சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாடுகளில் புகலிடம் கோருவரை கட்டுப்படுத்த நடவடிக்கை..!
6 March 2010 செய்திகள்
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாடுகளில் புகலிடம் கோருவோரை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடல் மார்க்கமாக சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதனை தடுத்து நிறுத்த கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் விசேட ரோந்து நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் முக்கிய கரையோரப் பிரதேசங்களை உள்ளடக்கும் வகையில் கரையோரப் பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். காலி மற்றும் கொழும்பு கடற்கரைகளில் தற்போது ரோந்துப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கரையோரப் பாதூப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி ரியர் அட்மிரால் தயா தர்மப்பிரிய தெரிவித்துள்ளார். ஒலுவில் கற்பிட்டி திருகோணமலை மன்னார் உள்ளிட்ட சகல பிரதேசங்களிலும் கரையோரப் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும் என அவர் குறிபிட்டுள்ளார்.
