நிபுணர்கள் குழுவானது பான்கீ மூனுக்கே ஆலோசனை வழங்கவுள்ளது -அமைச்சர் போகொல்லாகம..!

செய்திகள்

pokilam.jpgஐ.நா செயலர் பான் கீ மூன் இலங்கையின் பிரச்சனைகள் மற்றும் போர்குற்றம் தொடர்பாக நியமிக்கவுள்ள நிபுணர்கள் குழு இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்காதெனவும் அது பான் கீ மூன் அவர்களுக்கே ஆலோசனை வழங்குமெனவும் வெளிவிவகார அமைச்சர் றோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். ஐனாதிபதிக்கும் பான் கீ மூனுக்குமிடையே நேற்று முன்தினம் காலை தொலைபேசி உரையாடல் இடம்பெற்றபோது இக்குழு தொடர்பாகவும் இலங்கை பிரச்சனை தொடர்பாகவும் ஆராயப்பட்டதாகவும் இக்குழு அரசுக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்படவில்லை எனவும் பான்கீ மூன் தெரிவித்ததாக போகொல்லாகம மேலும் தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகா சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்:அனோமா

செய்திகள்

anoma_fonseka.jpgதமது பிள்ளைகளுடன் தொலைபேசி ஊடாக உரையாட அனுமதி தருமாறு கோரி ஜெனரல் சரத் பொன்சேகா சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக அவரது பாரியார் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். தற்போது வெளிநாட்டில் தங்கியுள்ள தமது மகள்மாருடன் உரையாடுவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது.எனவே இக்கோரிக்கை நிறைவேறும் வரை சாகும் வரை உண்ணாவிரதத்தினை ஜெனரல் சரத் பொன்சேகா தொடரவுள்ளதாக அவரது பாரியார் அனோமா பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

அம்பாறை தமண பிரதேச சபைக்கு உழவு இயந்திரம் முதல்வரால் அன்பளிப்பு..!

செய்திகள்

img_3661-300×199.jpgஇன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சபை உப அலுவலகத்தில் வைத்து தமண பிரதேச சபைக்கான உழவு இயந்திரத்தினை தவிசாளர் விபுல ரத்நாயக்கவிடம் கையளித்தார், இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான சோ.புஸ்ப்பராசா, பூ.பிரசாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புலனாய்வுத்துறை இயக்குனர் விசாரணை செய்யப்பட்டதான செய்தியில் உண்மை இல்லை..!

செய்திகள்

no-no-no-no.jpgஇலங்கை இராணுவ புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் இயக்குனர் லக்ஸ்மன் குலுகல்ல தெரிவித்துள்ளதுடன் இவ்வாறான பொறுப்புணர்சியற்ற செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்த்துக்கொள்வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பாக புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக பதிலளித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன், லசந்த கொலை தொடர்பாக 17 இராணுவ அதிகாரிளும் 2 சிப்பாய்களும் விசாரணைக்குட்படுத்தப்பட்டதுடன் அவர்களில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் 6 தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொன்சேகா மீதான விசாரணைகள் முடிவடையும் தறுவாயை எட்டியுள்ளதாக தெரிவித்த அவர், சாட்சியங்களின் தொகுப்பு அடுத்தவாரம் இராணுவத்தளபதியிடம் கையளிக்கப்படும் எனவும் பணப்பரிமாற்றம் மற்றும் சில குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சிவில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் கூறினார்.
இராணுவப் புலனாய்வுத்துறை தடைசெய்யப்பட்டுள்ளதாக ஊடகவியாலளர் ஒருவர் கேட்டபோது மறுதலித்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட இராணுவப் பேச்சாளர் இராணுவப் புலனாய்வுத்துறையின் சிலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் இராணுவ நீதிமன்றில் ஜெனரல் பொன்சேகாவின் வழக்கு விசாரிக்கப்படும்போது ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா எனக் கேட்கப்பட்டபோது உலகில் எங்கும் அவ்வாறான நடைமுறை இல்லை எனவும் இது இராணுவத்தின் உள்வீட்டு விவகாரம் எனவும் தெரிவித்துடன், இது தொடர்பாக ஜெனரல் பொன்சேகா வேண்டுகொள் விடுத்தால் அதை இராணுவத் தளபதி பரிசீலிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

புலிகளின் 500முன்னாள் போராளிகளை உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு..!

செய்திகள்

manikfarm1.JPGவவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஊனமுற்ற முன்னாள் போராளிகளில் 500பேர் எதிர்வரும் தினங்களில் உறவினர்களிடம் ஒப்படைக்க இருப்பதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட இணைப்பாளர் கீதாஞ்சலி தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் வவுனியா அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் தற்போது இருப்பவர்கள் என்றும், இவர்கள் அனைவரும் இன்னும் சில தினங்களில் ஒப்படைக்கப்பட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா நிபுணத்துவக் குழு தேவையற்றது; பான்கீ மூனிடம் ஜனாதிபதி தெரிவிப்பு..!

செய்திகள்

mahinda21.jpgஇலங்கையின் யுத்தக் குற்றங்கள் பற்றி ஆராய்வதற்காக நிபுணர்கள் குழுவொன்றை ஐ. நா. செயலாளர் நாயகம் நியமிக்கத் தீர்மானித்துள்ளதை இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவது தேவையற்றதும், விரும்பத்தகாததுமான செயலென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியாகத் தெரிவித்துள்ளார். ஐ. நா. செயலாளர் நாயகம் பான்கீமூன் நேற்று முன்தினம் தொலைபேசி மூலம் ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு பேசினார். அதன்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட் சேபனையைத் தெரிவித்தாரென ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விவகாரம் தொடர்பாக ஆராய நிபுணர்கள் குழுவை நியமிப்பது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. இது விரும்பத்தகாத நடவடிக்கையென ஜனாதிபதி, ஐ. நா. செயலருக்கு எடுத்துக் கூறியதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இராணுவ நடவடிக்கை மூலம் பெரும ளவிலான மக்கள் ஏனைய சில நாடுகளில் கொல்லப்படுவதோடு, பாரிய மனித உரிமை மீறல்களும் நடந்த வண்ணமுள்ளன. அத்தகைய நாடுகள் மீது இப்படியான நடவடிக்கைகளை ஐ. நா. எடுக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்ட ப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொழும்பிலுள்ள ஐ. நா. அலுவலகம் எந்தவிதமான கருத்தையும் உடனடியாகத் தெரிவிக்கவில்லை.