1 March 2010
செய்திகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் அமைச்சரான மேர்வின் சில்வா நேற்று களனியில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் கூட்டமொன்றில் கலந்துக்கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் அன்னத்தின் செயற்பாட்டாளர்கள் களனிக்கு வரக்கூடாது எனக் கூறிச்சென்றுள்ளார். இதன்போது ஐ.தே.கட்சியின் களனி அமைப்பாளரான பெவன் பெரேராவை கட்டித்தழுவி நாட்டிற்கு முன்மாதிரியாக செயற்படுவோம் எனத் தெரிவித்துள்ளதுடன் அன்னத்திற்கு களனியில் இடமில்லை எனவும் கூறியுள்ளார் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் களனி அமைப்பாளர் பெவன்பெரேரா தெரிவிக்கையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பிலான பிரச்சாரக்கூட்டம் ஒன்று நேற்றுகாலை 10.00மணியளவில் களனி டயர் சந்தியில் அமைந்துள்ள எனது வீட்டில் இடம்பெற்றது இதன்போது எதிர்பாராத விதமாக அமைச்சர் மேர்வின் சில்வா கூட்டத்தில் கலந்துக்கொண்டு நாம் பிரச்சனை இல்லாமல் சமாதானமாக கௌரவமான அரசியலில் ஈடுபடுவோம் நமது இந்த எடுத்துக்காட்டு நாட்டிற்கும் ஏனைய அரசியல்வாதிகளுக்கும் முன்னுதாரணமாக அமையட்டும் என தேர்தல் பிரச்சார மேடையில் கட்டாயமாக ஐ.தே.கட்சியின் சார்பில் நீங்கள் கலந்துக்கொள்ளவேண்டும் ஆனால் அன்னத்தின் செயற்பாட்டாளர்கள் களனிக்கு வரக்கூடாது எனக் கூறிச்சென்றுள்ளார்
1 March 2010
செய்திகள்
கல்வியைகொன்ற அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த சுகாதாரத்துறை அமைச்சராக நியமித்தால் நோயாளர்களையும் கொன்றுவிடுவார் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலின்பின்னர் அமையவுள்ள அரசாங்கத்தின் அமைச்சர்கள் மீண்டும் மக்களுக்கு சேவைசெய்வார்களா என எதிர்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது காலியில் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட சம்மேளன கூட்டத்தின்போது அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். சிலர் ஒருவேள மாத்திரமே உண்பவர்களாக உள்ளனர் கடன் இல்லாதவர்கள் என யாரும் இல்லை இந்த நிலையில் வாழ்வதற்கு சிரமாகவே காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார் இதற்கிடையில் கல்வித்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. முடியுமான மாணவர்கள் மாத்திரமே மேலதிக வகுப்புகளுக்கு செல்கின்றனர் சுகாதார துறையும் அவ்வாறே காணப்படுகிறது அத்துடன் விவசாயிகளுக்கு இலாபம் பெறக்கூடியதாக இல்லை இதேநிலையே தேயிலைக்கும் மீன்பிடித்துறைக்கும் காணப்படுகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் இந்த நிலையில் 2004ம் ஆண்டில் இருந்து அமைச்சர்களாக இருந்தவர்கள் அடுத்தபொதுத்தேர்தலின் பின்னர் வெற்றிபெற்றால் அவர்கள் மக்களுக்கு எவ்வாறு சேவை வழங்குவார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார் அமைச்சர்களின் எண்ணிக்கையை 35ஆக குறைக்கப்படவுள்ளது எனின் மக்களுக்கு சேவைசெய்ய சிறந்தவர்கள் உள்ளனரவா எனவும் அவர் தெரிவித்துள்ளார் கல்வியை கொன்ற சுசில் பிரேம்ஜயந்தவை சுகாதாரத்துறை அமைச்சராக நியமித்தால் நோயாளர்களையும் கொன்றுவிடுவார் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
1 March 2010
செய்திகள்
பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்க ப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் அமைச்சரவை நாட்டு க்குச் சுமையற்றதாக அமைய வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அபே ட்சகர்கள் ஏகமனதாகத் தீர்மான மொன்றை நேற்று முன்தினம் நிறைவேற்றினர்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அனுராதபுரம் ஜனாதிபதி வாசஸ்தலத்தில் நடைபெற்ற வைபவத்தின் போதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அபேட்சகர்கள் உறுதிப் பிரமாணம் செய்யும் நிகழ்வில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்படி யோசனையை முன்வைத்தார். இந்த யோசனையை அமைச்சர் சி. பி. ரட்நாயக்கா வழிமொழிந்தார். அதனை தொடர்ந்து இந்த யோசனை ஏகமானதாக நிறை வேற்றப்பட்டது.
1 March 2010
செய்திகள்
நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளைப்பெறுவதற்காக மூன்று பிரதான அரசியல் கட்சிகளும் இனவாதத்தை பரப்பிவருகின்றன இதனால் சிறுபான்மை மக்கள் ஓரங்கட்டப்படுவதுடன் தமது உரிமைகளுக்காக மீண்டும் போராட வேண்டி அபாயநிலை உருவாகப்போகிறது என இடதுசாரி விடுதலை முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். இலங்கை நாடாளுமன்றத்திற்கு சிறுபான்மை இன மக்களின் அரசியல் பிரதிநிதித்துவங்கள் நிச்சயமாக இடம் பெறவேண்டும் இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் செயற்படக்கூடாது எனவும் அவர் கூறினார் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை தெளிவுபடுத்துகையிலேயே விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் இன்று இலங்கையில் பொதுமக்கள் அரசியல் ரீதியாகவும் இன ரீதியாகவும் பிரிந்துள்ளனர் இதற்கு பிராதான காரணம் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளே தேர்தல்களில் வெற்றிபெறுவதற்காக இனவாதத்தை அரசியல் இலாபப் பொருளாக உள்நாட்டு அரசியல்வாதிகள் தேர்தல் மேடைகளில் பயன்படுத்துகின்றனர். ஏதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கூட்டணி மற்றும் ஜே.வி.பியின் ஜனநாயக முன்னணி ஆகிய மூன்று பிரதான அரசியல் கட்சிகளுமே தமது தேர்தல் மேடைகளில் தமிழ் சிங்கள மக்களிடையே பேதத்தை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றன இன ஐக்கியம் இன ஒற்றுமை என்பன வெறும் வார்த்தைகளாக காணப்படுகிறது வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழும் பொதுமக்களின் அரசியல் பிரச்சனைகளுக்கு விரைவான தீர்வுகளை முன்வைக்கவேண்டும் மீண்டும்பிரிவினைவாத இனவாத தூண்டுதல்களுக்கு இடமளிக்ககூடாது ஆனால் பிரதான அரசியல் கட்சிகள் இனவாதத்தை அரசியல் இலாபப்பொருளாக கொள்கின்றன என்றார்
1 March 2010
செய்திகள்
பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஐ. தே. மு. அபேட்சகர்களிடம் ஐ. தே. க. தலைவர் திகதியிடப்படாத இராஜினாமாக் கடிதங்களைப் பெற்றிருப்பது போல் நாம் ஒரு போதும் பெறமாட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் அனுராதபுரத்தில் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் சகல அபேட்சகர்கள் மீதும் எமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. அவர்களைப் போன்று திகதியிடப் படாத இராஜினாமாக் கடிதங்களைப் பெறுவது எமது கொள்கையுமல்ல என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார் . 