2ம் ஆண்டு நினைவஞ்சலி… மயிலப்பன் லட்சுமி
28 February 2010 செய்திகள்
அமரர் மயிலப்பன் லட்சுமி
அமரர் மயிலப்பன் லட்சுமி
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்க ஒதுக்கீடு தொடர்பான பணியில் தேர்தல்கள் செயலகம் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக அதன் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
வேட்பாளர்களின் விருப்பு இலக்க ஒதுக்கீடு இன்று உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்படுமென்று தகவல்கள் வெளியாகியிருந்த போதும் அது தொடர்பான பணிகள் நிறைவு பெறவில்லை.
கூடிய விரைவில் வேட்பாளர் விருப்பு இலக்கங்கள் மாவட்ட ரீதியாக தேர்தல்கள் செயலகத்தினூடாக அனுப்பி வைக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கைப் பெண்களை சுற்றுலா விசாக்கள் மூலம் சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று திட்டமிட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் குழுக்கள் தொடர்பாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக இலங்கை வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது. இதுபோன்ற துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி தப்பிவந்த பெண் ஒருவர் இதுதொடர்பாக தகவல் வழங்கியுள்ளதாக இலங்கை வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கிறது. இதுதொடர்பாக விசாரணைகளை செய்யும் பொறுப்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கிறது. பெண்களை ஒன்றுதிரட்டி தொழில் பெற்றுத் தருவதாக கூறி தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டு இந்த குழுக்கள் பெண்களை கீழ்தரமான முறையில் நடத்துவதாகவும் இவ்வாறான துன்புறுத்தலுக்குள்ளாகிய பெண் ஒருவர் அந்தக் குழுக்களிடம் இருந்து தப்பிவந்து சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் தஞ்சமடைந்து முறைப்பாடு செய்த நிலையில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கிறது. இந்த பெண் வழங்கியுள்ள தகவலின் அடிப்படையில் இதுதொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு;ள்ளது எவ்வாறாயினும் சிங்கப்பூருக்கு சுற்றுலா விசாக்கள் மூலம் சென்று அங்கு தொழில் செய்வதற்கான சட்டரீதியான அங்கீகாரம் இல்லையெனவும் இவ்வாறான குழுக்கள் மீது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் சிங்கப்பூருக்கு தொழில் பெற்றுத்தரும் நிறுவனங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ளுமாறு வேலைவாய்ப்பு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மன்னார் கடற்பரப்பில் கனிய எண்ணெய் அகழ்வுக்கான ஆய்வு நடவடிக்கைகளை அடுத்த மாதமளவில் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்திய நிறுவனமொன்றின் ஊடாகவே இந்த ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாக குறித்த கடல் எல்லையின் கடல்சூழல் மற்றும் அலையின் வேகம் ஆகியன தொடர்பாக ஆராயப்படவுள்ளது. அதன்படி எதிர்வரும் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்கு முன்னர் பரீட்சார்த்தமாக மூன்று கிணறுகளை தோண்டுவதற்கு குறித்த இந்திய நிறுவனம் எதிர்பார்த்துள்ளது. இதனடிப்படையில் 3000 சதுர கிலோமீற்றர் கடற்பரப்பில் முதற்கட்ட கனிய எண்ணெய் அகழ்வுக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
களனிய பிரதேசத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சார மேடையொன்றில் தோன்றிய ஆழும் கட்சியின் அமைச்சர் மேவின் சில்வா எதிர்கட்சி மற்றும் ஆழும் கட்சியினராகிய நாம் எவ்விதத்திலும் வன்முறைகளில் ஈடுபடாது தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதே நேரம் நாம் இருவரும் சேர்ந்து அன்னப்பறவையினருக்கு எம்பிரதேசத்தில் இடமளிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார். அன்னப்பறவை என அவர் ஜெனரல் பொன்சேகா , ஜேவிபி கூட்டை குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு எதிராக இன்று கண்டியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. ஹெல உறுமய கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன. கொழும்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மனோ கணேசன் கண்டிக்கு வரவேண்டாம் என அவர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரனின் யாழ்ப்பாண அலுவலகத்தின்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வேனில் அங்கு சென்றிருந்தவர்கள் கற்களால் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருப்பதாக சுரேஸ் பிறேமசந்திரன் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தள்ளார். நேற்றிரவு 8.30அளவில் இடம்பெற்ற இத்தாக்குதலில் அலுவலக கூரைக்கு பாரிய சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு, நல்லிணக்கம் என்பவற்றுடன் கூடிய புதியதோர் இலங்கையைக் கட்டியெழுப்ப முஹம்மது நபி அவர்களால் போதி க்கப்பட்ட சகோதரத் துவமும் கைகொடு க்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இதன் மூலம், இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கும் உதவ முடியுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மீலாத் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது :-
இலங்கை முஸ்லிம்களுக்கு இன்றைய தினத்தில் இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இன்று அவர்கள் உலகம் முழுவதும் உள்ள சகோதரர்களோடு இணைந்து மீலாதுன் நபியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். முஹம்மது நபி பிறந்த தினமான இன்றைய தினம் முஸ்லிம்கள் அவரின் போதனைகளை நினைவு கூரும் ஒரு தினமாகும். சமாதானம், நல்லிணக்கம், கருணை, சுயநலமின்மை, தர்மம் என்பன பல உயர் விழுமியங்களை புனித நபி அவர்கள் தனது போதனைகள் மூலம் முன்வைத்தார்.
இலங்கையில் மீலாதுன்நபி விழா தேசிய நிகழ்வாகக் கொண்டாடப்படுகின்றது. இம்முறை இந்தத் தேசிய கொண்டாட்ட ங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாவில் இடம்பெறுகின்றது. அங்குள்ள முஸ்லிம் மக்களின் சமய மற்றும் கலாசாரச் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து இந்தக் கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன. இலங்கை முழுவதும் ஜனநாயகம், மீள ஸ்தாபிக்கப்பட்டு சமாதானமும் நிலைநிறுத் தப்பட்டுள்ள நிலையில் அமைதியான சூழலில் இம்முறை முஸ்லிம்கள் மீலா துன் நபியைக் கொண்டாடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய முக்கிய தினத்தில் இலங்கை முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு நான் எனது மனப்பூர்வ மான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள் கிறேன். அத்தோடு சமாதானம், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் சகிப்புத்தன்மை என்பவற்றை சகல சமூகங்கள் மத்தியிலும் கட்டியெழுப்பவும் அவற்றை ஸ்திரப்படுத்தவும் தீவிர பங்களிப்பை வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வுஆஏPயின் மட்டக்களப்பு மாவட்ட வேட்புமனுவை நேற்றுக்காலை கட்சி தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா, மட்டக்களப்பு மாவட்ட த.ம.வி.பு (வுஆஏP) கட்சியின் தலைமை வேட்பாளர் அ.செல்வேந்திரன் ஆகியோர் கையளித்தார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் வுஆஎp சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் விபரங்களாவன, அருணாசலம் செல்வேந்திரன் (தலைமை வேட்பாளர்), தம்பராசா பேரின்பராசா, தயாழினி திரவியம், இரத்தினசிங்கம் மகேந்திரன், அழகரெத்தினம் பாலகிருஸ்ணன், தம்பிராஜா ஈஸ்வரராஜா, கணபதிப்பிள்ளை மோகன், ராஜவரோதய மணிவண்ணன ஆகியோராவர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு அமோகவெற்றி பெற்றாரோ அதேபோல வன்னியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொதுத்தேர்தலில் அதிகூடிய ஆசனங்களை பெறுகின்ற கட்சியாக திகழப்போகின்றது என வன்னி மாவட்ட பொதுசன ஐக்கிய முன்னணி முதன்மை வேட்பாளர் றிசாட் பதிவூதீன் தெரிவித்துள்ளார். மூவினத்தையும் சேர்ந்தவர்கள் எம்மை ஆதரிக்க முன்வந்துள்ளார்கள் எங்களுடைய வேட்புமனுவில் முன்னாள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வன்னி எம்பி இருவர் இடம்பெற்றுள்ளனர் எனவும் கூறியுள்ளார். வேட்புமனுவை தாக்கல்செய்த பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் ரிசாத் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 30 வருடகால போரினால் பாதிக்கப்பட்டுள்ள எங்களுடைய மக்கள் பிரதேசம் மீண்டும் கட்டி எழுப்புவதற்கு வெற்றிபெற்றுள்ள ஜனாதிபதி; இன்னமும் எட்டு வருடம் ஆட்சியில் இருக்கபோகின்றார் அவருடன் இணைந்து செயல்படுவதன் மூலம் அபிவிருத்தியை காணலாம்; என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. மக்கள் எம்முடன் கைகோர்த்து நிற்கவேண்டும். ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணி வன்னி மாவட்டத்தில் மூன்றுக்கு குறையாத ஆசனங்களை பெறும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. புலிகள் இயக்கத்தின் சிரேஸ்ட தலைவர்களின் ஒருவரான கருணாஅம்மான் கூட ஜனநாயக வழிக்குவந்து எங்களுடைய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர் பதவியை பெற்று அழிந்து போயிருந்த கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப முன்வந்துள்ளார் கடந்த 30வருட போருக்கு தமிழ்சமூகத்தை மாத்திரம் குறைகூறமுடியாது சகல தரப்பிலும் பிழைகள் நடந்துள்ளது. எங்களுடைய ஜனாதிபதிமீது தமிழ்மக்களுக்கு நல்ல நம்பிக்கை உள்ளது. அதனால்தான் கூட்டமைப்பு முன்னாள் எம்பிகள் சிவநாதன் கிசோர், கனகரத்தினம் இந்த தேர்தலில் எங்களுடன் இணைந்து இப்பிரதேச சமூகத்திற்கும் வன்னி மாவட்டத்திற்கும் சேவைசெய்ய தேர்தல் களத்தில் இணைந்துள்ளனர். சகல இனமக்களையும் அரவணைத்து செல்கின்ற எங்களுடைய அதிமேதகு ஜனாதிபதியாக இருக்கின்றார். அவரது கரங்களை பொதுத்தேர்தலில் நாம் பலப்படுத்த வேண்டும என்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மேலும்தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்திற்கு வாக்கெடுப்பின் மூலம் 196 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக 7,625 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 24அரசியல் கட்சிகளிலும் 312சுயேச்சைக் குழுக்களிலும் இவர்கள் களமிறங்கியுள்ளார்கள். 22தேர்தல் மாவட்டங்களுக்கும் அரசியல் கட்சிகளினூடாக 3859 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களில் 3691 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் பணிகள் நேற்று நண்பகலுடன் நிறைவடைந்தன. ஆட்சேபம் தெரிவிப்பதற்காக பிற்பகல் 1.30 மணிவரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முறையாகப் பூர்த்திசெய்யப்படாததால், கட்சிகள் தாக்கல்செய்த 46 வேட்புமனுக்களும் 35 சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும், வீரவசனம் பேசி எதனையும் சாதிக்கமுடியாது என்ற காரணத்தினால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கட்சியில் இணைந்து வன்னி பொதுத்தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளேன் என முன்னாள் தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய பொதுசன ஐக்கிய முன்னணியின் வேட்பாளருமாகிய சிவநாதன் கிசோர் தெரிவித்துள்ளார் முதன்மை வேட்பாளர் றிசாட் சகிதம் மனுவை கையளி;த்த பின்னர நேற்று ஊடகத்துறையினர் மத்தியில் பேசியபோது மேற்கண்டவாறு; கிசோர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஊடுருவல் காரணமாக முன்னாள் 15கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் கூட்டமைப்பில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. அதனால்தான் நாம் அடுத்த கட்ட நடவடிக்கையாக ஜனாதிபதியுடன் இணைந்து போரினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன் தேர்தலில் போட்டியிடுகின்றேன். இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றம், வேலைவாய்ப்பு, வன்னி பல்கலைக்கழகம் அமைத்தல் போன்றவை முக்கிய குறிக்கோளாக வைத்து அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுக்க ஜனாதிபதியுடன் இணைந்துள்ளேன். எங்களுடைய கூட்டமைப்பு எம்பிகள் பலர் கொழும்பிலும் வெளிநாடுகளிலும் தங்களுடைய காலத்தை கழித்தவர்கள். தமது தொகுதி மக்களை மறந்து செயல்பட்டவர்கள். போரினால் பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் வவுனியா வந்துபோது நான் ஜனாதிபதியின் அனுமதிபெற்று அவர்களுடைய குறைபாடுகளை அறிவதற்கு முகாம்களுக்கு சென்றேன். இது குற்றமா என கேட்க விரும்புகின்றேன். முன்னாள் வன்னி எம்பி ச.கனகரத்தினமும் பொதுசன ஐக்கிய முன்னணி வன்னி பட்டியலில் தேர்தலில் போட்டியிடுகிறார் என்றும் சிவநாதன் கிஷோர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கென புளொட்; சார்பில் நங்கூரம் சின்னத்தில் அதன் தலைமை வேட்பாளரான பெனடிக்ட் தனபாலசிங்கம் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். பெனடிக்ட் தனபாலசிங்கம், மயில்வாகனம் நிஸ்கானந்தராஜா, பொன்னம்பலம் செல்லத்துரை, நல்லதம்பி சண்முகநாதன், நாகமணி சிவராஜா, செல்லத்துரை கணேசலிங்கம், முருகேசு கிருபானந்தன், செல்லத்துரை தங்கராஜா ஆகியோர் புளொட்; சார்பில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தின் இன்று புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் இன்றையதினம் முற்பகலில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமை வேட்பாளரான ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் திருநாவுக்கரசு சிறீதரன் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். திருநாவுக்கரசு சிறீதரன், கந்தையா சிவராஜா, நாகமணி நீக்கிளாஸ் அரியரட்ணம், காளிகுட்டி ஜெயகுமாரன், வசந்தநாதன் சிவநாதன், ராஜேந்திரன் செல்வராஜா, கைலாயபதி பகிரதன், துரைராஜா மகாலிங்கம், ராஜரட்ணம் கோணேஸ்வரன், தில்லைநாதன் தங்கவேலு, அரியகுட்டி யோகன், சின்னத்தம்பி தங்கராஜா ஆகியோர் ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) கட்சியின் சின்னமான மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
அரசியல் என்பது ஒரு கெட்ட தொழில்தான் ஆனாலும் அதற்கு நேர்மை முக்கியம். அதற்காக பொய்புரட்டு கூடாது என்று தமிழர் விடுதலைக்கூட்டணி தலைவர் வீ ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். மனிதனுக்கு நாக்கு முக்கியமாகும். எம்பிகள் என்றால் பொய்புரட்டு சொல்லாம் என்று யாரும் எண்ணக்கூடாது. கடந்த காலத்தில் தமிழ் தேசியகூட்டமைப்பு எம்பிகள் கடந்த ஆறுவருடம் பொய்புரளி செய்து அரசியலை நடத்தினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணி வன்னி தேர்தலுக்கு போட்டியிட நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தபின்னர் வவுனியா செயலகத்தில் செய்தியாளர்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் வீ.ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கள்ளவாக்கு போட்டுவந்த 22 கூட்டமைப்பு எம்பிகள் தமது கடமையினை சரிவர செய்யவில்லை. போரினால் மக்கள் விரட்டப்பட்;டபோது இவர்கள் மௌனம் சாதித்து வந்தார்கள்ஃ அரசுடன் பேசி பல விடயங்களை தீர்க்க நிறைய சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தது. நான் ஒருகாலமும் அரசுடன் இணைந்து செயல்பட்டதில்லை. அரசுக்கு சொல்லவேண்டிய அனைத்தினையும் அந்தவேளையில் சொல்லி வந்துள்ளேன். கண்டனம் தெரிவிக்கவேண்டிய நேரத்தில் அதனையும் செய்ய தவறவில்லை. ஊடகங்கள்தான் நான் ஒரு அரச ஆதரவாளன் என பிரச்சாரம் செய்தது. அரசு செய்த குற்றங்களையும் வெளிகொண்டு வந்துள்ளேன். மக்களுடைய நலன்கருத்தியே செயல்பட்டவன். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நட்டஈடு வழங்கவேண்டும் என அரசிடம் கேட்டுள்ளேன். மக்கள் இழந்த அனைத்தினையும் பெற்றுக் கொடுப்பேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதனை வழங்குமாறு ஜனாதிபதியினை கேட்க இருக்கின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈழ தேசிய ஜனநாயக முன்னணி (ஈ.என் டி.எல்.எப்.) என்பன வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை நேற்று வவுனியா தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளித்தன. இதேவேளை ஈ.என்.டி.எல்.எப். என்ற ஈழ தேசிய ஜனநாயக முன்னணியும் இருளன் ஜெயந்தியை முதன்மை வேட்பாளராகக் கொண்டு வன்னி மாவட்டத்தில் களமிறங்கியுள்ளது. த.வி.கூட்டணி மற்றும் ஈ.என்.டி.எல்.எப். வேட்பாளர் பட்டியலில், வன்னி மாவட்டம்: 1. இருளன் ஜெயந்தி (முதன்மை வேட்பாளர்) 2. கே.விநாயகமூர்த்தி 3. ஆர்.கருப்பையா 4. ஏ.ராமசாமி 5. கே.குணரட்னம் 6. வீ.கனகராஜா 7. ஆர்.கணேசன் 8. கே.முருகையா 9. என். சோமசுந்தரம் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
நாட்டில் தற்போது அமைதி நிலை காணப்படுவதாலும் பனை உற்பத்திப் பொருட்களின் சந்தை வாய்ப்பை அதிகரித்து வருவதாலும் அவற்றின் உற்பத்தி பொருட்களை அதிகரிக்க பனை அபிவிருத்திச் சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது.
தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகின்ற சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்கள் ஏதாவது ஒரு பனம் உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்து செல்வதால் இப்பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆதனால் சந்தைத் தேவைக்கேற்றவாறு உற்பத்திப் பொருட்கள் இல்லை என்றும் தாராளமான மூலப்பொருட்கள் இருந்தும் உற்பத்தியாளர்களை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஏ9 வீதி திறப்பதற்கு முன்னர் யாழ்.மாவட்டத்தில் மட்டுமே விற்பனை செய்யக் கூடியதாக இருந்த பனம் உற்பத்திப் பொருட்கள் தற்போது தென்பகுதிக்கும் எடுத்துச் செல்லப்படுவதாலும் இதன் சந்தை வாய்ப்பு அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அரசியலில் நுழையும் நோக்கத்துடன் அரசியல் கட்சிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள இராணுவத்தளபதி மற்றும் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஆகிய அதிகாரபூர்வ பதவிகளின் அந்தஸ்தை பயன்படுத்தியமை காரணமாகவே ஓய்வுபெற்ற ஜெனரல் சரத்பொன்சேகாவை கைதுசெய்து அவர்மீது நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் ஐ.ரீ.என். தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். அரசியலில் தலையிடாமை மற்றும் பங்கேற்காமை காரணமாக இலங்கை மற்றும் இந்திய இராணுவங்களுக்கு ஆசியாவில் பொறுப்புள்ள படையினர் என்ற நல்ல மதிப்பு உள்ளது. எனினும் பொன்சேகா அவரது சேவைக்காலத்தில் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆதரவு பெற்றுக்கொள்ளும் நோக்கில் இராணுவத்தளபதி மற்றும் கூட்டுப் படைகளின் பிரதானி ஆகிய பதவி அந்தஸ்தை சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளிடம் செல்வாக்கு பெறுவதற்காக பயன்படுத்தியுள்ளதுடன் ஒரு சில அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இராணுவ தளபதியின் அதிகாரபூர்வ வாசஸ்தலத்தையும் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறான அவரது தவறான நடத்தை மற்றும் இராணுவ ஒழுங்கினை மீறியமை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சேவையில் இருக்கும்போது எவரும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்ற கருத்தை இளம் இராணுவவீரர்களிடமும் ஏனைய நிலைகளில் உள்ள இராணுவ அதிகாரிகளிடம் ஏற்படுத்திவிடக்கூடும் இதனால் தான் சரத்பொன்சேகா கைது செய்யப்பட்டார். சரத் பொன்சேகா அவரது அதிகாரபூர்வ இராணுவ பதவிகளின் அந்தஸ்தையும் இராணுவ வளங்களையும் அவரது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள பயன்படுத்தியமைக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன என்றும் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்தரும் பொதுக்குழு உறுப்பினருமான திரு.சக்தி அவர்களை திருமலையிலுள்ள அவரது வாசஸ்தலத்தில் சந்தித்த அதிரடி நிருபர் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் ஈரோஸ் அமைப்பின் நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேட்டி கண்டு அது தொடர்பிலான விபரங்களை அனுப்பி வைத்துள்ளார் அதன் விபரங்கள் இங்கு தரப்படுகின்றன..
ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்தரும், பொதுக்குழு உறுப்பினர்களுள் ஒருவருமாகிய திரு சக்தி அவர்களை சந்திப்பதற்காக திருகோணமலையிலுள்ள அவரது வாசஸ்தலத்திற்கு நாம் சென்றபோது அவரது நண்பர் ஒருவர் ஊடாக நாம் அழைத்துச் செல்லப்பட்டோம். திரு சக்தி அவர்களை சந்தித்த நாம் பின்னர் அங்கு அவரது மனைவி குழந்தைகளையும் காணக்கூடியதாக இருந்தது. இதன்போது சக்தி அவர்கள் தனது மகனுக்கு லோரன்ஸ் கபிலா என்னும் கொங்கோ நாட்டு அதிபரின் நாமத்தைச் சூட்டப்பட்டிருந்ததையும் அறியக்கூடியதாக இருந்தது. அதேபோன்று அவரது மூன்றாவது மகளுக்கு தமிழ் என இவர் பெயர் சூட்டியிருந்தமையையும் அறிந்து கொண்டோம். தமிழ் என்ற பெயருடைய இவரது மூன்றாவது மகள் இவரை மக்கள் என அழைத்ததையும் நாம் கேட்கக்கூடியதாக இருந்தது. இதுகுறித்து அவரிடம் ஏன் தங்களை மக்கள் என்றழைக்கிறார்? என்று கேட்டதற்கு, நாம் அடிக்கடி மக்கள், மக்கள் என்று கதைப்பதால் எனது மகள் என்னை மக்கள் என்று கூப்பிடுவது வழமையென்று தெரிவித்தார். 
ஈழமக்கள் ஜனநாயககட்சி யாழ்மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது என அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இன்று யாழ் செயலகத்தில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான எட்டுபேரின் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈ.பி.டி.பி கட்சியின் சார்பில் எட்டு வேட்பாளர்களும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒருவரும் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் சார்பில் மூன்றுபேரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றிலைச்சின்னத்தில் போட்டியிடுவதாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் மாத்திரம் ஈழமக்கள் ஜனநாயககட்சி (ஈ.பி.டி.பி.) போட்டியிடுகின்றமை குறிப்பிடதக்கது இதேவேளை கடந்த சிலநாட்களுக்கு முன்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தமது கட்சி வீணை சின்னத்திலேயே போட்டியிடும் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது வெற்றிலைச் சின்னத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கின்றமை குறிப்பிடதக்கது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சமன்திலகசிறி (வயது39) என்ற பெயருடைய விவசாயியை இங்கினியாகல பொலிஸார் கைது செய்திருந்தனர் ஆனால் அவரது உடல் அடுத்தநாள் காலை கால்வாய் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டது பொலிஸாரே சமனைக் கொலை செய்து கால்வாயில் போட்டுவிட்டதாக இங்கினியாகல கிராமமக்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஆனால் இந்தக் கொலைக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர் சடலத்தை நேரில் பார்த்து ஆரம்பகட்ட விசாரணைகளை நடத்திய அம்பாறை மாவட்ட மேலதிக நீதவான் சமிந்த சம்பத் ஹேவாவாசம் நேர்மையான விசாரணை நடத்தவில்லை என்றும் சமனை மூன்று பொலிஸார் கைதுசெய்து சென்றபோது மாவட்ட நீதிபதி தமது வீட்டில் தூங்கி கொண்டு தான் இருந்தார் என்றும் கிராமவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சமன் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் தமக்கு கிடைத்த ஒரு முறைப்பாட்டின் அடிப்படையில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தே அவரை கைது செய்துள்ளனர். அடுத்தநாள் காலையில் வரச்சொல்வதா அல்லது உடனும் கைதுசெய்வதா என்று குழம்பிய பொலிஸார் இறுதியில் தம்முடன் அழைத்துச் சென்றுள்ளனர் எனவே அவர்களைப் பின்தொடர்ந்து உறவினர்களும் சென்றதாக தெரிகிறது. ஆனால் பொலிஸார் சென்ற மோட்டார் சைக்கிள்களில் அப்பகுதியிலுள்ள அணை ஒன்றுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்ததை கண்ட இவர்கள் சமன் குறித்து பொலிஸாரிடம் விசாரித்தும் பதில் எதுவும் பெறப்படவில்லையாம் ஆனால் அடுத்தநாள் காலையில் சமனின் உடல் கால்வாயில் மிதக்க கண்டுள்ளனர் எனவே பொலிஸார் தான் இக்கொலையை செய்துள்ளனர் என்று உறவினர்கள் தெரிவிக்க இவர்களை நீதிமன்றத்திற்கு வருமாறு மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் தெரியவருகிறது.