மீள்குடியமர்த்தப்பட்டோரை பார்வையிட ஆயர்களின் விசேட குழு வன்னிக்கு விஜயம்..!
5 March 2010 செய்திகள்
வடக்கில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிடுவதற்கு ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயர்களின் விசேடகுழு நாளை வன்னி செல்லவுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார், குருநாகல், மட்டக்களப்பு, அனுராதபுரம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கத்தோலிக்க ஆயர்களே வன்னி செல்லவுள்ளனர். வன்னி செல்லும் இந்த ஆயர்குழு கிளிநொச்சி, முழங்காவில், விடத்தல்தீவு, இரணைமடு உட்பட பல இடங்களுக்குச் சென்று அங்கு வசிக்கும் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களைச் சந்திக்கவுள்ளனர். இதன்போது வன்னியிலுள்ள 1000குடும்பங்களுக்கு 2500ரூபா பெறுமதியான உப உணவுப்பொருட்களும், 500மாணவர்களுக்கு தலா 1000ரூபா பெறுமதியான உடைகள் மற்றும் கற்றல் உபகரணங்களும், 50மாணவர்களுக்கு சைக்கிள்களும், 200குடும்பங்களுக்கு சூரிய விளக்குகளும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
