6 March 2010
செய்திகள்
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாடுகளில் புகலிடம் கோருவோரை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடல் மார்க்கமாக சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதனை தடுத்து நிறுத்த கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் விசேட ரோந்து நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் முக்கிய கரையோரப் பிரதேசங்களை உள்ளடக்கும் வகையில் கரையோரப் பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். காலி மற்றும் கொழும்பு கடற்கரைகளில் தற்போது ரோந்துப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கரையோரப் பாதூப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி ரியர் அட்மிரால் தயா தர்மப்பிரிய தெரிவித்துள்ளார். ஒலுவில் கற்பிட்டி திருகோணமலை மன்னார் உள்ளிட்ட சகல பிரதேசங்களிலும் கரையோரப் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும் என அவர் குறிபிட்டுள்ளார்.
6 March 2010
செய்திகள்
மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் நேற்றையதினம் மாந்தை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கருங்கண்டல் மீள்குடியேற்றக் கிராமத்திற்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது அப்பிரதேசத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நடவடிக்கையினையும் அவர் ஆரம்பித்து வைத்துள்ளார். இதேவேளை அவர் திருக்கேதீஸ்வர ஆலய புனர்நிர்மாண வேலைத்திட்டங்களையும் பார்வையிட்டுள்ளார். இந்நிலையில் ஆலயத்தின் குறைபாடுகளையும் அவர் ஆலய நிர்வாகத்தினரிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
6 March 2010
செய்திகள்
ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா, தமது கணவரின் சார்பில் நாடு முழுவதிலும் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகத் கூறப்படுகிறது. வடக்கு - கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல பாகங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டமைப்பினால் நடத்தப்படும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளதாக அவர் கூறியுள்ளார். தற்போது சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது கணவரின் சார்பில் தாமே பிரசாரங்களை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நீதி, நேர்மை மற்றும் நியாயத்தை நாட்டில் நிலைநாட்டும் நோக்கில் தாம் செயற்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
6 March 2010
செய்திகள்
ஜெனரல் சரத்பொன்சேகாவிடம் இராணுவ நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான ஆரம்ப வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹ_லுகொல்ல இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளின்போது பெறப்பட்ட வாக்குமூலங்கள் குறித்த அறிக்கை எதிர்வரும் வாரமளவில் இராணுவத் தளபதியிடம் சமர்ப்பிக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பாக முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பிரதானியிடம் விசாரணைகளை மேற்கொண்டதாக வெளியான தகவல்களை அவர் நிராகரித்துள்ளார்.
6 March 2010
செய்திகள்
ஆஸ்திரேலியா வில் தொடர்ந்து இந்தியர்கள் மீது நடந்துவரும் தாக்குதல்களும், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான தொடரும் மனித உரிமை மீறல்களும் பெரும் கவலை தருவதாகவும், இவை கண்டனத்துக்குரியவை என்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நவநீதம்பிள்ளை கூறுகையில், ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. ஆஸ்திரேலிய நிர்வாகம், இந்தத் தாக்குதலின் மூல காரணம் என்ன என்பதைக் கண்டறிய வேண்டும்.
தேசிய அளவிலும், மாகாண அளவிலும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய அரசு மேற்கொள்ள வேண்டும். விசாரணை மற்றும் தண்டனைகளில் தீவிரம் காட்டப்பட வேண்டும். இதுபோன்ற வன்முறைகளைத் தடுப்பதற்கான வழிமுறைகள் காணப்பட வேண்டும்.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தொடர்ந்த%E
6 March 2010
செய்திகள்
இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்தின் தலைவர் தலமையிலான ஆயர்களின் உயர்மட்டக்குழுவினர் மாந்தை மேற்குப் பிரதேசம் உள்ளிட்ட வன்னிப் பெருநிலப்பரப்பு பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர். ஜனாதிபதியின் விசேட செயலனியின் அனுமதி கிடைக்கப்பெற்றிருக்கும் நிலையிலேயே இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் மேற்படி பிரதேசங்களுக்கான மூன்று நாள் விஜயத்தினை மேற்கொண்டு அப்பிரதேசங்களின் இயல்பு நிலை தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.
கத்தோலிக்க ஆயர் மன்றத்தின் தலைவரும் கண்டி மறைமாவட்ட ஆயருமான கலாநிதி வின்னி வெர்ணான்டோ தலைமையிலான ஆயர் குழுவினர் மன்னார் ஆயர் இல்லத்திற்கு நேற்றையதினம் விஜயம் செய்து பின் அங்கிருந்து மன்னார் ஆயர் அதிவணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையுடன் உயிலங்குளம் ஊடாக தமது விஜயத்தினை மேற்கொண்டிருக்கின்றனர். வன்னி பிரதேசத்தின் மீது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த மனிதாபிமான இராணுவ நடவடிக்கையின் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா உள்ளிட்ட நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்தவர்கள் தற்போது அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர். 