2 March 2010
செய்திகள்
எம்மை களனிக்கு வரவிட மாட்டேன் என்று சொல்வதற்கு மேர்வின் சில்வாவிற்கு உரிமையோ தகுதியோ இல்லை என ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் ஐக்கிய தேசிய கட்சியின் மேடையில் தோன்றி ஐக்கிய தேசியகட்சி களனியில் பிரச்சாரம் நடத்தலாம் எனவும் ஆனால் அன்னம் கட்சியை களனிக்குள் அனுமதிக்கப் போவதில்லை எனவும் மேர்வி;ன் சில்வா தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்தின் ரவுடிக் கும்பலின் அச்சுறுத்தலுக்கு பயப்படுபவர்கள் நாம் அல்ல என்றும் திட்டமிட்டபடி தமது தேர்தல் நடவடிக்கைகள் களனியிலும் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2 March 2010
செய்திகள்
எமது கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் (தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின்) நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தெற்கின் தொழிலாளர்கள் வர்க்கத்துடன் இணைந்து தமது அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியும் என்ற நம்பிக்கையிலேயே எம்முடன் இணைந்து போட்டியிட முன்வந்துள்ளனர் என இடதுசாரி விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இடதுசாரி விடுதலை முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன மேற்படி தெரிவித்தார். தற்போது நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற பிரச்சினைகள் அனைத்தும் மறைக்கப்பட்டும் மறக்கப்பட்டும் உள்ளன இவற்றுக்கான சரியான தீர்வவினை தரக்கூடியது இடதுசாரிக் கொள்கைகளே என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
2 March 2010
செய்திகள்
வடக்கில் கண்ணிவெடியகற்றுதல் மற்றும் மீள் குடியேற்ற நட வடிக்கைகளுக்காக சீன அரசாங்கம் 50 மில்லியன் ரூபா பெறுமதியான இயந்திரங்கள், கூடாரங்கள் மற்றும் உபகரணங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. நேற்றுக் கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றதுடன் சீனத் தூதுவர் யென் சிங் ருவென் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவிடம் இந்த இயந்திர உபகரணங்களை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
அத்துடன் வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைக்கு உதவும் வகையில் சீன அரசாங்கம் 6252 கூடாரங்களையும் 34 கனரக இயந்திரங்களையும் அதனோடு சம்பந்த ப்பட்ட உபகரணங்களையும் நேற்று வழங்கியதுடன் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அதனையும் சீனத் தூதுவரிடமிருந்து பொறுப்பேற்றுக் கொண்டார். இவற்றை சீனக்குடியரசு மக்கள் இலங்கையில் மீள் குடியேற்றப்படும் மக்களுக்காக அன்பளிப்புச் செய்துள்ளனர்.
2 March 2010
செய்திகள்
வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகள் ஊடாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இதேநேரம் சுமார் முப்பது வருடங்கள் நாட்டுக்குப் பெரும் தலையிடியாக இருந்த பயங்கரவாதத்தை குறுகிய காலத்தில் ஒழித்துக்கட்டி துண்டாடப்பட்டிருந்த நாட்டை மீளவும் ஒன்றுபடுத்தியுள்ளோம். பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் எமது பதவிக் காலத்தில் இங்கு ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
வீதி அபிவிருத்தி மின்னுற்பத்தித் திட்டங்கள் துறைமுகங்களின் அபிவிருத்தி என பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும் நாட்டில் என்ன தான் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அவற்றின் மூலம் மக்கள் மேம்பாடு அடையாவிட்டால் அந்த அபிவிருத்திகளால் எந்தப் பயனுமே இல்லை. மக்களின் உள்ளங்கள் மேம்பட வேண்டும். அது அவர்களை சிறந்த நற்பண்பாளர்களாக மேம்படச் செய்யும் அத்தோடு மக்களின் வாழ்க்கைத் தரமும் வளர்ச்சி அடையும். இவை எதிர்கால சமுதாயத்திற்குச் சுபீட்சத்தைப் பெற்றுக் கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.
2 March 2010
செய்திகள்
பாராளுன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து எதிர்கட்சி பாராளுன்ற உறுப்பினர்கள் யாவரதும் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டிருந்தது. இதை எதிர்த்து 17 முன்னாள் பாராளுன்ற உறுப்பினர்கள் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்று முன்னாள் பாராளுன்ற உறுப்பினர்களான பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக பரிசீலிக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியிருந்தது. இதனடிப்படையில் கட்சிகளின் தலைவர்கள் , பொதுச் செயலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என பொலிஸ் மா அதிபர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.