லசந்தவின் படுகொலை குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு கைதான சந்தேகநபருக்கு அழுத்தம் -சரத் பொன்சேகா குற்றச்சாட்டு
8 February 2010 செய்திகள்சண்டேலீடர் செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை குற்றத்தை ஒப்புக்கொள்ளகூறி அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். அதிகாரிகள் இந்தக்கொலை தொடர்பில் கெப்பிட்டிவெலனவிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் இந்தக் குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு அவரை வலியுறுத்தி வருவதாக சரத்பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். தமது ஆதரவாளரான இந்த அதிகாரியை ஒப்புக்கொள்ளச் செய்வதன் மூலம் தமக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்கவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக சரத்பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள கெப்பிட்டிவெலன தற்போது பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் மைத்துனர் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டு;ள்ளார். எனினும் இதனை மறுத்துள்ள மஹிந்த பாலசூரிய கைது செய்யப்பட்டுள்ள கெப்பிட்டிவெலன தமது தூரத்து சொந்தக்காரரே எனத் தெரிவித்துள்ளார்.
