சரத்பொன்சேகாவிடம் இராணுவ நீதிமன்ற விசாரணை தொடர்பில் வாக்குமூலம் பெறப்பட்டது-அரசாங்கம்..!
6 March 2010 செய்திகள்
ஜெனரல் சரத்பொன்சேகாவிடம் இராணுவ நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான ஆரம்ப வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹ_லுகொல்ல இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளின்போது பெறப்பட்ட வாக்குமூலங்கள் குறித்த அறிக்கை எதிர்வரும் வாரமளவில் இராணுவத் தளபதியிடம் சமர்ப்பிக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பாக முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பிரதானியிடம் விசாரணைகளை மேற்கொண்டதாக வெளியான தகவல்களை அவர் நிராகரித்துள்ளார்.
