தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்கள் மருத்துவமனைக்கு நேரடி விஐயம்!

செய்திகள்

dsc09371.jpgஜனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்கள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை பார்வையிடுவதற்காக இன்றைய தினம் மதியம் மருத்துவமனைக்கு நேரடியாகவே விஐயம் செய்தார்.
அங்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் செயலாளர் நாயகம் அவர்களை ஆரத்தழுவி அவரது உடல் நிலைகளை விசாரித்துக் கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்கள் செயலாளர் நாயகம் அவர்களை கவனித்து வரும் வைத்தியர்களிடமும் அவரது உடல் நிலை குறித்து கேட்டறிந்ததோடு தொடர்ந்தும் விஷேட கவனிப்புக்களை செலுத்துமாறும் ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்கள் வைத்தியர்களுக்கு பணிப்புரை வழங்கினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளர் ஐ.ம.சு.முன்னணியில் இணைந்தார்.

செய்திகள்

kithisiri-01.jpgஐக்கிய தேசியக்கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளராக செயற்பட்டுவந்த கித்சிறி குமார பத்திரண ஜனாதிபதிக்கு தமது ஆதரவினை தெரிவித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டுள்ளார்.
இரண்டாயிரமாம் ஆண்டு முதல் ஐ.தே.கட்சியில் மேற்படி பதவி வகித்த கித்சிறி குமார பத்திரண அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டபோது அக்கட்சியின் முக்கியஸ்தர் எஸ்.பி.திசாநாயக்காவும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் பிள்ளையானின் கட்சி தனித்து போட்டியிட காரணமானவர் கருணா

செய்திகள்

karunapillayan.jpgபொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது அரசாங்கத்தின் கட்சியுடன் சேர்ந்து போட்டியிடாமல் தனித்து போட்டியிடுவதாக வேட்பு மனுத்தாக்கல் செய்ததிலிருந்து அக்கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையானை மீண்டும் தேசத்துரோகியாக அரசாங்கம் பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பின்னணியில் பிள்ளையானுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பை பாதுகாப்பு அமைச்சு நீக்கியுள்ளது. தற்போது ஒருசில பொலிஸார் மட்டுமே பிள்ளையானுக்கு வழங்கப்பட்டிருப்பதானது அவரை படுகொலை செய்வதற்கு வழிவகுத்துக் கொடுக்கும் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது என தமிழ் மக்கள் விடுதலைப் புலியினர் தெரிவித்துள்ளதாக இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் அரசாங்க கட்சியுடன் கூட்டுச்சேராமல் பிள்ளையான் தனியாகவே போட்டியிடுவதாக வேட்புமனுத்தாக்கல் செய்யும் தி;ட்டம் கருணாவினால் டக்ளஸ் தேவானந்தா ஊடாக பிள்ளையானுக்கு தெரிவிக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தமது கட்சியும் தனித்து நின்றே தேர்தலை எதிர்நோக்கவுள்ளதாக டக்ளஸ் தேவானந்தா கூறி பிள்ளையானை தவறாக வழிநடத்தி விட்டு தாம் கடைசியில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடும் முடிவை அறிவித்துள்ளார் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

பொன்சேகாவை விடுவிக்கக் கோரி கொரியாவில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு

செய்திகள்

arppattam.jpgஜெனரல் பொன்சேகா பலவந்தமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொரியாவின் சியோல் நகரில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாளர்கள் இந்த செயலை கண்டித்துள்ளனர். ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட முன்னர் தேவாலயம் ஒன்றின் பணியாளர் எனக் கூறிக் கொண்ட பெண் ஒருவர் காவல்துறையினரைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தை நிறுத்த மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர் ஒருவர் அருகில் சென்று ஜனாதிபதியை எப்படி திட்டியேனும் தூதுவருக்கு கடிதமொன்றை கொடுங்கள் அவ்வாறு ஜனாதிபதிக்கு எதனை செய்தாலும் பரவாயில்லை ஆர்ப்பாட்டத்தை நிறுத்துங்கள் எனக் கூறியுள்ளார். பின்னர் ஆர்ப்பாட்டத்தை நிறுத்த முடியாது எனவும் சரத்பொன்சேகா விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அதற்காக இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்வதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர் இதனையடுத்து ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் கூட்டத்திற்கு பின்புறமாக சென்று ஆர்ப்பாட்டத்தை குழப்பியதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டவர்களை புகைப்படம் எடுத்ததுடன் வீடியோ ஒளிப்பதிவு செய்ததாகவும் ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவசரகால சட்டத்தை நீடிக்க ஜனாதிபதி கைச்சாத்து…

செய்திகள்

mahinda2.jpgஅவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கான வர்த்தமாணி அறிவித்தலில் சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கைச்சாத்திட்டுள்ளார் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்காக பாராளுமன்றம் மார்ச் 9 ஆம் திகதி விசேடமாக கூடவுள்ளது. பாராளுமன்றம் கடந்த பெப்ரவரி 09 ஆம் திகதி கலைக்கப்பட்டது. இந்நிலையில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளதால் அடுத்த வாரம் பாராளுமன்றம் விசேடமாகக் கூட்டப்பட்டு பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும்.
நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்புக் கருதி 1983 ஆம் ஆண்டு இந்த அவசரகாலச் சட்டம் முதலில் அமுல்படுத்தப்பட்டது. அது முதல் ஒவ்வொரு மாதமும் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடனேயே அது நீடிக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.