நிருபமா ராவ் நாளை இலங்கை வருகை..!

செய்திகள்

15nirupama.jpg.
இந்தியாவின் அயலுறவுச் செயலாளர் நிருபமா ராவ், இரண்டு நாள் பயணமாக நாளை இலங்கை வருகிறார். இந்தியாவின் அயலுறவுச் செயலர் பதவியை ஏற்றபின்னர் அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பதாலும், இலங்கையில் பொதுத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள இந்தச் சமயத்தில் அவர் இலங்கைக்கு வருவதாலும் இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
இலங்கையில் இந்தியத் தூதராகவும், தூதரகத்தின் முதலாவது செயலாளராகவும் பணியாற்றியவர் நிருபமா ராவ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தமிழர் பிரச்னைக்கான அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை அதிகாரப் பரவலாக்கல் யோசனைத் திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருகையில், நிருபமா ராவின் தற்போதைய வருகை மிகவும் முக்கியமானதாகும்.
நிருபமா ராவின் இலங்கை வருகை வழக்கமான இரு தரப்பு பரஸ்பர நலன் அடிபடையிலான கலந்துரையாடல் தொடர்பானதே என அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இலங்கை இனப்பிரச்னை விவகாரத்தில் தீர்க்கமான சில கொள்கை முடிவுகள் குறித்து பொதுத் தேர்தலுக்கு முன்னர் இலங்கை சூசகமாக தெரிவிக்க வேண்டும் என இந்தியா கருதுவதாகவும், புதுடெல்லியின் அந்த நிலைப்பாட்டை நிருபமா ராவ் தனது கொழும்பு விஜயத்தின் போது இங்குள்ள அதிகார வர்க்கத்திடம் அழுத்தம், திருத்தமாகத் தெரியப்படுத்துவார் எனவும் கூறபடுகிறது.

மீள்குடியமர்த்தப்பட்டோரை பார்வையிட ஆயர்களின் விசேட குழு வன்னிக்கு விஜயம்..!

செய்திகள்

wanni_war_welfare_camp.jpgவடக்கில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிடுவதற்கு ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயர்களின் விசேடகுழு நாளை வன்னி செல்லவுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார், குருநாகல், மட்டக்களப்பு, அனுராதபுரம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கத்தோலிக்க ஆயர்களே வன்னி செல்லவுள்ளனர். வன்னி செல்லும் இந்த ஆயர்குழு கிளிநொச்சி, முழங்காவில், விடத்தல்தீவு, இரணைமடு உட்பட பல இடங்களுக்குச் சென்று அங்கு வசிக்கும் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களைச் சந்திக்கவுள்ளனர். இதன்போது வன்னியிலுள்ள 1000குடும்பங்களுக்கு 2500ரூபா பெறுமதியான உப உணவுப்பொருட்களும், 500மாணவர்களுக்கு தலா 1000ரூபா பெறுமதியான உடைகள் மற்றும் கற்றல் உபகரணங்களும், 50மாணவர்களுக்கு சைக்கிள்களும், 200குடும்பங்களுக்கு சூரிய விளக்குகளும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

T.M.V.P யின் தேர்தல் பிரச்சாரம் அம்பாறையில் தீவிரம்..!

செய்திகள்

2095tmvp_logo_j.jpgநடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் T.M.V.P கட்சியானது கிழக்கு மாகாணத்தில் மாத்திரமன்றி தமிழ் மக்கள் வாழ்கின்ற குறித்த சில வெளி மாகாணங்களிலும் அதாவது வட மாகாணம் மற்றும் பொலநறுவை மாத்தறை போன்ற மாவட்டங்களிலும் போட்டியிடுகின்றது. கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை ஆகிய மாவட்டங்களில் மிகவும் பலத்த போட்டிகளுக்கு மத்தியில் போட்டியிடுகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் த.ம.வி.பு கட்சியானது மாவட்ட அமைப்பாளர் வி.சத்தியசீலன் தலைமையில் போட்டியிடுகின்றது. அம்பாறை மாவட்டத்திற்கான த.ம.வி.பு கட்சியின் தேர்தல் பிரச்சாரமானது மிகவும் தீவிரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. கட்யின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் த.ம.வி.பு கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சோ.புஸ்ப்பராசா, முதன்மை வேட்பாளர் வி.சத்தியசீலன், மற்றும் ஏனைய வேட்பாளர்கள் அனைவரின் அதரவாளர்கள் அடங்கிய குழுவினர் அம்பாறை மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் தங்களது பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
(05.03.2010) த.ம.வி.பு கட்சியின் மாகாணசபை உறுப்பினர் சோ.புஸ்ப்பராசா தலைமையில் நாவிதன்வெளி, வீரமுனை, சொறிக் கல்முனை, வேப்பையடி மல்வத்தை, மத்தியமுகாம் ஆகிய பிரதேசங்pகளில் மிகவும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.