மன்னாரில் மீள்குடியேறியோரின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு
7 February 2010 செய்திகள்மன்னார் மாவட்டத்தில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் மன்னார் மாவட்ட அதிகாரிகளுக்குமிடையில் இன்றுமுற்பகல் மன்னார் மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சந்திப்பின்போது மன்னார் மாவட்டத்தில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
