யாழ்ப்பாணத்தில் எச்எஸ்பிசி (HSBC) வங்கியின் கிளை

செய்திகள்

எச்எஸ்பிசி (HSBC) வங்கியின் கிளையொன்று அடுத்த வாரம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
போர் முடிவுக்கு வந்துள்ளதையடுத்து வடக்கில் பெருமளவு நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அவர் மேலும் கூறியுள்ளார்.
கடந்த வருடம் மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கில் இலங்கை வங்கிகள் புதிய கிளைகளை அமைக்க ஆரம்பித்தன. வடக்கில் 73 புதிய வங்கிக் கிளைகளைத் திறப்பதற்கு இலங்கை மத்திய வங்கி அனுமதி அளித்திருந்தது.
இதனடிப்படையில் இலங்கை வங்கிகளே இதுவரை தமது கிளைகளை வடக்கில் திறந்து வந்தன. அடுத்த வாரம் முதலாவது வெளிநாட்டு வங்கியான எச்எஸ்பிசி வங்கி தனது கிளையை திறக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்ட நிலையில் வன்னி மாவட்டங்களான கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் நாட்டின் 62வது சுதந்திரதினம் அனுஷ்டிக்கப்பட்டது.

செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலகம் உட்பட வன்னியிலுள்ள திணைக்களங்கள் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் படைமுகாம்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு சுதந்திரதின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டன. அந்தந்த நிகழ்வுகளில் திணைக்களத்தலைவர்கள் அரச அதிகாரிகள் படை அதிகாரிகள் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திரதின நிகழ்வுகளை சிறப்பித்ததாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி உட்பட துணுக்காய் மல்லாவி கனகராயன்குளம் பூநகரி மற்றும் மாங்குளம் பிரதேசங்களிலும் சுதந்திரதின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராணுவ சட்ட திட்டங்கள் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது

செய்திகள்

தண்டனை, இம்சை, இராணுவ சட்ட திட்டங்கள் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. அர்ப்பணிப்புள்ள செயற்பாடுகள், ஊழல் மோசடியற்ற சேவை மூலமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தமது அரசியல் பலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக எச்சந்தர்ப்பத்திலும் எத்த கைய தீர்மானத்தையும் மேற்கொண்ட தில்லையென தெரிவித்த ஜனாதிபதி, தாய்நாட்டின் ஒரு அங்குல நிலத்தையாவது காட்டிக் கொடுக்கப் போவதில்லையெனவும் தெரிவித்தார்.
இலங்கையின் 62வது சுதந்திரதின தேசிய நிகழ்வு கண்டி தலதா மாளிகை வளாகத்தில் நேற்றுக் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.
ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண சிங்களவர்கள் விரும்பும் தமிழரிடம் அதிகாரத்தை வழங்கவும்-தயான் ஜயதிலக்க..!

செய்திகள்

ட்ரான்ஸ்கரன்ட் இணையத்தளத்தில் கட்டுரையொன்றை எழுதியுள்ள ஜெனிவாவுக்கான முன்னாள் இலங்கையின் பிரதிநிதி தயான் ஜயதிலக்க, இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு சிங்களவர்கள் விரும்பும் தமிழ் தலைவர் ஒருவரிடம் அதிகாரத்தை வழங்குவதன்மூலம் மாத்திரமே இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணலாம் என குறிப்பிட்டுள்ளார். இந்த தமிழ் தலைவர் யார் என எண்ணுவதில் சிரமமில்லை எனவும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் என தயான் ஜயதிலக்க மறைமுகமாக கூறியுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கில் நடைபெறும் தேர்தல்களில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெறும் என கருதப்படுவதால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எப்படியேனும் வடமாகாணத்தின் அதிகாரத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என தயான் ஜயதிலக்க வெளிப்படுத்தி யுள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் சிங்கள மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை ஏற்றுக் கொண்;;;;;டுள்ளனரா என ஜயதிலக்க உறுதியாக கூறவில்லை. சிங்கள மக்கள் விரும்பும் தலைவரிடம் மாத்திரம் அரசியல் அதிகாரத்தை வழங்க வேண்டும் என கூறியுள்ளதன் மூலம் தயான் ஜயதிலக்க தமிழ் தலைவரை தெரிவு செய்யும் அதிகாரத்தை சிங்களவர்களுக்கு வழங்கியுள்ளார்.

17வது திருத்தச் சட்டமூலம் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது -தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு..!

செய்திகள்

17வது திருத்தச்சட்ட மூலம் இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தீர்வாக அமையாதென தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார் 11மணித்தியாலங்கள் கூடி ஆராயப்பட்டதன் பின்னர் இந்த 17வது திருத்தச்சட்டமூலம் அமுல்படுத்தப்பட்டதாகவும் இந்த சட்டமூலத்தில் பயனில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டமூலத்திற்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 215பேர் ஆதரவளித்தபோதிலும் இதனை நடைமுறைப்படுத்தும் சரியான பொறிமுறை குறித்து கவனம் செலுத்தப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார் 1978ம் ஆண்டு அரசியல் சாசனத்தில் 17வது திருத்தச்சட்டமூலம் ஆகியன அவசரமாக ஏற்படுத்தப்பட்டதாகவும் இதனால் இதன் பலன்கள் குறித்து நம்பிக்கை கொள்ளமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். உரிய முனைப்புடன் குறித்த அரசியல் சாசன திருத்தங்கள் அமுல்படுத்தப்பட்டிருந்தால் பல்வேறு நன்மைகள் கிட்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.