதுடைய தாய்க்கே இந்தக் குழந்தைகள் பிறந்துள்ளன. இதற்கிடையில் இந்தக் குழந்தைகள் ஏழு மாதங்களிலேயே பிறந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
30 August 2009
செய்திகள்
1990ம் ஆண்டு தொடக்கம் புலிகளின் விடுதலைக்கு புணர்வாழ்வு என்ற பெயரில் இயங்கியவர்கள்இ பணம் சேர்த்தவர்கள்இ பாடசாலைகள் நடத்தியவர்கள்இ சமூகத்தில் பலருக்கு பட்டம் கொடுத்தவர்கள்இ புலவர்கள்இ கல்விமான்கள் என்றவர்கள் பலர் ஆனால் அவர்களுக்கு இதயசுத்திகள் இல்லாது பணத்தை மட்டும் குறிவைத்து முன்னின்றார்கள். இதனால் இனியாவது சுவிசர்லாந்து தமிழர்களை ஏமாற்றிவாழ எண்ணாது உழைத்து உண்ண எண்ணுங்கள். இல்லையேல்இ பல பிரச்சனைக்கு முகம்கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்படுவீர்கள் என்று பலர் கருத்து தெரிவித்து வருவதை „ஈரனல்“ பகிரங்கமாக வெளியிடுகின்றது. “புலம் பெயர் சமூகம் என்பது ஈழத் தமிழினத்தின் ஒரு பிரிக்க முடியாத பகுதிஇ ஆனால் அது முழுமையான ஈழத்தமிழ் வடிவம் கொண்டதல்ல. மேலை நாட்டு வாழ்வு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான தலைமுறையை உருவாக்கியிருக்கிறது“ என்ற கருத்து கிளம்பியதால் நாம் ஒருபார்வையாளராக இருக்காதுஇ தமிழர்கள் என்று இதயசுத்தியுடன் இருக்வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம். 
30 August 2009
செய்திகள்
சர்வதேச நாணய நிதியத்திடம் நிபந்தனையின்றி கடன்பெற்றுக்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கருத்து உண்மைக்கு புறம்பானவை என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார் நாட்டில் தற்Nபுhது தலைதூக்கியுள்ள வெளிநாட்டு சக்திகளின் பொருளாதார பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அனைத்து தேசப்பற்றாளர்களும் இணைந்துகொள்ளவேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். எந்தவிதமான நிபந்தனையும் இன்றி 2.6மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை சர்வதேச நாணய நிதியத்திடம் கடனாகப் பெற்றுக்கொண்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது உண்மையில் மக்களை ஏமாற்றும் நோக்கில் இவ்வாறான பிரச்சாரங்களை அரசாங்கம் மேற்கொண்டுவருவதாக விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார். பதவி ஆசை காரணமாக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய உள்ளிட்ட அமைச்சர்கள் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
30 August 2009
செய்திகள்
தான் எந்த சூழ்நிலையிலும் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார் நான் ஒரு இராணு வீரன் அரசியல்வாதி அல்ல நான் இராணுவக்கடமையிலிருந்து ஓய்வுபெற்ற பிற்பாடு ஒரு சாதாரண இலங்கை பிரஜையாக வாழ விரும்புகிறேன் இராணுவத்தில் இருந்த காரணத்தால் வாழ்க்கையில் இழந்த சந்தோஷமான காலங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்று அவர் ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் தெரிவிக்கையில் நான் அரசியலில் வெகுவிரைவில் ஈடுபடபோகிறேன் என்று வெளியாகியிருக்கும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை நான் அரசியலில் ஈடுபடபோகிறேன் என்று எந்தப் பத்திரிகைகளுக்கும் மின்னஞ்சல் மூலம் அறிக்கைகள் அனுப்பிவைக்கவில்லை முப்படைகளின் பிரதான அதிகாரியாகப் பொறுப்புடன் உயர் பதவி வகிக்கும் நான் அப்படியொரு அறிக்கையைப் பத்திரிகைகளுக்கு அனுப்பும் அளவுக்கு முட்டாள் அல்ல எனக்கு அரசியலில் பிரவேசிக்கும் எண்ணமோ நோக்கமோ கிடையாது எனது பாதுகாப்பு குறைக்கப்பட்டிருக்கிறது என்று வெளியாகியிருக்கும் செய்திகளிலும் உண்மை இல்லை என்றார்.
30 August 2009
செய்திகள்
கொழும்பு மற்றும் சுற்றுப்புறங்களில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் குண்டு வெடிப்புக்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் எனக் கருதப்படும் எட்டுப்பேரை கைது செய்துள்ளதாக கொழும்பு பயங்கரவாத தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டம் வெலிவேரிய பகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளேயின் படுகொலை மற்றும் அக்குரஸ்ஸ கொடபிட்டியவில் நடைபெற்ற குண்டுவெடிப்பு போன்ற பாரிய சம்பவங்களில் இக்குழுவிலுள்ளவர்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெளிவாகியுள்ளது. வெள்ளவத்தையில் அண்மையில் கைதாகி தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டுவரும் ஒருவர் வழங்கிய தகவலின்படி இந்த எட்டுப்பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு சில ஐரோப்பிய நாடுகளிலுள்ள புலி முக்கியஸ்தர்களுடன் நெருங்கிய தொடர்புள்ளதென்றும் தெரிய வருகிறது. புலிகளுக்கு உதவிய முன்னாள் கம்பஹா மாவட்ட பொலீஸ அத்தியட்சகரும் வெள்ளவத்தையில் கைதானநபர் கொடுத்த தகவலுக்கமையவே கைது செய்யப்பட்டாரெனவும், இப்போது கைதான எட்டுப்பேரும் அவருடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளனரென்றும் தெரிய வந்துள்ளது.
30 August 2009
செய்திகள்
இலங்கையர்களுக்கு விஸா வழங்கப்படும் போது யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் பிரித்தானியா விஷேட கவனம் செலுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் பிரித்தானியா விஸாகோரி விண்ணப்பிப்போர் யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பிலும் தகவல்களை வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என பிரபல சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. யுத்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தால் அதுதொடர்பாக தகவல்களை அவர்கள் வெளியிட வேண்டும் என சுட்டிக் காட்டப்படுகிறது இலங்கையின் பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராக மனித உரிமைமீறல் மற்றும் யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் பரவலான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது மேலும் இலங்கையின் உயர் அரசஅதிகாரிகள் சிலருக்கு அண்மைக்காலமாக பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் விஸா வழங்க மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.
30 August 2009
செய்திகள்
பரித்தானியாவின் செனல்4 தொலைக்காட்சி சேவை அண்மையில் வெளியிட்ட வீடியோ காட்சிகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டவிரோத கைதுகள் மற்றும் படுகொலைக்கான பிரதிநிதி பிலிப் ஆல்ஸ்டன் தெரிவித்துள்ளதாக ஏஎப்பி செய்தி வெளியிட்டுள்ளது அதில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது குறித்த வீடியோக் காட்சிகளின் நம்பகதன்மை தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது இலங்கை அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரித்துள்ள போதிலும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததென அவர் தெரிவித்துள்ளார் எனவும் விசாரணைகளின் மூலம் உண்மைத்தகவல்கள் வெளியிடப்பட்டால் இலங்கை அரசாங்கம் மீதான சர்வதேச சமூகத்தின் நம்பிக்கை வலுப்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிகிறது குறித்த வீடியோ காட்சிகள் பாரிய மனிதஉரிமை மீறல்களை விதந்துரைப்பதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
30 August 2009
செய்திகள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசின் வெற்றிகளைச் சித்திரிக்கும் வகையில் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க அரச தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆரியரட்ண ஆதுகல ஏற்பாடு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கு முன்னோடியாக 2ம் இராஜசிங்க மன்னனை ஒத்த கதாபாத்திரத்தில் மஹிந்த ராஜபக்ஷவைச் சித்திரித்து இறுவட்டு தயாரிக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது. பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் புத்தி கீர்த்தி சோ இத்திரைப்படத்தின் தயாரிப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இத்திரைப்படத்திற்கு 90 கோடிரூபா செலவிடப்படும் என்றும் மேலும் தெரியவந்துள்ளது.
30 August 2009
செய்திகள்
தென் மாகாணசபைத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளை பிரதான அரசியல் கட்சிகள் யாவும் ஆரம்பித்துள்ளன. தெற்கிலிருந்து ஆரம்பிப்போம் என்ற தொனிப்பொருளுடன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தமது பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இதற்கிடையில் தெற்கினூடாக நாட்டைப் புதுமைப்படுத்துவோம் என்ற தொனிப்பொருளுடன் ஜே.வி.பி தனது பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளது. அடுத்தமாதம் முதலாம் திகதிமுதல் தமது பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பிக்கவிருப்பதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி தனது பிரச்சாரத் தொனிப்பொருளை எதிர்வரும் புதன்கிழமை வெளிப்படுத்துமென அக்கட்சி தெரிவித்துள்ளது.
30 August 2009
செய்திகள்
தமிழகத்திலுள்ள அகதி முகாம்களில் இருந்து 500ற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளதாகவும் கடந்த இருமாத காலப்பகுதியில் இவர்கள் நாடு திரும்பியுள்ளதாகவும் சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் வீ.கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
29 August 2009
செய்திகள்
படையினரால், தடுத்து வைக்கப்பட்டிருந்த சிலர் கொல்லப்படுவதாக குற்றஞ்சாட்டி அண்மையில் வெளியாகியிருக்கின்ற வீடியோ காட்சிகள், இலங்கையில் இடம்பெற்றிருக்கக் கூடிய போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச ஆணைக்குழு ஒன்றின் விசாரணை அவசியம் என்பதை கோடிகாட்டுவதாக, ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த பலவருடங்களாக தொடர்ந்த இரு தரப்புக்கும் இடையிலான போரின்போது இரு தரப்பினாலும், போர்சட்டங்கள் மீறப்பட்டதாக முறைப்பாடுகள் பல வந்தாலும், அங்கு சுயாதீன கண்காணிப்பாளர்கள் எவரும்செல்ல அனுமதிக்கப்படாத நிலைகாரணமாக அவை குறித்த உறுதியான தகவல்களை பெறமுடியாது இருந்துவந்துள்ளது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஆகவே இரத்தக்களரி மிகுந்த இலங்கை போரில் இடம்பெற்ற குற்றங்கள் குறித்து ஆராய சுயாதீனமான சர்வதேச விசாரணை ஆணையம் ஒன்று தேவை என்றும் அது வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே, ஊடகங்களில் வெளியான இந்த வீடியோ ஒளிக்கீற்று போலியானது என்று மறுத்திருக்கின்ற இலங்கை அரசாங்கம், இது குறித்த செய்தியை முதலில் வெளியிட்ட சானல் 4 நிறுவனத்துக்கு எதிராக பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்யப் போவதாக கூறியுள்ளது. இது குறித்து இராஜதந்திர ரீதியிலான முறையான கண்டனத்தை பிரித்தானிய அரசாங்கத்திடம் தெரிவிக்கவிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரான அநுர பிரியதர்சன யாப்பா கூறியுள்ளார்.
29 August 2009
செய்திகள்
மீனவர் வலைகளிலிருந்து தப்பிச்செல்லும் உடல் அமைப்பு கொண்ட பல்லி மீன்கள் மன்னார் வளைகுடா பகுதியில் அரிதாகக் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படும் அரிய வகை உயிரினங்களில் பல்லி மீனும் ஒன்று. பல்லியைப் போன்று உடல்அமைப்பு கொண்ட இவை, மற்ற மீன்களைப்போல் உடலமைப்பை ஒத்திருந்தாலும், செயலில் வித்தியாசமானவை. இந்த மீன்கள் வலைகளில் சிக்குவதில்லை. நெருங்கிவரும் ஆபத்தை உணரும் தன்மை இதற்கு உண்டு. எனவே வலைகளில் அகப்படாது இது தப்பித்துக்கொள்ளும். கடலின் ஆழ்பகுதியில் காணப்படும் பல்லி மீன்களை, மன்னார் வளைகுடா பகுதியில் காண்பது தற்போது அரிதாக உள்ளதாகக் கூறப்படுகின்றது. எனினும் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தும்வேளை, அவ்வப்போது இவை பிடிபடுகின்றன. வெளிநாடுகளில் அதிகமாகக் காணப்படும் இவ்வகை மீன்கள், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு இடம்பெயர்பவை. இந்த மீனைத் தேடிக் கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்குப் பெரும்பாலும் ஏமாற்றமே மிஞ்சும். மீன்களை உண்டுவாழும் சில கடல்வாழ் உயிரினங்களே, இவற்றின் அழிவுக்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வகை மீன்களைக் காக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அதனால பெரிய அளவில் பயன் கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகின்றது.
29 August 2009
செய்திகள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக ராஜீவ் காந்தி படுகொலை குறித்த விசாரணைக்கும் பல்துறை கண்காணிப்பு முகவர் அமைப்பு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது என புதிடில்லி செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாடுகளை இந்திய அரசு மேலும் ஒரு வருட காலத்திற்கு தடை செய்துள்ளது. இந்த அமைப்பின் காலம் கடந்த மே மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில் மூன்று மாதத்திற்குப் பின்னர் மீண்டும் அதற்கு ஒரு வருட நீடிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் இந்த நிலையிலேயே பல்துறை கண்காணிப்பு விசாரணை அமைப்பின் அதிகாரிகள் விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து ஆராய்வதற்காகவும் மேலதிக தகவல்களைப் பெறுவதற்காகவும் விரைவில் இலங்கைக்கு வரவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன