மீள்குடியேற்ற அமைச்சர் மாந்தை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கருங்கண்டல் விஜயம்..!
6 March 2010 செய்திகள்
மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் நேற்றையதினம் மாந்தை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கருங்கண்டல் மீள்குடியேற்றக் கிராமத்திற்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது அப்பிரதேசத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நடவடிக்கையினையும் அவர் ஆரம்பித்து வைத்துள்ளார். இதேவேளை அவர் திருக்கேதீஸ்வர ஆலய புனர்நிர்மாண வேலைத்திட்டங்களையும் பார்வையிட்டுள்ளார். இந்நிலையில் ஆலயத்தின் குறைபாடுகளையும் அவர் ஆலய நிர்வாகத்தினரிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
